நீ எல்லாம் ஒரு பொம்பளையா?

 

சமீபத்தில் ஜூனியர் விகடனின் ஒரு கட்டுரையைப் படித்ததும் எனக்கென்னமோ இந்தத் தலைப்பு நினைவில் வந்தது. அதனால் வைத்திருக்கிறேன் அப்படியே. விஷயம் என்னான்னா நடிகை பத்மபிரியா இயக்குநர் சாமி நடிகைகள் விபச்சாரிகள் முகத்தில் முடி முகமூடி இது எதற்கும் இந்தப் பதிவிற்கும் சம்மந்தம் கிடையாது என்பது தான்.

சரி மேட்டருக்கு – நன்றி ஜூனியர் விகடன்

கர்ப்பமாக இருக்கும் மனைவியை அழைத்துக் கொண்டு பரிசோதனைக்கு சென்ற இடத்தில், ‘உனக்கு எய்ட்ஸ்’ என்று கணவனை பார்த்துச் சொல்கிறார்கள். அந்த அதிர்ச்சியில் கணவனை விட்டுப் பிரிந்துசென்ற மனைவி, கருவையும் கலைத்துவிட்ட நிலையில், ‘லேப் ரிசல்ட்டில் சொல்லப்பட்டது தவறான தகவல்’ என தெரிய வந்தால் எப்படி இருக்கும்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வாசுதேவன் புவனேஸ்வரி தம்பதியின் வாழ்க்கையில்தான் விதி இப்படி விளையாடி இருக்கிறது. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் மாவட்ட கலெக்டர் உதயசந்திரன் முயற்சியால் அந்தத் தம்பதி மீண்டும் இணைந்துள்ளனர்.

புங்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரிக்கும், மாரம்பாளையத்தைச் சேர்ந்த வாசுதேவனுக்கும் ஒரு வருடத்துக்கு முன்னால் திருமணம் இனிதே நடந்தேறி யுள்ளது. மண வாழ்க்கையின் விளைவாக புவனேஸ்வரி கர்ப்பம் தரிக்க… அருகாமையில் இருக்கும் விண்ணப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் பரிசோதனைக்கு சென்றுள்ளார்கள்.

மேற்கொண்டு நடந்த சம்பவங்களை வாசுதேவனே விவரிக்கிறார்.

‘‘என் பொண்டாட்டியை டெஸ்ட் பண்ணினப்ப, கூடவே எனக்கும் ரத்த பரிசோதனை செஞ்சாங்க. அப்பதான் இடிபோல அந்தத் தகவலை என்கிட்ட சொன் னாங்க. ‘உங்களுக்கு ஹெச்.ஐ.வி. பாஸிடிவ்’னு அவங்க சொன்னதைக் கேட்டு நான் அதிர்ந்து போயிட்டேன். எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத எனக்கு எப்படி இந்த நோய் வந்துச்சுனு குழம்பிப் போய் இருந்தேன். இருந்தாலும், என் பொண்டாட்டிகிட்ட எந்த விவரத்தையும் சொல்லலை.

கொஞ்சநாள் கழிச்சு அவளும், என் மாமியார் சரஸ்வதியும் டெஸ்ட்டுக்குப் போயிருக்காங்க. அப்ப, ‘உன் புருஷனுக்கு எய்ட்ஸ் இருக்கு. அன்னிக்கு ரத்தத்தை டெஸ்ட் பண்ணும்போது கண்டுபிடிச்சுட்டோம்’னு அங்க இருந்த ஊழியர்கள் சொல்லி இருக்காங்க. அதைக் கேட்டதும் மயக்கமாகி விழுந்துட்டா.

உடனே அவங்க அம்மா, ‘நோய் இருக்கற புருஷனோட நீ வாழக்கூடாது’னு அவங்க வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிட்டாங்க. அதோட, ஒரு தனியார் டாக்டர்கிட்ட போய் கர்ப்பத்தையும் கலைச்சுட்டாங்க. அதோட விட்டாங் களா… எய்ட்ஸ் இருக்கறதை மறைச்சுப் பொண் ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதா என்மேல சத்தியமங்கலம் மகளிர் காவல்நிலையத்துல புகாரும் கொடுத்துட்டாங்க.

புகாரை விசாரிச்ச எஸ்.ஐ., ‘‘என்கிட்ட ‘உன் மேல எஃப்.ஐ.ஆர். எதுவும் போடாம விட்டுடறேன். கல்யாணத்தப்ப போட்ட நகை, சீர்வரிசை எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்துடு’னு சொன்னாரு. அதை வாங்க எங்க வீட்டுக்கு வந்த மாமியார் நடுவீதியில நின்னு கூப்பாடு போட்டு எல்லாரையும் அசிங்கப்படுத்திட்டாங்க.

இந்த சம்பவத்தால எனக்கு ரொம்ப அவமானமா போச்சு. நேரா சத்தியமங்கலம் ஜி.ஹெச்சுக்குப் போய் ‘ஹெச்.ஐ.வி.’ டெஸ்ட் செஞ்சேன். டெஸ்ட்ல எனக்கு ஹெச்.ஐ.வி. இல்லேனு சொல்லிட்டாங்க. அப்பதான் எனக்குப் போன உசுரே திரும்ப வந்துச்சு. கோயம்புத்தூர் ஜி.ஹெச்&சுக்கும் போயி டெஸ்ட் செஞ்சேன். அங்கேயும் இல்லைனுதான் முடிவு வந்துச்சு. அப்படியும் விடாம, ஹெச்.ஐ.வி. இருக்கறதை உறுதிப்படுத்தற டெஸ்ட் டான ‘வெஸ்டர்ன் பிளாட்’ டெஸ்ட்டையும் அஞ்சாயிரம் செலவு பண்ணி செஞ்சேன். அதிலேயும் இல்லைனுதான் ரிசல்ட் வந்துச்சு’’ என்றார் வாசுதேவன்.

இவ்வளவு டெஸ்ட்களையும் கடந்த இரண்டரை மாதங் களாக செய்த வாசுதேவன், அனைத்து ரெக்கார்டுகளையும் எடுத்துக்கொண்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் உதய சந்திரனிடம் போயிருக்கிறார். நடந்த விவரங்களை கலெக்டரிடம் எடுத்து சொன்னவர்,

‘எனது மனைவியை நீங்கள்தான் என்னோடு சேர்த்து வைக்கவேண்டும். தவறான தகவல் தந்த விண்ணப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று முறையிட்டிருக்கிறார். கலெக்டரும் ஈரோடு ஜி.ஹெச்&சின் கண்காணிப்பாளர் டாக்டர் உசேன் அலியிடம், ‘விசாரணை செய்து உடனே அறிக்கை தாக்கல் செய்யும்படி’ உத்தரவிட்டிருக்கிறார்.

மேற்கொண்டு நடந்த சம்பவங்களை டாக்டர் உசேன் அலி சொன்னார். ‘‘கலெக்டர் உத்தரவு போட்டதும் நான் விண்ணப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போய் விசாரணை நடத்தினேன். அந்த விசாரணையில, வாசுதேவனுக்கு ஹெச்.ஐ.வி. இருக்கறதா தவறான ரிப்போர்ட் கொடுத்ததைத் தெரிஞ்சுகிட்டேன். பிரிஞ்சு போன தம்பதியை எப்படியாவது சேர்த்து வைக்கணும்னு கலெக்டர் சொல்லி இருந்ததால, அவங்க ரெண்டு பேரையும் ஒரே இடத்துக்கு வரச் சொல்லிப் பேசினேன். நடந்த சம்பவங்களை எல்லாம் புவனேஸ்வரிக்கு எடுத்து சொன்னதும், புரிஞ்சுகிட்டாங்க. அவங்க அம்மா சரஸ்வதிதான் கொஞ்சம் சமாதானம் ஆகலை. மூணு பேரையும் கலெக்டரோட கேம்ப் ஆபீஸ§க்குக் கூட்டிட்டுப் போனேன். தம்பதிக்கு ஆறுதல் வார்த்தை சொன்ன கலெக்டர் ‘ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும்’னு அட்வைஸ் செஞ்சு அனுப்பி வைச்சார்’’ என்றார்.

புங்கம்பள்ளியில் இருந்த புவனேஸ்வரியை சந்தித்தபோது, ‘‘என் புருஷன்கூட திரும்ப சேர்றதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த மாசத்துல நல்லநாள் பாத்து அவரோட வீட்டுல கொண்டுபோய் விடறதா சொல்லி இருக்காங்க. ஆனா, அவசரப்பட்டுக் கருவை கலைச்சதை நினைச்சுதான் கலங்கிப் போயிருக்கேன்’’ என்றார் ஈர விழிகளுடன்.

கலெக்டர் உதயசந்திரனை சந்தித்தபோது, ‘‘ஹெச்.ஐ.வி. இருப்பதாக ஒரு தவறான ரிப்போர்ட்டை கொடுத்திருக்கிறார் லேப் டெக்னீஷியன். அதனால ஒரு குடும்பத்துல என்னென்னமோ நடந்து போச்சு. தவறாக டெஸ்ட் செய்த லேப் டெக்னீஷியன் தாமஸ் தற்போது திருவள்ளூர் மாவட்டத்துக்கு மாற்றலாகி சென்றுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளேன். விரைவில் அந்தத் தம்பதிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தொகுப்பு ஊதிய அடிப் படையில் ஏதேனும் வேலை போட்டுத்தர ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.

இதற்கிடையே, ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் நாகராஜன், திருவள்ளூர் சென்றுவிட்ட தாமஸிடம் இப்பிரச்னை பற்றி விசாரணை நடத்தியிருக் கிறார். நம்மிடம் பேசிய நாகராஜன்,

‘‘தாமஸிடம் நான் விசாரித்ததில், ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. வாசுதேவன் ரத்தத்தை பரிசோதித்தபோது என்ன முடிவு வந்ததோ அதைத்தான் ரிப்போர்ட்டாக கொடுத்தேன்’ என்கிறார். ஆகவே எங்கு தவறு நடந்தது… இதில் வேறு ஏதாவது குழப்பங்கள் நடந்திருக்குமா என இலாக்காபூர்வ விசாரணை நடந்து வருகிறது. அது முடிந்த பிறகுதான் அடுத்து என்ன செய்வது என முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

சரி இதில் இருந்து நான் என்ன சொல்லவருகிறேன் என்பது போன்ற கேள்விகளில் இறங்கிவிடாதீர்கள். நான் சொல்ல வருவது ஒன்றுதான் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது ரொம்பவும் பழைய கான்செப்ட்; இப்பல்லாம் ஒரு பானை சோற்றை பதம் பார்க்க வேண்டுமென்றால் எல்லா பருக்கைகளையும் தான் பார்க்க வேண்டும்.

அந்தப் பெண்ணின் மீது தவறில்லை தான்; கணவனுக்கு எய்ட்ஸ் என்று தெரிந்ததும் விலகிச் செல்வது தவறாகச் சொல்லவில்லை அப்படியே மாமியாரின் தூண்டுதல்களையும்.

அப்ப என்னதாண்டா சொல்லவர்ற “இயக்குநரால் அடிவாங்கிய, அசிங்கப்படுத்தப்பட்ட பெண்ணைப் பற்றிய பதிவுகள் வரும் அதே வேளையில் இப்படி தான் தவறே செய்திராத பொழுதும் பழிவாங்கப்பட்ட ஆணைப்பற்றிய பதிவு வரணும் அதுக்காகவா” என்று கேட்டால் எனக்குப் பதில் தெரியவில்லை.

இன்னிக்கு புதன் கிழமை வழமை போல் பெங்களூரின் புகழ் கூறும் ஹோட்டல் Samarkhandற்குச் சென்று உண்டுகொழுத்து உறக்கம் கண்களைத் தழுவ வேலை தலைக்கு மேல் இருக்க தூங்கிவிடாமல்(எப்படி அர்த்தப்படுத்தினாலும்) இருக்க எழுதுறேன்னும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் எனக்கு உண்மையிலேயே எதற்காக இந்தப் பதிவு என்று விளங்கவில்லை.

Wed, 24 Oct 2007 09:53:00 GMT

சமீபத்தில் ஜூனியர் விகடனின் ஒரு கட்டுரையைப் படித்ததும் எனக்கென்னமோ இந்தத் தலைப்பு நினைவில் வந்தது. அதனால் வைத்திருக்கிறேன் அப்படியே. விஷயம் என்னான்னா நடிகை பத்மபிரியா இயக்குநர் சாமி நடிகைகள் விபச்சாரிகள் முகத்தில் முடி முகமூடி இது எதற்கும் இந்தப் பதிவிற்கும் சம்மந்தம் கிடையாது என்பது தான்.

2 thoughts on “நீ எல்லாம் ஒரு பொம்பளையா?

  1. ok..Then what is the point?..
    Ofcourse, you did accept that you don’t know..Well
    what can I say?

  2. எங்க ஊர் (ஈரோடு) கலைக்டர் 2007 ல முதல் ஆளா தேர்வு செய்ததில் தவறில்லை
    நல்ல மனிதர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s