சர்க்கார் ராஜ் – திரைப்படம்

அதிக நாட்கள் கழித்து ஒரு இந்திப்படம் பார்க்கலாம் என்று எண்ணம் தோன்றியதும், சரி செய்து பார்த்திடுவோம் என்று சர்க்கார் ராஜ்ஜிற்கு முன்பதிவு செய்தேன். நல்லவேளை செய்தேன், இல்லாவிட்டால் ‘கதை தெரிந்துவிட்டது’, ‘முதல் நாள் பார்க்கவில்லை’ என்று தோன்றும் ஏதோ ஒரு காரணம் சொல்லி இந்தப் படத்தை பார்க்காமலேயே இருந்திருப்பேன். அப்படி பார்க்காமல் போன இந்திப் படங்கள் நிறைய இருக்கும்.

இதன் முந்தைய வரிசைப் படமான ‘சர்க்கார்’ பார்த்திருக்கவில்லை, இன்று மதியம் நண்பர்களிடம் கதை பற்றிக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது. அது ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை, God Father பார்த்திருக்கிறாயில்லையா? அதில் Marlon Brando நடித்த கதாப்பாத்திரம் தான் அமிதாப் பச்சன், Al Pacino நடித்த கதாப்பாத்திரம் தான் அபிஷேக் பச்சன் என்றார்கள். அதில் இருக்கும் நிறைய காட்சிகள் பழைய படத்திலும் இருந்தது என்றும் சொன்னார்கள். God Father பார்த்தவர்கள் யாருக்கும் அதன் காப்பியைப் பார்ப்பதில் அத்தனை விருப்பம் இருக்காது தான், Francis Ford Coppolo வின் இயக்கத்தில் மூன்று படங்களையும் பார்த்தவன்ன் என்ற முறையில் எனக்கும் ஒரு அலட்சியம் இருந்தது சர்க்கார் ராஜ் பற்றி. சரி பார்த்துவிடுவோம் டிக்கெட் புக் செய்தாகிவிட்டது, நாளை(இன்று) அதிகாலை வேறு பயணம் இருக்கிறது என்று பார்க்கத் துணிந்தேன்.

படம் பிரம்மாதமாக இருக்கிறது, ஏன் இதை முதலில் சொல்கிறேன் என்றால் பிற்பாடு சொல்லப்போகும் விஷயங்களை வைத்து படம் நன்றாகயில்லையோ என்ற எண்ணம் வந்துவிடக்கூடாதில்லையா அதனால் தான்.

என்னால் God Father I, II, III ற்கும் இந்தப் படத்திற்கும் சில ஒற்றுமைகள் சொல்லமுடியும் நிச்சயமாய், அபிஷேக் பச்சனின் முதல் மனைவி இறந்து போவது அதுவும் God Fatherல் வெடித்தது போலவே கார் குண்டு. பின்னர் அபிஷேக் பச்சன் அடிக்கடி சொல்லும் தன் சகோதரனைக் கொன்ற விஷயம், God Father III ல், Freddoவைக் கொன்றதற்காக இன்னமும் வருத்தப்படும் Micheal Corleone போலவே பட்டது. அதைப் போல் அபிஷேக் பச்சன் அடிக்கடி சொல்லும் “மே சம்பாலூங்கா பாபா” வும் God Father Iல் மர்லான் ப்ராண்டோவிடம் அல்பாசினோ சொல்லுவதோடு ஒப்பிட முடியும். இந்த மாதிரி படங்களுக்கேயான பிரத்யேகமான டயலாக் எனக்கு God Fatherல் புரிந்த அளவு இந்தியில் புரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால் என்னால் ரிலேட் செய்ய முடியும், சூழலோடு பொருத்தி வசனத்தை புரிந்து கொள்ள முடியும்.

இந்த விஷயத்தில் எனக்கு God Father வசனங்கள் மிகவும் பிடித்தவை, நான் க்ளாசிக் என்று நினைக்கும் சில உதாரணங்கள். “Never hate your enemies. It affects your judgement”, “Your enemies always get strong on what you leave behind.”, “Never let anyone know what you are thinking.” சொல்லப்போனால் இவை தாதா உலகத்திற்கு மட்டுமல்ல சாதாரண வாழ்க்கையில் கூட பொருந்தக் கூடியவை தான். சரி திரும்பவும் படத்திற்கு.

நான் இந்தியில் மதிக்கும் இன்னொரு விஷயம் ஹீரோ தவிர்த்தும் எல்லோருக்கும் முக்கியத்துவம் தருவது. படத்தில் அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ரவி காலே, சாயாஜி ஷிண்டே என அவரவர்க்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. தனிஷா முகர்ஜிக்கு முக்கியத்துவம் தரவில்லை என்ற வருத்தம் லேசாக(ஹிஹி) மனதிற்குள் இருந்தாலுமே கூட என்னைக்கேட்டால் God Father IIIல் Coppola, தன் மகளை Mary Corleone நடிக்கவைத்ததில் எத்தனை பேருக்கு கடுப்பு இருந்ததோ அந்த அளவு கடுப்பு எனக்கு இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்ததில் எனக்கு இருந்தது, அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாவுடன் பேசும் பொழுது சுவரு ஒன்றுடன் பேசுவது போல் இருந்தது எனக்கு. எக்ஸ்ப்ரஷன் கிலோ என்ன விலைன்னு கேட்கிறார். அபிஷேக் பச்சனும் இன்னமும் கொஞ்சம் நிறைய செய்திருக்கலாம், அல் பாசினோ அளவிற்கு ஒட்டவில்லை, அல் பாசினோ உடன் ஒப்பிடுகிறேன் என்று யாராவது சண்டைக்கு வந்துவிடப் போகிறார்கள்.

சரி கொஞ்சம் டெக்னிக்கலா, படத்தில் Sepia Effect உபயோகித்திருக்கிறார்கள், அளவு கொஞ்சம் முன்ன பின்ன மாறினாலும் படம் முழுவதும் அந்த எஃபெக்ட் இருக்கிறது. ஒளிப்பதிவும், காமெரா வைக்கும் ஆங்கிளும் ரொம்ப அழகாக இருக்கிறது. அதிகம் சில்லவுட்வும் பயன்படுத்தியிருக்கிறார்கள், இதுவும் கூட படத்திற்கு தனி அழகைத் தருகிறது. முகத்திற்கு க்ளோசப் வைக்கும் பொழுது அவர் எத்தனையை ப்ரேமிற்குள் கொண்டு வருகிறார் என்று கவனித்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது. ஒளிப்பதிவு பிரம்மாதம். அமிட் ராயாமாம், பிரம்மாதம். ஆனால் ஒரு முறை ஆட்டோ ஃபோகஸ் போட்டுவிட்டு பின்னர் சூம் இன் செய்யும் பொழுது ஸ்கிரீன் கொஞ்சம் shake ஆனது போல் இருக்கிறது. உதாரணம் க்ளைமாக்ஸ் காட்சி, அதில் அமிதாப்பிற்கு அப்படித்தான் ஆகிறது. இது வேண்டுமென்றே செய்ததா தெரியவில்லை. படத்தில் அபிஷேக்கிற்கு ஆரம்பத்தில் இருந்து இந்த எஃபெக்ட் இருந்தது.

கதை நன்றாக அமைந்திருக்கிறது. உண்மையில் கடைசியில் க்ளைமாக்ஸில் வரும் அரசியல் சம்மந்தப்பட்ட காட்சியை நான் ஊகித்திருக்கவேயில்லை. என்னைப் புரட்டிப்போட்டது அங்கே தான். அதற்கு நிச்சயம் லஹே ரஹோ முன்னா பாய் தான் காரணம் என்று நினைக்கிறேன். அந்தப் படம் பார்த்த பாதிப்பு இந்தப்படத்தில் நிச்சயம் இருக்கும் என்றே நினைக்கிறேன். படத்தின் கதை பற்றி பேச விருப்பமில்லை, ஆட்டத்தோடு பாடல்கள் இல்லை, ஐட்டம் நம்பர்கள் இல்லை, தமிழில் இந்த அளவிற்கு நிச்சயம் துணிந்து பாடல்கள் இல்லாமல் எடுக்கலாம். ஹாலிவுட் போல் படத்தின் இடையில் காட்சிகளுக்கு பின்னணியாக பாடல்கள் உண்டு, ஹாலிவுட்டிலிருந்து வித்தியாசம் என்னவென்றால் கொஞ்சம் சவுண்ட் கூட இருக்கிறது அஷ்டே.

ராம் கோபால் வர்மா இன்னொரு அருமையான படம் கொடுத்திருக்கிறார். அமிதாப் பச்சன் பற்றி, ‘கபி அல்விதா நா கெய்க்னா’ படம் பற்றி எழுதியபொழுது எழுதியது தான் நினைவில் வருகிறது, அவருடைய Screen presence அருமையாக இருக்கிறது. மற்றபடிக்கு வேறு என்ன சொல்ல, படத்தில் ஒரு பெரிய தூண் அமிதாப் பச்சன். நிச்சயம் எல்லோரும் ஒருமுறை பார்க்கவேண்டிய படம் தான். இந்தி தெரியணும் என்பது ஒரு டிஸ்கிதானென்றாலும் கொஞ்சம் தெரிந்தவர்களும் பார்க்கலாம்.

4 thoughts on “சர்க்கார் ராஜ் – திரைப்படம்

 1. இன்னும் God Father படம் பார்த்ததில்லை.இதப்பாத்து அது எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்குறேன்.

 2. நான் ஏற்கனவே தமிழில் வெளிவந்த ‘நாயகன்’ படம் பார்த்து விட்டேன் அந்த கவலையை மணி எப்போதே தீர்த்து வைத்து விட்டார்.

 3. //உண்மையில் கடைசியில் க்ளைமாக்ஸில் வரும் அரசியல் சம்மந்தப்பட்ட காட்சியை நான் ஊகித்திருக்கவேயில்லை. என்னைப் புரட்டிப்போட்டது அங்கே தான்//

  100% correct
  //அமிதாப் பச்சன் பற்றி, ‘கபி அல்விதா நா கெய்க்னா’ படம் பற்றி எழுதியபொழுது எழுதியது தான் நினைவில் வருகிறது, அவருடைய Screen presence அருமையாக இருக்கிறது//

  அமிதாப் பச்சன் = Screen Presence

  அபிஷேக் பச்சன் = Charisma 🙂

 4. I am an ardent fan of Ram Gopal Varma and Francis Ford Coppolo. I have searched with the Coppolo name. I got your blog. But it is completely in Tamil. Could not read. 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s