பில்லா திரைவிமர்சனம்

பில்லா படம் பார்க்கச் சென்றிருந்தேன், அஜீத்தின் படம் என்பதனால் மட்டுமல்ல, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வருவது என்பது கூட ஒரு காரணம். எனக்கு தமிழ் பில்லா நினைவில் இல்லை, ஆனால் ஒன்றிற்கு இரண்டு முறை பார்த்த ஷாருக்கின் டான் படம் நன்றாக நினைவில் இருந்தது. படத்தின் ஒருவரி விமர்சனம் வேண்டுமென்றால் நீங்கள் ஷாரூக்கின் “டான்” ரீமேக் படம் பார்த்துவிட்டீர்கள் என்றால் இந்த அஜீத்தின் பில்லா அதன் பக்கத்தில் கூட இல்லை, ஆனால் தமிழ்படங்களில் எடுக்கப்பட்ட விதத்தில் அசத்தலாகயிருக்கிறது. ஆனால் நான் டான் படத்தைப் போல ஒன்றை எதிர்பார்த்துச் செல்ல ம்ஹூம் ஒன்றுமேயில்லை.

“டான்” படத்தின் இந்தி ரீமேக்கின் பொழுது பழைய படத்தில் இருந்து வித்தியாசப்படுத்தியிருப்பார்கள், கடைசியில் டான் சாகாதது போலும் கடைசிவரை பிழைத்து இருப்பதைப் போலவும். அது போன்ற ஒரு கடைசி நிமிட திருப்பத்திற்கு வாய்ப்பேயில்லை என்று படத்தின் பாதியிலேயே தெரிந்துவிட்டது. தேங்காய் சீனிவாசன் கேரக்டர் கட். மற்றபடிக்கு எடுக்கப்பட்ட விதத்தைத் தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை இந்தப் படத்தில்.

அஜீத் குமார் பரவாயில்லை நன்றாக முயற்சித்திருக்கிறார், ஒன்றிரண்டு ஸ்டண்ட் காட்சிகள் அவர் செய்வது போல் இருக்கிறது அவர் தானா டூப்பா தெரியவில்லை. முக்கியமாக அந்தக் கார் 180 டிகிரி சுற்றுவதைப் போன்ற காட்சி. ஒருவேளை ரஜினியை ரிப்ளேஸ் பண்ணமுடியலையா தெரியலை ஆனால் அஜீத்குமார் ரஜினி கதாப்பாத்திரத்தில் ஒட்டவேயில்லை, ஏனென்றால் அஜீத் வில்லனாகயில்லாமல் ஹீரோவாக வந்தவர் என்பது கூட காரணமாகயிருக்கலாம். பில்லா என்பது வில்லன் கேரக்ட்டரின் படம் எனக்கென்னமோ அஜீத் ஒட்டாமல் இருப்பதாகவே பட்டது.

நயன்தாரா நன்றாக ஆட்டிக் காண்பித்திருக்கிறார் எதையென்று நான் சொல்ல விரும்பவில்லை, இடையில் பிகினியில்(technically பிகினின்னு சொல்லமுடியாது) வேறு வருகிறார். “டான்” பிரியங்கா சோப்ரா கண்ணில் நிற்கிறார், இங்க ம்ஹூம் வேறென்னமோ தான் கண்ணில் நிற்கிறது. ஸ்ரீப்ரியா கேரக்டரை சப்பென்று ஆக்கிவிட்டார்கள். அதில் இந்தம்மா(நயன்தாரா) இரண்டு தடவை வேறுவேறு காலக்கட்டங்களில் கால்ஷீட் கொடுத்திருக்கும் போலிருக்கிறது, புருவம் இருக்கிற அழகை வைத்தே சொல்லமுடிகிறது. பாதிநேரம் காட்டிக்கொண்டே நிற்கிறது மார்கெட் கவிழ்ந்து கொண்டிருக்கிறதோ? உருப்படாதது நாராயணன் பதிவில் சொல்லியிருந்தேன் பக்வாஸ் செய்திருப்பார்கள் என்று அப்படியே.

நமீதா பாவம் அவருண்டு சத்யராஜ் சிபிராஜ் படமுண்டு என்று இருந்தவரை செகண்ட் ஹீரோயின் என்று சொல்லி அழைத்துவந்து ஒத்தை பாட்டுக்கு டான்ஸ் ஆடவிட்டு காலிசெய்வதை இப்பொழுதெல்லாம் இயக்குநர்கள் ஒரு வேலையாக வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

படம் ஸ்டைலிஷ்ஷா எடுத்திருக்கிறார் இயக்குநர், பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் நன்றாகயிருக்கிறது. முதல் பாடல் ‘செய்’ நன்றாக வந்திருக்கிறது. இயக்குநரின் ஃபேவரைட்டான ‘ராப்’ வகை நடனம் இந்தப்படத்திலும் இருக்கிறது. ஸ்டண்ட் நன்றாகச் செய்திருக்கிறார்கள், ரொம்பக் காலம் கழித்து(இல்லை முதல் முறையோ) ஏகே 47 வகையறா துப்பாக்கியை கூடவரும் போலீஸ்காரர்கள் சரியாகப் பிடித்திருக்கிறார்கள். விஜயகாந்த் படங்களில் அதென்னமோ டப்பா துப்பாக்கின்னு தெரிஞ்சாலும் ஒரு கெத்தா பிடிப்பாங்களான்னா அது கிடையாது. அந்த விதத்தில் இயக்குநரை பாராட்டலாம், ஸ்டண்ட் நன்றாக உழைத்து செய்திருக்கிறார்கள்.

டூப்ளிகேட்-பில்லா போலீஸிடம் தப்பிக்கும் சீனை வெகு ஆவலாக எதிர்பார்த்திருந்தேன், மொக்கை, மொக்கை, என்ன சொல்றது ஒரு வேனை வைத்து முடித்துவிட்டார்கள். என்னயிருந்தால், எவ்வளவு தான் எனக்கு நானே மறுத்துக் கொண்டாலும், டானில் அற்புதமாக வந்திருந்தது அந்த சீன். எனக்கும் புரிகிறது எத்தனை காப்பி ஹிந்தி படம் போடுகிறார்கள் எத்தனை காப்பி தமிழ்படம் போடுகிறார்கள் என. ஆனாலும் என்ன செய்வது பாழும் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது. சரி பட்ஜெட் பத்தலை என்றாலும் கதையையாவது மாற்றியிருக்கலாமே ஒரு ட்விஸ்ட் வருகிற மாதிரி. ம்ஹூம்.

நான் இந்தி டான் அளவு எதிர்பார்த்திருக்காவிட்டாலோ இல்லை இந்தி டான் ரீமேக் பார்த்திருக்காவிட்டாலோ ஒருவேளை பிடித்திருக்குமோ தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஓடுமாயிருக்கும் விகடன் 41 தருவார்களாயிருக்கும். இந்த விமர்சனமும் பாரபட்சமுடையதாகவே பார்க்கிறேன், இதை மட்டும் வைத்து எந்த முடிவிற்கும் வராதீர்கள் இன்னும் நாலுபேர் சொல்வதைக் கேளுங்கள். வர்ட்டா இந்தப் படத்தை இன்னொரு தடவை வேறு பார்க்கணும், கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மம்மிமிமிமிமிமி.
மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s