எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் என் தலைமுடியும்

எக்ஸிஸ்டென்ஷியலிஸம் பற்றி முதலில் தெரிந்து கொண்டது என்றால், நான் வலைப் பதிவில் வந்து சேர்ந்திருந்த சமயம் என்று நினைக்கிறேன். பெரிய ராயர் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் பற்றி க.பெ.வில் கொளுத்திப் போட அது வலையுலகில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. எப்பவுமே என்னமோ நோட்ஸ் எடுப்பது போல க.பெவில் வரும் பெயர்களை எடுத்துக் கொண்டு கூகுளில் தேடும் வழக்கம் உண்டு. அன்றும் அப்படித்தான் சார்த்ர்(Jean-Paul Charles Aymard Sartre) வையும் சிமோன் டி புவா(ர்) Simone de Beauvoir வையும் குறிப்பெடுத்துக்கொண்டவனாய்த் தேடத் தொடங்கினேன். அப்பொழுதெல்லாம் விக்கிபீடியாவில் தேடும் பழக்கம் கிடையாது. இப்படி தேடப்போய் அறிமுகம் ஆனதுதான் எக்ஸிஸ்டென்ஷியலிஸம்.

Existentialism is a philosophical movement which claims that individual human beings have full responsibility for creating the meanings of their own lives. என்பதைத்தான் எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தின் ஒருவார்த்தைக் குறிப்பாகச் சொல்கிறது விக்கிபீடியா. இந்த வரிகள் சொல்லும் மீனிங்கைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். இதைப் பற்றி யோசிக்கும் பொழுதெல்லாம் ‘தேவர் மகன்’ படத்தில் சிவாஜி கணேசன் சொல்லும்; மரம் பற்றிய வசனம் நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை.

நாம் வாழ்ந்து வரும் சமுதாயத்திற்கு நான் எதுவும் செய்யவேண்டுமா? செய்ய வேண்டுமானால் எப்படிப்பட்டதான ஒன்றை செய்யவேண்டும் என்ற கேள்விகள். சரி இதிலெல்லாம் என் தலைமுடி எங்கே வந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் இந்த சமுதாயத்தையும், எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தையும், ஒரு பட்டர்ப்ளை எஃபெக்ட்டால் என் தலைமுடியுடன் சம்மந்தப் படுத்திவிடமுடியும் என்றே நினைக்கிறேன்.

நாம் வாழும் சமுதாயத்தை சந்தோஷப்படுத்துமானால் அது நல்ல காரியமாகத்தானே இருக்கமுடியும். அப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்வதால் Meanings of my own life அடைந்துவிட்டதாகச் சொல்லமுடியும்தானே. சர்ரியலிஸம், பின்நவீனத்துவம் போன்ற இன்னபிற விஷயங்களுடனும் என் தலைமுடியை சம்மந்தப்படுத்த முடியுமென்றாலும் இப்போதைக்கு இதை எக்ஸிஸ்டென்ஷியலிஸத்துடன் முடித்துக் கொண்டு பின்னர் தேவைகள் வரும் பொழுது மற்றவைகள் விளக்கப்படும்.

ஏன் இப்படி என்று நினைத்தீர்கள் என்றால் மேட்டர் இவ்வளவு தாங்க ஸிம்பிள், நான் நான்கைந்து மாதங்களாக வளர்த்துவந்து என்னுடைய தலைமுடியை ஒட்ட வெட்டிவிட்டேன். இம்புட்டுத்தான் விஷயம். இப்ப இது எப்படி எக்ஸிஸ்டென்ஷியலிஸத்துடன் சம்மந்தப் பட்டது எனச் சொல்கிறேன். முடிவளர்ப்பதென்பது என்னுடைய தனிப்பட்ட உரிமையில்லையா? அதை ஷார்ட்டா வைத்துக் கொள்வதா இல்லை வளர்த்துக் கொண்டை போடுவதா என்பது யாருடைய பிரச்சனை. தினமும் தலைக்குக் குளித்து, வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு ஷாம்பு, பின்னாடி கன் டிஷ்னர் போட்டு, ஆல்கிளியர் ஹேர் ஜெல்லும், தேங்காயெண்ணையும் தேய்த்து ஆசையாசையாய் வளர்த்துவருகிற என் பிரச்சனையா? இல்லை சந்தர்ப்பவசத்தாலோ இல்லை மற்றதாலோ என்னைச் சந்திக்க வேண்டி வந்தவர்களுடைய பிரச்சனையா?

இது ஒரு முக்கியமான பிரச்சனை; எப்படி “The main threat to existentialism is non-availability of good quality condoms” என்று சாருநிவேதிதா தன்னுடைய பிரச்சனையை எக்ஸிஸ்டென்ஷியலிஸ பிரச்சனையாகப் பார்க்கிறாரோ அப்படி. சரி இப்படி “பாமர” மக்கள் தான் தனிமனித உரிமையைப் புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்கிறார்கள் என்றால் பதிவுலகிலகிலேயே வசிக்கும் பதிவர்களுக்கும் இதே பிரச்சனை தான். கூந்தல் அழகன்னு சொல்றது, என் அக்கா பாசத்துடன் என் தலைமுடியை சம்மந்தப் படுத்திப் பேசுவது, காதுவரைக்கும் முடியிருந்தா என்ன பிரச்சனைன்னு எடுத்துச் சொல்றது(அப்ப அப்துல் கலாமுக்கும் இதே பிரச்சனைன்னு சொல்றீங்க என்ன?), நான் எப்ப முடிவெட்டப்போறேங்கிறது தான் நாளை இந்தியா வல்லரசா மாறுவதற்கு முக்கியமான பிரச்சனை அப்படின்னு பேசுறது எல்லாம் சேர்ந்து தான் சரி, நமக்கான ஒரு தீர்வோ விருப்பமோ இல்லாமல் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் சொல்லும் Nothingness ஆவோ இல்லை புத்தர் சொல்லும் “ஆசையே அழிவுக்கு காரணம்” இருக்கலாம் அப்படிங்கிற நிறைய விஷயத்தை கன்ஸிடர் செய்து முடியை வெட்டி விடலாம் என்ற முடிவிற்கே வந்துவிட்டேன்.

ஆனாலும் ஒரு நல்ல சலூன் தேடி உட்கார்ந்து, சுத்தி பாதுகாப்பு வளையமெல்லாம் கட்டிவிட்ட பிறகு வெட்டி விழுந்த முதல் கற்றை முடியுடன் என் கண்ணீரும் சொட்டாய் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை என்றே நினைத்தேன் முதலில், “என்னா சார் கண்ணில பட்டுடுச்சா!” என்று கேட்ட அந்த கருப்பு மனிதரின் சிகப்பு அன்பு தான் இந்தப் பதிவை தட்டிக் கொண்டிருக்கும் பொழுது மனதெங்கும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. முடிவெட்டிவிட்டு வீட்டிற்கு வந்ததும் அக்கா சொன்ன “அய்யோ என் தம்பியோட டீஷர்ட் பேண்டை போட்டுக்கிட்டு யாரோ வீட்டுக்கு வந்திட்டாங்க” வார்த்தைகள் காதிலே இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கண்ணாடி முன்னால் நின்று பார்த்தால் எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை, இதற்கு ஏதாவது இஸம் சொல்லலாமா என்று தெரிந்தவர்களிடம் கேட்கயிருக்கிறேன்.

நீட்ஷே “இறைவன் இறந்துவிட்டான், இனிமேலும் இறந்தவனாகவேயிருப்பான். அவனை நாம் தான் கொன்றுவிட்டோம்” என்று தன்னுடைய நாவலில் எழுதிய பிரபலமான வரிகளில்; இறைவன் என்பது இறைவனைக் குறித்தால் இங்கே என் தலைமுடியென்பது தலைமுடியைக் குறிப்பதாக வைத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு பதிவை படிக்க நேர்ந்ததற்காகவோ இல்லை, இந்தத் தலைப்பின் கவர்ச்சியில் உள்ளே நுழைந்தவர்களுக்கும் வருத்தப் படுவதாகயிருந்தால் அதற்கு காரணம் பிரகாஷ், பொன்ஸ், ஆசீப் மீரான் மற்றும் செந்தழல் ரவி தான் என்றும். இந்தப் பதிவின் பின்னாலுள்ள பின்நவீனத்துவத்தைப் புரிந்து கொள்கிறீர்கள் என்றால் நீங்கள், பின்நவீனத்துவம் என்னும் மலையின் முதல் படிக்கட்டை வெற்றிகரமாகத் தாண்டிவிட்டீர்கள் என்று காலரைத் தூக்கிவிடலாம்.

9 thoughts on “எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் என் தலைமுடியும்

 1. இப்பவே கண்ண கட்டுதே. அனானி சொன்னா சரியாத்தான் இருக்கும்.

 2. எலே மோகனா,

  நீ வாயில வந்ததை எல்லாம் எழுதுததுக்கு நான்ப் எப்படிலே பொறுப்பாவ முடியும்? அடுத்தவனுக்குக் கல்லடி வாங்கிக் குடுக்குறதுல அவ்வளவு சந்தோஷ்மா??!நல்லா இருடே!!

  சாத்தான்குளத்தான்

 3. விஜயபாபு, அனானி சொல்றதை எல்லாம் நம்பாதீங்க.

  ஆசிப் அண்ணாச்சி,

  உண்மையை உண்மையாச் சொன்னா பொய் மாதிரிதான் தெரியும்னு சொல்றாங்களே அதப்பத்தி உங்களுக்கு எதுவும் தெரியுமா?

 4. அடப்பாவி… வெட்டீட்டியா?

  குடும்பி வைக்கிற அளவுக்கு சடையா வளப்பேன்னு நெனைச்சேனே.. ! 😦

 5. நான் அப்பவே நினைச்சேன்.கோவை பட்டறையிலே பின் நவீனத்துவத்தைப்பத்தி
  பேசும்போதே ஏதாவது நடக்குமுண்ணு.மொதல்ல நம்ம உண்மைத்தமிழன் முடி இழந்தாரு.இப்ப உம்படுதும் போச்சா கண்ணூ.அடப்பாவமே…

 6. வித்யா, பாலா, தாமோதர் நன்றிகள். மனசை நானே ஒருமாதிரி தேத்திக்கிட்டிருக்கேன்.

  நீங்க வேற கிளப்பிவிடாதீங்க.

 7. “உண்மையை உண்மையாச் சொன்னா பொய் மாதிரிதான் தெரியும்னு”

  இது தானே பின் நவீனத்துவம்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s