பெங்களூர் தேர்தல் சீதோஷணநிலை மரங்கள் IPL Chennai Super Kings திரைப்படங்கள் புகைப்படம் கொல்லிமலை

தேர்தலுக்கான அறிகுறியே இல்லாமல் பெங்களூரில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது, No Poster, No பொதுக்கூட்டம்(பெங்களூருக்குள்?!), No Sound, No disturbance. கூட வேலை செய்யும் மக்கள் பொதுவாக அரசியல் பேசுவதில்லை, நானாய்ப் போயும் பேசுவதில்லை. கௌடா குடும்பத்தின் மீது கோபமாகயிருக்கிறார்கள் அது மட்டும் தெரிகிறது. என் கம்பெனியில் என் ப்ரொஜக்டில் 10 ல் 8 பேர் ஓட்டுப் போட்டிருந்தார்கள். சும்மானாச்சுக்கும் “IT Professional’s” ஓட்டு போடமாட்டாங்கன்னு சொல்றது வெறும் புரளி.

10, 15 வருடங்களுக்கு முன்பிருந்த பெங்களூர் என்பது இப்பொழுது இல்லை என்ற சொல்லாடல் இப்பொழுது பெரும் க்ளிஷே ஆகிவிட்டது. வெயிலின் தாக்கத்தில் எல்லோரும் இதைப் புலம்புவதைப் பார்த்திருக்கிறேன். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது ஒருமுறை வந்திருக்கிறேன், நிச்சயம் பெங்களூரின் சீதோஷணநிலை மாறிவிட்டதுதான். சின்னம்மை இங்கே கொஞ்சம் போட ஆரம்பித்திருக்கிறது, இளநீர் சாப்பிடவேண்டிய கட்டாயம் இங்கேயும் இருக்கிறது.

முன்னமே எழுதணும் என்று நினைத்திருந்தேன், பெங்களூரில் சாலையோரத்தில், சாலை நடுவில் இருந்த மரங்களை எல்லாம் வெட்டியாகிவிட்டது. மடிவாலாவில் இருந்து ஆலமரம் அடியோடு களையப்பட்டது. அதைப் போலவே இந்திராநகர் CMH சாலையில் இருந்த மரங்களும். மொட்டையாக ரோடுகள் பெங்களூரின் தனித்தன்மை இல்லாமல் போனது போல் இருக்கிறது. மடிவாலாவை நான் அத்தனை உபயோகிப்பதில்லை என்பதால் அதுபற்றி தெரியாவிட்டாலும், இந்திராநகர் CMH சாலை தன் தனித்தன்மையை இழந்துவிட்டதை நிச்சயம் உணர்கிறேன்.

IPL பார்ப்பதில்லை என்ற முடிவில் இருந்தேன் இப்பொழுது சற்று மாற்றிக் கொண்டிருக்கிறேன், ஷேன் வார்னேவை ஆஸ்திரேலிய காப்டனாக ஆக்காதது என்னை வருத்தப்படுத்தியதுண்டு. ஆனால் பான்டிங் சில மாதத்தில் எல்லாம் காப்டனுக்கான முழுத்தகுதியும் உண்டென்று நிரூபித்துக் கொண்டவர். இப்பொழுது ராஜஸ்தான் ராயல் அணிக்காக தலைமைப் பொறுப்பில் ஷேன் வார்ன் பிரம்மாதப்படுத்தும் பொழுது சந்தோஷமாகயிருக்கிறது.

ஹைடனுக்காகவும் ஹஸ்ஸிக்காவும் சப்போர்ட் செய்யத் தொடங்கி இப்பொழுது அவர்கள் இருவரும் இல்லாத பொழுதும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை சப்போர்ட் செய்யத் தொடங்கியிருக்கிறேன். IPLல் மட்டமான பௌலிங் அட்டாக் சென்னை சூப்பர் கிங்க்ஸ் உடையது தான் என்று நினைக்கிறேன். ஸ்பெஷலிஸ்ட் பாஸ்ட் பௌலர் இல்லாத அணியாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் இருக்கிறது. (மகாய’ன்’ கடைசி மாட்சில் ஹார்ட்ரிக் எடுப்பதற்கு முன் எழுதியது.)

“Then she found me” என்றொரு நகைச்சுவை – சென்ட்டி படம் பார்த்தேன். Adoption பற்றிய சீரியஸ் கதைக்கருவைக் கொண்டிருந்தாலும் மெல்லிய நகைச்சுவையுணர்வோடு, புன்னகையுடனே படம் முழுவதும் பார்க்க வைத்திருக்கிறார்கள். Adoption எடுப்பதற்கு எத்தனை பெரிய மனது வேண்டும் என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்ற காரணத்தால், படத்தில் அந்தப் பெண் Adoption எடுப்பதை மறுக்கும் ஒவ்வொரு முறையும் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

“Scent of a Woman” படம் பார்த்தேன், Al Pacino பற்றி என்ன சொல்ல, தேர்ந்த நடிகன் என்பதை இன்னொரு முறை மெய்ப்பித்திருக்கிறார். இந்தப் படத்தில் Charlesற்கு வரும் பிரச்சனை போலவே எனக்கும் ஒரு பிரச்சனை கல்லூரிக் காலத்தில் வந்தது, கடைசியில் நானும் அவரை(Charles) மாதிரியே சொல்லாமல் விட்டதால்(நம்புக்கப்பா!) கடைசியில் பிரச்சனை செய்த மாணவர்கள் நான் தான் செய்ததாக ஒரு ‘கதை’ சொல்ல, ஏற்கனவே இருந்த என் Image நான் செய்திருக்க முடியும் என்று அவர்களை நம்பவைக்க, Apology லெட்டர் கொடுத்திருந்தேன். அது சட்டென்று நினைவில் வந்தது. இந்தப் படம் பார்த்ததும். கொடுமை என்னன்னா அந்தப் பிரச்சனையைச் செய்தது ஒரு Pasterன் மகன் என்பதால் மறுபேச்சே இல்லாமல் அவன் சொன்னதை நம்பினார்கள் :(. Personality does matters என்பது அந்தப் பிரச்சனையில் பொழுது தெரிய வந்தது. அதன் காரணமாக என் உருவத்தை/செயல்களை/எழுத்தை வைத்து என்னை தவறாக மதிப்பிடுபவர்களை நான் பிற்காலங்களில் எதிரியாக பார்க்காமல் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால் இயல்பில் எங்க பிரின்ஸி ரொம்ப நல்லவர். 🙂

இம்சை அரசியின் கல்யாணத்தை ஒட்டி, திட்டமிட்டு கொல்லிமலைக்குச் சென்றிருந்தோம். வழமையான நண்பர்களுடன் புதிதாகச் சில நண்பர்களையும் சந்தித்திருந்தேன், மகிழ்ச்சியான பயண அனுபவம். ‘இருள்வ மௌத்திகம்’ புத்தகம் எப்படியோ(!?) என் பையில் வந்திருக்க அதைப் பார்த்த நண்பர்களிடம் ஒரு ‘பெட்’ கட்டியிருந்தேன். அதில் இருக்கும் ஒரு பக்கத்தை படித்து பின்னர் விளக்கம் சொன்னால் 1000 ரூபாய் தருவதாக, ஒரு லட்ச ரூபாய் தருவதாகக் கூட பெட் கட்டியிருக்கலாம். ஆனால் ஒரு இயல்புணர்ச்சியை வரவைப்பதற்காக 1000 ரூபாய்க்கான பெட் கட்டினேன். 🙂 படித்துவிட்டு தலைசுற்றி கீழே விழாதது ஒன்று தான் குறை. கொல்லிமலையில் முக்கிய அருவிக்கு செல்வதற்கான நேரம் கழித்துச் சென்றதால் பக்கத்தில் இருந்த குட்டி அருவிக்குச் சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அப்படியே சின்னதாய் ஒரு குளியல் போட்டுவிட்டு வந்தோம்.

கொல்லி மலை அருவியில் நான் எடுத்த ஒரு புகைப்படம்.

Falls

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s