காக்கா ‘பீ’ ரோட்டில் ஒரு காதல் கதை

“ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?”

இது நம்ம ஹீரோ, பேரு சுந்தர பாண்டியன் மனசுக்குள்ள பெரிய மதுரையை மீட்ட சுந்தரப் பாண்டியன்னு நினைப்பு, படிக்கிறது பன்னிரெண்டாவது. அப்பா எம்ப்ளாய், அம்மா ஹவுஸ் வொய்ஃப், ஒரே ஒரு தங்கச்சி பேரு ரமா பத்தாவது படிக்கிறாள்.

“இங்கப் பாருடா உனக்கு இவ்ளோதான் மரியாதை! இனிமேட்டும் கண்டத பேசிக்கிட்டு என் பின்னாடி வந்த போலீஸ்கிட்ட பிடிச்சிக் கொடுத்துறுவேன்.”

இது நம்ம ஹீரொயின், பேர் ரேஷ்மா. ரெண்டு வருஷத்துக்கு முன்னால் பார்க்கச் சகிக்காது, இப்ப என்னடான்னா ‘B’ செக்டர் பசங்கள்ள பாதி பேரு இவ பின்னாடி தான் சுத்தராங்ய, மீதி பாதி நம்ம ஹீரோவின் தங்கச்சி ரமா பின்னாடி. படிப்பில பூஜ்யம், வருஷாவருஷம் அவங்கப்பா சிபாரிசில மேலத்தூக்கிப் போட்டே பத்தாவது வந்துட்டா. சரி இப்ப மேற்சொன்ன சிச்சுவேஷனுக்கு.

பேக்ரவுண்ட் என்னான்னா, இப்படிப்பட்ட நம்ம ஹீரோயினி ரேஷ்மா பத்தாவது வந்துட்டாலும், பாஸாக அப்பா சிபாரிசு உதவாதுன்னு டியூஷன் படிக்கப்போக. ‘B’ செக்டரின் ரவுடி வேறயாரு நம்ம ஹீரோ, ஒரு கிரிக்கெட் மேட்சில் கிடைத்த கேப்பில், ஸ்டம்ப்பை உருவி, ரேஷ்மாவை ரூட்டுக் கட்டிக் கொண்டிருந்த சங்கரையும், பிரசன்னாவையும் அடித்து ரத்தம் பார்த்துவிட்டு, ரேஷ்மாவை பின் தொடரும் முழு உரிமையையும் நிலைநாட்டிய பிறகுவந்த ஒரு வெள்ளிக்கிழமை தான் மேற்சொன்ன சம்பவம் நடந்தது.

அதாவது ‘B’ செக்டர் ஹீரோயினி ‘C’ செக்டர் டியூஷன் மாஸ்டரிடம் பாடம் படிக்க, நம்ம ஹீரோவுக்கு காவல்காரன் பொறுப்பு தானா வந்திருச்சு, ‘C’ செக்டர் மன்மதன்களிடமிருந்து ரதி தேவதையை காப்பாற்ற வேண்டிய கட்டாயம். சிகப்பு கலர் BSA SLR லேடீஸ் ஸ்பெஷல், பச்சை கலர் யூனிபாரம், வெள்ளை ரிப்பன் தேவதை ‘B’யையும் ‘C’யையும் ரெட்டைச் சடை பட்டாம்பூச்சியாய்க் கடக்க பாவம் நம்ம ஹீரோ; அவனிடம் இருந்ததோ இன்னொரு BSA SLR, வெய்ட் அ மினிட் அது பொண்ணுங்க வண்டியாச்சே. ஆமாம் உண்மைதான் பொண்ணுங்க வண்டிதான் அது, நம்ம ஹீரோவோட அப்பா சார், பரிட்சையில் பாஸானாத்தான் ‘அட்லஸ்’ வண்டின்னு சொல்லிட்டார். பொம்பளை புள்ள வண்டியேதுன்னு கேக்குறீங்களா? நான் ரமா பரிட்சையில் பெயிலாகும்னு சொல்லையே?

இதனால் தனக்கு ஆமாம் சாமி போடும் இரண்டு பச்சை பிள்ளைகளில் ஒருநாள் மாற்றி ஒரு அட்லஸ் இரவல். பரிகாரமாய் ஒருத்தனுக்கு கிரிக்கெட் மேட்சில் ஓப்பனிங்கும் இன்னொருத்தனுக்கு பத்து ஓவர் மேட்சில் கிடைக்கிற ஒரே ஒரு மூணு ஓவர் போடும் வாய்ப்பும் கொடுங்க வேண்டும். காதலுக்குத்தான் கண்ணில்லையே கிரிக்கெட் மறைக்கலை. இதனால் நம்ம ஹீரோவோட கேப்டன்ஷிப்பை மாத்தணும்னு ஏற்கனவே ரத்த அடிப்பட்ட, பிரசன்னாவும் சங்கரும் எட்டப்பனாகியிருந்தார்கள் ‘B’ செக்டர் கிரிக்கெட் டீமிற்கு.

ஒருவாரமாய் நன்றாக சிச்சுவேஷனை அனலைஸ் பண்ணி வந்த நம்ம ஹீரோ வெள்ளிக்கிழமை, முன்னாடியே ப்ளான் செய்திருந்தது போல டியூஷன் மாஸ்டர் வீட்டின் முன் நிறுத்தியிருக்கும் நாற்பத்தம்பது ஐம்பது சைக்கிள்களில் சரியாய் நம்ம ஹீரோயின் சைக்கிள் முன்னால் நிறுத்தி யாரும் பார்க்காத ஒரு நிமிஷத்தில் அவளுடைய சைக்கிளின் வால்டியூபை பிடிங்கிவிட்டான். பிறகென்ன தன்னோட ப்ளான் படி காக்கா’பீ’ ரோட்டிற்கு கொஞ்ச தூரம் முன்னாடி வண்டியை நிறுத்திவிட்டு தேவதைக்காகக் காத்திருந்தான். அவன் நினைத்தது போல், ரேஷ்மா வண்டியைத் தள்ளிக்கொண்டே காக்கா’பீ’ ரோட்டில் நுழைந்ததும், வேறெங்கிருந்தோ வருவதைப் போல் வந்தவன் அவளருகில் வண்டியை நிறுத்தினான்.

இப்ப இன்னொரு பேக்ரவுண்ட், இந்த காக்கா’பீ’ ரோடு என்பது இந்த மாதிரி காதல் வயப்பட்டவர்களின் சொர்க்கபுரி. ஒரு பக்கம் அவள் படிக்கும் RSK ஸ்கூல், இன்னொரு பக்கம் அவன் YWCA ஸ்கூல். இரண்டு ஸ்கூலுக்குமான பொதுவான ரோடு. ரோட்டோரத்தில் அடர்த்தியான மரங்களுடன் சாதாரணமாக பத்தடிக்கு ஒரு ஸ்ட்ரீட் லைட் இருக்கும் BHELல் இந்த ரோட்டில் மட்டும் இருபத்தைந்தடிக்கு ஒரு லைட் போஸ்ட் வீதத்தில் நான்கு. இயற்கை வெளிச்சம் சுத்தமாயிருக்காத ஒரு ரோடு.

அந்த மாதிரியான மரங்களில் காக்காய்களின் கூடுகள், எவ்வளவு வேகமாக வண்டியில் போனாலும் மாலை வேளைகளில் அவைகள் போடும் எச்சத்திலிருந்து தப்பவேமுடியாது. காதலர்களின் சொர்க்கபுரியாக காக்கா’பீ’ ரோடு பேமஸானதற்கு இதுவும் ஒரு காரணம். நைட் நேரத்தில் குளிக்க விரும்பாதவர்கள் அந்தப் பக்கம் வருவதில்லை. அதுமட்டுமில்லாமல் மரங்களில் இருந்து காக்கைகள் போடும் எச்சம் 10% மக்கள் மீது விழுந்தாலும் 90% ரோட்டில் விழுவதால் வரும் ஒருவித நாற்றம் காரணமாயும் அந்த ரோட்டை உபயோகிப்பது குறைவு. ஆனால் காக்கா’பீ’ ரோட்டை உபயோக்கிக்காமல் போக வேண்டுமானால், ரொம்பவும் சுற்றிக் கொண்டு போகவேண்டும். பஞ்சரான சைக்கிளை தள்ளிக்கொண்டு போக மற்ற ரோட்டை உபயோகிக்க மாட்டாள் என்றும்; அந்த ரோட்டில் தான் தள்ளிக் கொண்டு வருவாள் என ஹீரோ நினைத்தது அப்படியே நடந்தது.

“என்ன ரேஷ்மா பஞ்சராயிடுச்சா?”

ஹீரோவின் தங்கச்சியும் ஹீரோயினும் ஒரே கிளாசில் படித்ததால் கொஞ்சம் பழக்கம் உண்டு, அதுமட்டுமில்லாமல் ரேஷ்மாவிற்கு கோக்குமாக்காக அவன் அவள் பின்னால் சுற்றுவது தெரியும்.

“ஆமாம். நீ எங்க இங்க?”

“இல்லை சும்மா கிரிக்கெட் விளையாட வந்தேன்…” சற்று நிறுத்தியவன், “…நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். ஆனா எப்படி சொல்லறதுன்னே தெரியலை!”

மனசென்னமோ ரேஷ்மாவிடமும் அவன் சொல்லப்போகும் விஷயத்திலும் இருந்தாலும் காக்கா அசிங்கம் செய்திடுமோ என்ற பயம் இருந்தது. ‘ஏன் அந்த ரோட்டில் போனே?’ என்ற கேள்வி மிகச் சுலபமாய் வீட்டில் கேட்கப்படலாம்.

“அப்பச் சொல்லாத!” சொல்லிவிட்டு வேகமாய் நடையைக் கட்டினாள் நம்ம ஹீரோயின்.

சுதாரித்தவனாய், தானும் வேகமாய் வண்டியைத் தள்ளிக்கொண்டு அவளுடைய வேகத்திற்கு ஈடுகொடுத்தவனாய் முன்னேறியவன். அவள் வண்டிக்கெதிராய் இவன் வண்டியை நிறுத்தி, சைக்கிள் ஹேண்டில்பாரில் இருந்த அவள் கையைத் தொட்டு,

“I Love You!!!” சொல்ல,

அந்தக் இருட்டு ரோட்டிலும் கூட ரேஷ்மாவின் கன்னமெல்லாம் சிவந்து அழத் தயாரானது தெரிந்தது.

“செருப்பால அடிவாங்கப்போற. வழிய விடுடா” அவனுடைய வண்டியைத் தள்ளிவிட்டு வேகமாக நடந்தாள்.

பின்னாலிருந்து,

“ஏய் நில்லுடி, என்னமோ நான் பேசப்பேச பதில் சொல்லாமப் போய்க்கிட்டேயிருக்க?”

அவன் கத்த, அவளும் கத்தினாள்.

“இங்கப் பாருடா உனக்கு இவ்ளோதான் மரியாதை! இனிமேட்டும் கண்டத பேசிக்கிட்டு என் பின்னாடி வந்த போலீஸ்கிட்ட பிடிச்சிக் கொடுத்துறுவேன்.”

மேகத்திலிருந்து ததாஸ்து தேவதைகள் “ததாஸ்து” சொல்லியிருக்க வேண்டும். தொப்பையை தள்ளிக்கொண்டு பத்தடி தூரத்தில் போலீஸ் மாமா இருவருக்கும் எதிர் திசையில் வந்துகொண்டிருந்தார்.

தொடரும்…(இன்னும் ஒரேயொரு பாகம்)

இறுதிப்பகுதி

One thought on “காக்கா ‘பீ’ ரோட்டில் ஒரு காதல் கதை

  1. Pingback: காக்கா’பீ’ ரோட்டில் ஒரு காதல் கதை - இறுதிப் பாகம் « செப்புப்பட்டயம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s