போனஸ் பார்ட்டி பேச்சுலர் பேச்சிலர் பெங்களூரு

முன்னமே லே-ஆஃப் பற்றி எழுதியிருந்தேன் அப்படியே என் வருடக்கடைசி கிறிஸ்மஸ் பார்ட்டி பற்றியும், பார்ட்டியின் முதல் நாள் இரவு கேள்விப்பட்ட விஷயம் தான் இந்த வருடம் போனஸ் கிடையாதென்பது. மற்ற கம்பெனிகள் போலில்லாமல் 10% போனஸ் என்று அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரிலேயே எழுதிக் கொடுத்தனர். சொல்லப்போனால் கிடைத்த மற்ற ஆஃபர்களை விடுத்து இந்தக் கம்பெனியில் சேர்ந்ததற்கு முக்கியமான காரணமே CTCக்கு வெளியில் கொடுப்பதாய்ச் சொன்ன போனஸ் தான். Core Team அவர்களுடைய அடுத்த ரிலீஸில் மும்முறமா இருந்து சனி, ஞாயிறு என்று லேட் நைட் வேலையெல்லாம் செய்தார்கள் அதைப் போலவே நாங்களும் ரிலீஸ் காரணமாக நிறைய வேலை செய்ததற்கு பரிசு நோ-போனஸ். பார்ட்டியில் எல்லோருக்கும் தெரியும் முன்னர் தண்ணி அடித்திருந்த பெருந்தலை ஒன்று புலம்ப இந்த விஷயம் பொதுவில் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னமே தெரிந்து போனது. ஒரு பல்க் அமௌண்ட் என்பதால் ஏகப்பட்ட ப்ளான்கள் முன்னமே போட்டு வைத்திருந்தேன். எல்லாவற்றிற்கும் அரோகரா! ஆனாலும் நாங்கள் கடைசியாக செய்த ப்ரொஜக்ட் நல்ல வகையில் UAT போய்க்கொண்டிருப்பதால், கடைசி நேரத்தில் கூட போனஸ் கிடைக்கும் என்று நண்பர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அது போகட்டும் இந்த வருட கிறிஸ்மஸ் பார்ட்டி செலவு 25 லட்சம் என்றதும் ஏகக்கோபமாகிப்போனார்கள் உடன் வேலை செய்யும் நண்பர்கள். பெங்களூரில் இருக்கும் அங்ஸானா ரிஸார்ட்டில் சனிக்கிழமை மதியத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை ஆன செலவு இது! பேச்சுலர் மக்களுக்காவது எதாவது செய்து போனஸ் தொகை இல்லாமல் போனதை சரிசெய்துவிடமுடியுமாயிருக்கும். குடும்பம் என்ற அளவில் செட்டில் ஆனவர்களுக்கு அது முடியாதது என்ற அளவில் 25 லட்சம் செலவைக் கேட்டதும் கொஞ்சம் போல் ஆடித்தான் போய்விட்டார்கள் மணமானவர்கள். பேச்சுலர்களுக்கும் இது ஒரு பெரிய இடிதான் என்றாலும் பேச்சிலருக்கு இது அடர்ப் பச்சையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ரிசார்ட் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது, கம்பெனி டிராவலுக்கான வசதிகள் செய்து கொடுத்திருந்தாலும் நாங்கள் எங்கள் க்ரூப்பாக டூவீலரில் சென்றிருந்தோம். இரண்டு நாடகங்கள் நடத்தினார்கள், இரண்டு ஐட்டம் நம்பர்ஸ் பிறகு வழமையான பேஷன் ஷோ. கொஞ்சம் போல் புகைப்படங்கள் தட்டினேன். வழமை போலவே தண்ணியடித்ததும் ஏகப்பட்ட உண்மைகள், அழுகைகள், கேலிகள் தொடர்ந்தன. எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு சிக்கன் கபாப்களை காலி செய்து கொண்டிருந்தேன். இரவு camp fireல் சினிமா பேர் கண்டுபிடித்து விளையாடும் விளையாட்டைத் தொடர்ந்ததும் சண்டை போட்டு இந்தியுடன், ஆங்கிலப்படங்களையும் சேர்த்தோம். தண்ணியடித்தவர்கள், அடிக்காதவர்கள் என ரகளையாக நடந்தது. பெங்களூரில் பனிதான் பொழிந்து கொண்டிருந்தது நேற்றில் இருந்து மழைவேறு பெய்கிறது. டெல்லி குளிருடன் ஒப்பிட முடியாதென்றாலும் winter இங்கேயும் கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. காலையில் கம்பளியில் இருந்து விடுவித்துக் கொண்டு கம்பெனிக்கு கிளம்புவதற்கு முதலில் மனதை தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. திரைப்படம் ஒன்றை தியேட்டரில் சென்று பார்த்து மாதக்கணக்காகிறது! காரணம் புரிவதால் என்னை நானே விடுவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

சிறுவயதிலிருந்தே தொடரும் வழக்கமாக விடுமுறைக்கான நாட்களை நோக்கியபடி இப்பொழுதெல்லாம் நினைவுகள் அலைமோதுகிறது. இந்த பலூன் விடுமுறையின் கடைசி நாட்களுக்கு முன்னர் உடைந்து மனமெங்கும் பரப்பும் வெறுமை எழுதித்தள்ள முடியாததாக இருக்கிறது. இந்த முறையும் தொடரும் என்று நினைக்கிறேன்.

————————

இதை எழுதி டிராஃப்டில் வைத்திருந்தேன். அப்ரைஸல் முடிந்துவிட்டது வெற்றிகரமாக, பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாததாலோ என்னவோ அப்ரைஸல் முடிந்ததும் No Hard Feelings. 😉

Posted by மோகன்தாஸ் at Monday, December 10, 2007

Labels: நாட்குறிப்பு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s