நான் பூப்பிடிக்க போன கதை

மலர்கள் என்று PIT யில் போட்டி அறிவித்ததுமே காலங்கார்த்தால போய் லால்பாஹ்வில் புகைப்படம் எடுப்போம் என்று தீர்மானித்திருந்தேன். வேலை காரணமாக இரவு நேரங்கழித்து வீட்டிற்கு வருவதாலும் வந்த பிறகும் ‘குழும’ மடல்களைப் படித்துக் கொண்டிருப்பதால் 1.00, 1.30 மணிக்கு தூங்கப்போவதால் காலையில் 6.00 மணிக்கு எழுவதில் தொடர்ச்சியாக பிரச்சனையிருந்தது. அலுவலகத்தில் இன்னிக்கு நீ லால்பாஹ் போனியா என்று கேட்கும் அளவிற்கு ‘நானும் ரௌடி’ ரேஞ்சில் ஏக பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர்களாய் அலுத்துப்போய் விட்டுவிட்டார்கள், ஏற்கனவே வயநாட் சென்றிருந்த பொழுது எடுத்திருந்த செம்பருத்தியும், மாமல்லபுரம் சென்றிருந்த பொழுது எடுத்திருந்த தாமரையும் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தாலும். போட்டின்னு வந்துட்டா டெடிகேஷனா போய் படம் எடுக்கணும் என்று நினைத்திருந்ததால் சரி புதுசா எடுத்துப் போடலாம் என்று வைத்திருந்தேன்.

நாங்கள் செய்துகொண்டிருந்த ப்ரொஜக்ட் வெற்றிகரமாக UAT முடிந்து கொண்டிருந்ததால், இன்னொரு சின்ன ப்ரொஜக்ட் பார்ட்டி தருவதாகச் சொல்ல, கூட வேலை செய்யும் பெண்கள் ஒரு படம் பார்த்துவிட்டு பார்ட்டிக்குப் போகலாம் என்று வற்புறுத்த, அங்கேயும் பெண்கள் பாலிடிக்ஸ் செய்து “Jab we met” என்ற ஹிந்தி படத்தை தேர்ந்தெடுத்துத் தொலைத்தார்கள். நானும் ஃபோரம் இல்லாவிட்டால் கருடா மாலிற்குத்தான் செல்வார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் கேள்விப்படாத சிக்மா மாலின் Fun Cinemaவில் டிக்கெட் பதிவு செய்ய, கன்னிங்கஹாம் ரோட்டில் அந்த தியேட்டர் பரவாயில்லை என்று தான் சொல்வேன்.

ஷாஹித் கபூரும் கரீனா கபூரும் நடித்தப் படம், அப்பா இறந்துவிட அம்மா இன்னொரு நபருடன் ஓடிவிட, காதலித்த பெண் இதன் காரணங்களுக்காக விட்டுவிட்டு வேறொருவனை மணந்துகொள்ள, அம்மா ஓடிப்போனதால் கம்பெனி ஷேர்களில் இருந்த பிரச்சனைகள் பெரிதாக ஹீரோ வீட்டை விட்டு வெளியேறுவதில் தொடங்குகிறது படம். சரி பயங்கர மொக்கை படம் போலிருக்கு என்று நினைக்கும் பொழுது கரீனா கபூரின் அறிமுகம், படத்தை தாங்கி நிற்கிறார் கரீனா. பின்னர் ஹீரோவின் காரணமாக ஹீரோயின் டிரெயினில் இருந்து கீழிறங்க, டிரெயினை கோட்டை விட்டுவிட்டு பின்னர் ஹீரோயினை அவரது வீட்டுற்கு கூட்டிக்கொண்டு போகும் கட்டாயத்திற்கு உள்ளாகிறார் ஹீரோ. வீட்டிற்குச் சென்றதும் ஹீரோயின் தனக்கு பார்த்திருக்கும் மணமகனை விரும்பாமல் வீட்டை விட்டு ஓடிச் செல்ல நினைக்க வரும் பிரச்சனைகள் கடைசியில் எப்படி ஹீரோவும் ஹீரோயினும் எப்படி சேர்கிறார்கள் என்பதுதான் மீதிக்கதை.

கரீனா கொஞ்சம் ஷாஹித் கபூரை விட வயதானவராகத் தெரிகிறார், ஆனாலும் கனமான கதாப்பாத்திரம் என்பதால் வேறுவழியில்லை என்று நினைத்திருக்கலாம். கொஞ்சம் சிவாஜி போல் ஓவர் ஆக்ட் போல் இருந்தாலும் ரொம்பவும் ஆட்(Odd)ஆக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் படத்திற்கு அழைத்துக் கொண்டுவந்துவிட்டார்கள் என்ற கோபத்தில் நானும் ஹிந்தி தெரியாத/புரியாத சோகத்தில் பிரபுவும் சோகக்காட்சியில் எல்லாம் கெக்கெபிக்கே என்று சிரித்து கூட வந்திருந்த இந்தப் படத்தை தேர்ந்தெடுத்தவர்கள் வம்பிழுத்துக்கொண்டிருந்தோம். படம் முடிந்து இன்ஃபேண்ட்ரி ரோட்டில் உள்ள ஓரியண்டல் ஸ்பைஸஸில் இரவு உணவு முடித்துக்கொண்டு வந்ததும் வந்த களைப்பில் உறங்கிவிட இன்றைக்கு காலங்கார்த்தாலை ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. சரி இன்னிக்கு தூக்கம் அவ்வளவுதான் என்று நினைத்தவனுக்கு சட்டென்று லால்பாஹ் நினைவில் வர வேகவேகமாய்க் கிளம்பிச் சென்றேன். ஆறுமணிக்கு அங்கே இருந்தேன்.

ஆனால் கொடுமை என்னவென்றால் ஒட்டுமொத்த லால்பாஹ்விலும் ஒரே ஒரு ரோஜாப்பூதான் இருந்தது. ரோஸ் கார்டன் என்றே ஒரு இடம் உண்டு லால்பாஹ்வில் ஆனால் இது சீசன் இல்லையாமாம், பக்கத்தில் இருந்த லோட்டஸ் பாண்ட்டில் தாமரை இருக்கா என்று பார்க்கச் செல்ல இருந்த ஒன்றிரண்டு சின்ன தாமரை மொக்குகள் பக்கத்தில் கூட என் ஷூம் செல்லவில்லை என்பதால் பக்கத்தில் இருந்த வேறு சில மலர்களைச் சூட்டிங் போட்டுக்கொண்டு வந்தாகிவிட்டது. எடுத்த சில படங்கள் கீழே.

என்னோட சாய்ஸ் முதலாவதும் ஐந்தாவதும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s