ஆறாம் விரல்களும் அர்த்தமற்ற முட்டாள்தனங்களும்

தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினிகள் தேவையா என்று யோசித்திருக்கிறேன், அப்படியே பாடல்களும். ஹீரோயினிகள் இல்லாமல் போய்விட்டால் நிச்சயமாய் பாடல்கள் நின்றுவிடும். எப்படிப்பட்டவையென்றால், சட்டுன்னு “எனக்குத்தேவை தமிழ்க்கலாச்சாரத்தோட ஒரு பொண்ணு” என்று சொன்னதும் “பல்லேலக்கா பல்லேலக்கா” என்று ரஜினிகாந்த், நயன்தாராக்களின் தொப்புள்களுடன் டான்ஸ் ஆடவேண்டிய அவசியம் இருக்காது. ரஜினிகாந்த் வாழ்க்கையை வெறுத்து “விடுகதையா இந்த வாழ்க்கை” போன்ற பாடல்கள் இதில் அடங்காது, அதெல்லாம் கொஞ்சம் சப்தமாகயிருக்கும் பின்னணி இசை என்று வைத்துவிடலாம் இல்லையா? ஆனால் தமிழ்ச்சினிமாவின் இன்றைய நிலை என்ன? பாடல்கள் ஹிட் ஆகாத எத்தனை படங்கள் வெற்றிகரமாக ஓடுகின்றன?

இது போன்ற காரணங்களால்; தமிழ் சினிமாவில் பாடல்கள் இருக்கலாமா கூடாதா என்பதை தீர்மானிக்க வேண்டியது யார்? ஓராயிரம் இன்டலக்சுவல்ஸா இல்லை தங்கள் கவலைகள் மறந்து, டிவிக்களின் ஆதிக்கத்தை ஒரு நாள் நிறுத்தி படம் பார்க்க வரும் கோடிக்கணக்கான மக்களா? சாரி கோடின்னு சொல்லிட்டனே நம்பர் சரிவருமா? இங்கே யாருக்காக திரைப்படம் எடுக்கப்படுகிறது என்ற கேள்வி பெரும்பாலும் எல்லா சமயங்களிலுமே கேட்கப்படுகிறது. ஆனால் பதில் தங்களுக்கு சாதகமானதாக இல்லாமல் இருப்பதால் பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. அர்பனைஸ்ட் ஏரியாக்கள் இல்லாமல் ரூரல் ஏரியாக்களாலும் இளைஞர்களாலும் தான் இன்று சினிமாக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

அவர்கள் எதிர்பார்ப்பது என்ன? என்று நான் சொல்லப்போனால் உனக்கெப்படி தெரியும் என்ற கேள்வி எழலாம். ஆனால் படம் ஓடுகிறதே! பாபா ஓடலையே!!! அதனால் மக்கள் தரமில்லாத தாங்கள் விரும்புவதைத் தராத சூப்பர்ஸ்டார் படங்களைக் கூட மக்கள் பார்ப்பதில்லை.

மற்ற குப்பைகளை விட்டுவிடுகிறேன்; என்னை எடுத்துக் கொள்ளுங்கள் எனக்கு பெண் பார்க்கிறார்கள் பார்த்த பெண்களில் இரண்டு பெண்களை எனக்கு சரிசமமாகப் பிடித்திருக்கிறது. ஒரு பெண் ஆத்தீகவாதி மற்றவள் நாத்தீகவாதி. நீங்கள் நினைக்கிறீர்களா நாத்தீகவாதியாகயிருப்பதால் நான் இன்னொரு நாத்தீகவாதியை விரும்புவேன் என்று. இருக்காது ஆத்தீகவாதியைத்தான் திருமணம் செய்வேனாயிருக்கும்; ஏனென்றால் ஆண்களுக்கு(க்ரூப் அடிக்கிறேன்னு நினைக்க வேண்டாம் என்னையும் சேர்த்து வேண்டுமானால் %) இன்டலக்சுவல் பெண்களைப் பிடிப்பதில்லை. டிகிரி முடிச்சதும் 2 வருஷம் சும்மா இருந்து, தையல், சமையல்னு கத்துகிட்டு கல்யாணத்துக்காகவே காத்துக்கொண்டிருக்கும் டிபிகல் தமிழ்ப்பெண்களைத் தான் பிடிக்கும். உண்மை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவோ இல்லை எழுதும்படியாகவோ இருக்காது. ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலகக்காரனாகவும்(இந்த விஷயத்தில் மட்டும்) MCP ஆகவும் இருப்பதால் இதுதான் உண்மை என்று சொல்லிக்கொள்கிறேன்.

அப்படி இருக்கும் பொழுது ரஜினிகாந்த் சர்ரியலிஸம் பேசிக்கொண்டு சார்த்தரையும், பெட்ரிக் நீட்ஷேவையும் துணைக்கிழுக்கும் ஒரு அறிவுஜீவி பெண்ணை அதாவது லாப்டாப்பை திறந்து “ஹாய் ஃபட்டி திஸ் ஈஸ் சிவாஜி! கூல்” என்று சொல்லி வாய்ஸால் பாஸ்வேர்ட் வைத்து திறந்து எப்படி கருப்புப்பணம் வெள்ளையாச்சு என்று சொன்னதாலும், கிங்காங்கையே கிழித்துக்கொண்டு வானத்தில் பறந்து சண்டை போடுவதாலும் தன் புருஷனை லீகலாகவும், இல்லீகளாகவும் ஒன்னும் செய்யமுடியாது என்று புரிந்து கொள்ளும் பெண்ணாகவும் இருந்துவிட்டால்; சாரி எக்ஸ்கியூஸ் மி மூணுமணிநேரம் படம் எப்படி காட்டுறது.(அப்பாடா ஃபுல்ஸ்டாப் பொட்டாச்சு) ரஜினிகாந்திற்கு நீங்கள் தான் ஒரு கதை எழுதுங்களேன் இப்படி.

நீங்க யாரும் “சிட்டி ஆஃப் காட்” படம் பார்த்திருக்கீங்களா? அதில் படம் முழுவதும் பெண்களே வரமாட்டார்கள் சொல்லப்போனால் காட்டப்பட்ட பெண்களுமே கூட வாழைக்காயை எப்படி பயன்படுத்துவது என்று கேட்கும்படியாய் கேவலமாய் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் உலகமெங்கும் “இன்டலக்சுவல்” சினிமா விமர்சகர்கள் ஆதரித்த படம். அது ஆண்களின் உலகம் அங்கே பெண்களுக்கு இடம் கிடையாது. அதுமட்டுமில்லாமல் அப்பட்டமான உண்மையைப் பற்றியது அந்தப்படம் என்ற ஜல்லிகள் அடிக்கப்படலாம். ஆனால் உண்மையை அப்படியே எடுத்துவிடலாமா? பாய்ஸில் சுஜாதா எழுதிய வசனங்களை தங்கள் காதுகளால் மால்களிலோ ஷாப்பிங் காப்ளக்ஸ்களிலோ எத்தனை பேர் கேட்டிருக்கவில்லை; சொல்லுங்கள். இங்கே பிரச்சனை அது இயல்பானதா உண்மையில் நடக்கக்கூடியதா என்பதில்லை. வாசகர்களுக்கு ஏதுவானதா? என்பதுதானே கேள்வி. ஞானிகூட கூறியது இதைத்தானே. (அந்தாளின் சுஜாதா கூறித்தான பர்ஸனல் ஜல்லிகளை விடுத்து)

இன்னமும் நாம் அஜீத்குமாரின், விஜய்-ன் ஆண்குறிகளின் அளவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் இளைஞர் சமுதாயத்தை நம்மகத்தே கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடவேண்டாம்(%). அவர்களுக்கு ஷாலினிகளைப் பற்றிய கேள்விகள் கிடையாது இதுதான் உண்மை. இப்படிப்பட்ட சமுதாயத்தை திருத்த வேண்டும்தான் அந்தவிஷயத்தில் இருவேறு கருத்து கிடையாது. ஆனால் எங்கிருந்து தொடங்கப்படவேண்டும் என்பதுதான் கேள்வி. சினிமாக்களின் லாஜிக் பற்றி பேசும் விமர்சனங்களில் இருந்தா? ஏசி தியேட்டர்களில் சாப்பிட்டு விட்டு, பாதியில் சினிமா தியேட்டரின் ஏசியை நிறுத்திவிட்டான் என்ற “கோட்”களுடன் இருக்கும் விமர்சனங்களை விடவும், “காசு கொடுத்தேன் ஏன்யா ஏசியை பாதி நிறுத்தின” என்று கேட்கப்படும் கேள்விகளால் சமுதாயம் திருந்தலாம்.

அரசியல் ரீதியான தீர்வாக இல்லாமல் போகும் எந்த ஒரு தீர்வும் வெற்றிபெற முடியாது இல்லாவிட்டால் ஆவிகளிடம் கேட்டுப் பார்க்கலாம்; இந்த சமுதாயத்திற்கான தீர்வை. ஏனென்றால் இப்பொழுதெல்லாம் இந்தியத் துணைக்கண்டத்தின் குடியரசுத்தலைவர்களையே தீர்மானிக்கும்/ தேர்ந்தெடுக்கும் அளவு சக்தி பெற்றவையாய் அவைகள் தானே இருக்கின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s