கேர்ள் ப்ரண்டு தேவையா?

முதலில் ஒரு டிஸ்க்ளெம்பர், இது எந்தப் பதிவிற்கு பதில் சொல்லும் விதமாய் எழுதப்பட்ட பதிவில்லை; நல்ல ஒரு நாளில் இந்த விதமான எண்ணம் கொண்ட ஒரு பதிவெழுத முடிந்ததற்கு வேண்டுமானால் அந்தப் பதிவிற்கு நன்றிகள். நேரடியாய் விஷயத்திற்கு வருகிறேன்.

என்னிடம் கூகுளில் சாட்டிக் கொண்டிருக்கும் நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள். முதலில் உன்கிட்ட இருக்கும் ஈகோ போனால் தான் உனக்கு பெண் நண்பர்கள் கிடைப்பார்கள் என்று. சொல்லப்போனால் இது நான் புலம்பியோ(எனக்கு கேர்ள் ப்ரண்டேயில்லை) இல்லை அவர்களிடம் அட்வைஸ் கேட்டோ(கேர்ள் ப்ரண்டு எப்படிங்க கிடைப்பாங்க) கிடைத்த அட்வைஸ் கிடையாது. சரி போவுதுன்னு கிட்ட நெருங்கி அது என்னய்யா ஈகோ என்று கேட்டால் சொல்கிறார்கள்,

“வேறொன்னுமில்லை, ஏற்கனவே இதயத்தைக் கேட்டு வேலைசெய்ய ரஜினி இருக்காரு நான் மெலெருக்கிறதைக் கேட்டு வேலை செய்வேன்னு சொல்றியே! அதுதான் பிரச்சனை.”

“அப்ப மேலிருக்கிறதை நம்பி வேலை பார்த்தால் கேர்ள் பிரண்டு கிடைக்க மாட்டாங்களா?”

“யோவ் மேலிருக்கிறதை நம்பினா, நீ முட்டாளை முட்டாள்னு சொல்லணும், அழகில்லாததை அழகில்லைன்னு சொல்லணும், பிடிக்காததை பிடிக்கலைன்னு சொல்லணும், நல்லாயில்லாததை நல்லாயில்லைன்னு சொல்லணும் இல்லையா?”

“ஆமாம் அதுக்கென்ன…”

“அதனால் தான் உனக்கு கேர்ள் பிரண்டு கிடைக்க மாட்டேங்குது.”

இப்படிப்பட்ட பதில் வரும் ஒவ்வொரு சமயமும் நான் ஒரு விஷயம் சொல்லுவேன்.

“இங்கப்பாருங்கய்யா அதெல்லாம் கிடையாது, எல்லாம் நம்ம லுக்கு தான் காரணம். இந்த மொகரக்கட்டையைப் பார்த்தா எந்த பிகரு பிரண்டாகும். இருக்குற நாலு முடியும் கொட்டுறதுக்குள்ள கல்யாணம் பண்ணி வைச்சிடுங்கன்னு சொன்னா(அவரு எனக்கு ஒரு விதத்தில் உறவினர்) அதைக் கேட்காம கேர்ள் பிரண்டு புடின்னு சொன்னா எப்படி”

“இங்கத்தான் நீ தப்பு பண்ணுற, பொண்ணுங்களை தப்பா எடை போடுற. பொண்ணுங்க உன் தலையில் எத்தனை முடியிருக்குன்னு கணக்கு போட்டு பிரண்டாவதில்லை; மூளை இருக்கா இல்லையா அப்படிங்கிறத கணக்குப் போட்டுத்தான் பிரண்டாவாங்க.”

“அப்படின்னா?”

“மூளை இல்லைன்னா ஓக்கே இருந்தா ரிஜக்டட். அதுவுமில்லாமல் நீ பேச ஆரம்பிச்சா கேப்பே விடாம பேசிக்கிட்டேயிருப்ப; அப்புறம் உன்கூட பொண்ணுங்க எப்படி சிநேகிதமாகும். சொல்லு. ஏன்னா இது ஒரு வழிப்பாதை மாதிரி பொண்ணுங்க பேசுவாங்க நீ பேசக்கூடாது, அவங்க கேள்வி கேட்பாங்க நீ பதில் சொல்லக்கூடாது.

அதுவும் அவங்க செஞ்ச எதையாவது ஒன்னை காண்பிச்சு நல்லாயிருக்கான்னு கேட்டா; அதைப் புகழந்து அரைமணிநேரம் பேசணும். நீயோ குத்தம் குறையெல்லாம் சொல்லிட்டு கடைசியில் இத்தனையிருந்தாலும் உங்க பதிவு நல்லாயிருக்குன்னு அடிக்கிற ஜல்லியெல்லாம் அங்க நடக்காது.”

“அப்ப இன்டலக்சுவல் ப்ரண்ட்ஷிப் அப்படிங்கிறதே இல்லையா?”

“யோவ் நீ உதை வாங்கப்போற – பொண்ணுங்கக்கிட்ட இன்டலக்சுவலா பேசின அப்புறம் அவ்வளவுதான். கனவுலகத்திலேயே இருக்காதய்யா வெளிய வா! பறந்து விரிந்திருக்கும் இந்த உலகத்தைப் பார். எவ்ளோ பொண்ணுங்க இருக்கு உனக்கு ஏன் ஒரு கேர்ள் பிரண்ட் இல்லைன்னு யோசிச்சுப் பார்.”

“சரி இவ்வளவும் செய்றேன்னே வைச்சுப்போம் அதனால எனக்கு என்ன யூஸ்”

“ஆரம்பிச்சிட்டான்யா? உனக்கு கேர்ள் பிரண்டிறது முள் கீரீடமாயிருந்தாலும். வெளியில் இருந்து பார்க்கிறவனுக்கு அது மலர்க்கிரீடம். அதுவும் கொஞ்சம் அழகான ஸ்டைலான பிகர் மாட்டிக்கிச்சுன்னு வையேன். ‘யோவ் இவனுக்கு வந்த வாழ்வைப் பாருய்யான்னு’ பொழம்புவாங்கய் பாரு. அப்ப கிடைக்கிற திருப்தி ‘உங்களோட அந்தக் கதையைப் படிச்சேன். ச்ச எப்படிங்க அப்பிடி எழுதினீங்க சான்ஸேயில்லை.’ அப்படின்னு சொல்றதை விடவும் அதிகமாகயிருக்கும். ஏன்னா ‘நீங்க எழுதின கதையிலேயே அது ஒன்னு தான் தேறிச்சு’ அப்படிங்கிற உள்குத்து அதில் இருக்கும். ஆனால் உள்குத்தே இல்லாமல் பொறாமைப் படவைக்கும் கேர்ள் பிரண்ட் இருந்தால்.”

“அப்ப கேர்ள் பிரண்ட் வைச்சுக்கிறது மத்தவனை பொறாமப் பட வைக்கத்தானா?”

“இல்லையா பின்ன, எப்படியிருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கப்போறதில்லை. நைனா கழுத்தில் அருவா வைச்சிடுவார் இல்லையா. அதுவுமில்லாமல் கேர்ள் பிரண்ட்களை கல்யாணம் செஞ்சிக்கக்கூடாது. இல்லேன்னா கல்யாணத்துக்கப்புறம் டாமினேட் செய்ய முடியாது பாரு.”

“ஆனாலும் இதெல்லாம் மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துன கதையா இல்ல ஆய்டும் போலிருக்கு?”

“இங்கப்பாரு இந்த மூட்டைப் பூச்சி வீட்டைக் கொழுத்துறது மாதிரி விஷயத்தை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டுட்டு கேர்ள் பிரண்டு பிடிக்கிற வழியைப்பாரு.”

இப்படியெல்லாம் நண்பர்கள் அட்வைஸ் ஆயிரம் கொடுத்தாலும், நம்ம மூளை ஒத்துக்கவே மாட்டேங்குது. எனக்குத் தெரிந்து என்னுடன் சாட்டும் நண்பர்கள் அனைவருமே எனக்கு கேர்ள் பிரண்ட் கிடைக்காததற்கு ஆயிரம் காரணங்கள் இன்னமும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s