Curse of the Golden Flower


இன்செஸ்ட் ரிலேஷன்ஷிப் பேசும் படங்கள் முன்பே பார்த்திருக்கிறேன், The Dreamers ஒரு உதாரணம்; அந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் இன்னும் “வளரவில்லை” ஆதலால் இந்த Curse of the Golden Flower. $45 million செலவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, சொல்லப்போனால் சிவாஜி படத்தில் நான் எதிர்பார்த்தது இந்தப்படத்தில் காணக்கிடைக்கும் ஒரு ரிச்னஸ். படத்தின் கான்செப்ட் படி தமிழ்நாட்டில் படம் வர இன்னும் வருடங்கள் ஆகும் என்று நினைக்கிறேன்.

Star Moviesல் இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே சில காட்சிகள் பார்த்திருக்கிறேன், ஆர்வத்தை தூண்டும் விதமாகயிருந்ததென்றால் மிகையல்ல. பிரம்மாண்டம் என்றால் என்ன என்று காணத் துடிப்பவர்கள் பார்க்கவேண்டிய படம் அதே சமயம் கதையென்ற ஒன்றும் பின்னிப் பிணைந்து பிரமாண்டம் எப்படி சேர்க்கப்பட்டிருக்கிறது என்று பார்க்கவேண்டும்.

மார்ஷல் ஆர்ட்ஸில் இனி Chinese மக்கள் செய்வதற்கு ஒன்றுமேயில்லை என்று நினைத்திருந்தேன் ஆனால் இன்னொரு முறை அந்த எண்ணத்தை தகர்த்தெரிந்திருக்கிறார்கள். மன்னரின் படைகளுக்கும் ராணியின் படைகளுக்கும் நடக்கும் சண்டை அத்தனை தத்ரூபம். சொல்லப்போனால் இதைப் போன்ற படங்களைப் பார்த்ததால் தான் சிவாஜியில் வரும் கார் ஃபைட் அத்தனை ரசிக்கக்கூடியதாகயில்லை.

சின்னம்மா(தந்தையின் இரண்டாம் மனைவி)விற்கும் மகனிற்கும் இருக்கும் உறவு, அண்ணனுக்கும் தங்கைக்கும் இருக்கும் உறவு என ஒரு சிக்கலான கதைக்களனில் படத்தை எடுக்க திறமைவாய்ந்த இயக்குநர் Zhang Yimou ஆல் முடிந்திருக்கிறது. இரண்டு மிகத் திறமையான நடிகர்கள் ரொம்பவும் சிக்கலான கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். Chow Yun-Fat, Gong Li எத்தனை திறமையான நடிகர்கள் என்பது அவர்கள் வெளிக்காட்டும் உணர்ச்சிகளில் தெரிகிறது.

Chow Yun-Fat தன்னுடைய வழமையான சண்டைக் காட்சிகளில் பரிமளிப்பதைக் காட்டிலும், வெகு அழகான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார், தன் மனைவிக்கும் தன் மூத்த மகனுக்கும் இருக்கும் தொடர்பு தனக்கு தெரியும் என்பதை வெளிக்காடும் இடத்திலும், மனைவி பலர் முன்னிலையில் தன்னை வெறுப்பேற்றும் வகையில் நடந்து கொள்ளும் பொழுது உன்னைக் கொன்றுபோட்டிருப்பேன் ஆனால் நீ ராணி என்பதால் விட்டு வைத்திருக்கிறேன் என்று முகத்தில் ஏகக்கடுப்பை வைத்துக் கொண்டு வெளிப்படுத்தும் பொழுதாகட்டும். கடைசி காட்சியில் தன்னுடைய இரண்டாவது மகன் Jai இடம் உன் தாயாருக்கு விஷம் கலக்கப்பட்ட மருந்தை இனி நீயே கொடுப்பதாக இருந்தால் உன்னை மன்னிக்கிறேன் என்று சொல்லும் பொழுது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் பிரமாதம்.

Chow Yun-Fat ற்கு கொஞ்சமும் சளைத்தவரல்ல என்பதை Gong Li நிரூபித்திருக்கிறார், தன் மகனிடம்(மூத்த தாரத்தின்) தன்னைவிட்டுச் செல்லக்கூடாது என்று தாபத்தில் கதறும் பொழுதாகட்டும், ஏகப்பட்ட ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு அரண்மைனையில் வேகவேகமாக நடந்துவரும் பொழுது, அதுவரை அருந்திய விஷத்தின் காரணமாக சுழற்றிக் கொண்டு வரும் நிலையில், அவருடைய நடிப்பு அருமையாக வெளிப்பட்டிருக்கிறது.

படத்தின் சண்டைக்காட்சிகளில், முதன் முறை ராஜாவிற்கு இளவரசனுக்கும் நடக்கும் கத்திச் சண்டை நன்றாகயிருக்கிறது. பின்னர் மருத்துவரை கொன்றுவர அனுப்பப்படும் ராஜாவின் கொலையாளிகளின் உத்தி பிரம்மாதமாக படமாக்கப்பட்டிருக்கிறது. கடைசியில் நடைபெறும் சண்டைக் காட்சிகளில் மனம் செலுத்தமுடியாமல் கதையில் நான் ஊறிப்போயிருந்தேன்; இருந்தாலும் அவ்வளவாக ரசிக்கவில்லை.

எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள், சீனாவில் தயாரிக்கப்பட்டதிலேயே அதிக செலவில் தயாரிக்கப்பட்டதாம். இழைத்திருக்கிறார்கள் கிராபிக்ஸும் கண்களை உறுத்தவில்லை. ஆடை விஷயத்தில் ரொம்பவும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ராஜா மற்றும் ராணியின் Chrysanthemum Festival உடை பிரம்மாதம். ராணி மற்றும் ராணியின் வேலை பெண்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் Cleavage தெரியும் உடைகளைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை; சில சமயங்களில் ஆடைகளுக்குள் அடங்காமல் அலைகிறது உடல்.

இதுபோன்ற படங்கள் உங்கள் மனநிலையை பாதிக்காதென்றால் நிச்சயமாக ஒருமுறை பார்க்ககூடிய படம் தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s