ஒஸ்தி

தபாங் முதல் பார்த்தவன் என்கிற முறையிலும் சிம்புவின் பெரும்பாலான படங்களைப் பார்த்தவன் என்கிற முறையிலும் என் ஒஸ்தி பற்றிய எதிர்பார்ப்பை, அது எப்படி வந்து தொலையும் என்ற என் எரிச்சலையும் பதிவு செய்யலாம் என்று ஆசை.

பொதுவாய் எனக்கு ரீமேக் படங்களின் மீதான நம்பிக்கை அதிகம் உண்டு, உலக அளவில் அருமையான படத்தை இன்னும் அருமையாய் ரீமேக் செய்கிறார்கள். தமிழிலிருந்து இந்திக்கோ இல்லை இந்தியில் தமிழிற்கோ செய்த ரீமேக் படங்கள் மட்டும் படு மொக்கையாய் இருந்துத் தொலைக்கிறது. Pride and Prejudice என் இந்த அருமை வகைக்கு உதாரணம், எத்தனை எத்தனை மாதிரியா Jane Austinன் இந்தக் கதையை எடுத்துவிட்டார்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அருமையானவை. Aishwarya நடித்ததை நான் பார்க்கலை. Jane Eyreன் BBC டெலிவிஷன் சீரிஸ் தான் இதுவரையிலும் அருமை என்று நினைத்துவந்தேன். தற்சமயம் வந்த Jane Eyre படம் இன்னும் subtle ஆக எடுக்கப்பட்டிருந்தது.

தபாங் எனக்குப் பிடித்திருந்தது, ஸ்விஸில் இருந்து இந்தி சினிமாவை ஒரு வட இந்திய வில்லேஜிற்கு நகர்த்திய பெருமை தபாங் பட இயக்குனருக்கு உண்டு. படம் simpleton என்றாலும் அதன் tone எனக்குப் பிடித்திருந்தது, Anurag Gashyapன் சகோதரர் அல்லவா. சல்மானின் நிறைய படங்கள் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தில் அவரின் மேனரிஸங்கள் நடை உடை பாவனை பிடித்திருந்தது, டைரக்டரின் பங்கு அதிகமிருந்திருக்கவேண்டும்.

இந்தப் படத்தை எப்படி எடுத்துத் தொலையைப் போறானுங்களோ என்கிற பயம் இப்பொழுதே வந்துவிட்டது. சிம்புவின் எது பிடிக்கிறதோ இல்லை அவருடைய பாடல்களைப் படமாக்கும் விதம் எனக்குப் பிடிக்கும். விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு ஒரு அற்புதம். அற்புதங்கள் எப்பொழுதாவது நடந்தால் தான் அற்புதம், இல்லையென்றால் அதன் மதிப்பு இல்லாமல் போய்விடும். டைரக்டர்களின் மதிப்பு இப்படித் தான் தெரிய வருகிறது, டாப்ஸியின் வந்தான் வென்றான் பார்த்துவிட்டு வாந்தியே வந்துவிட்டது. அத்தனை அசிங்கமாய் இருந்தாள் அந்தப் படத்தில். ஆடுகளத்தில் நடித்தவளா(சாரி வேற மாதிரி சொல்ல முடியாது) இவள் என்கிற எண்ணம் வராத பொழுதில்லை வந்தான் வென்றான் பார்த்த பொழுது.

ஒஸ்தி நன்றாக வரக்கூடாதென்பது என் எண்ணமல்ல, நான் சூடு கண்ட பூனை, என்னால் அப்படித்தான் பார்த்துத் தொலைய முடிகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s