அழகான பெண்கள் ஆபத்தானவர்கள் – புறநானூறு

வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே;
இயவரும் அறியாப் பல்லியம் கறங்க,
அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்;
அறன்இலன் மன்ற தானே-விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
தகைவளர்த்து எடுத்த நகையடு,
பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.

336. பண்பில் தாயே!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி துறை: பாற் பாற் காஞ்சி

இதுதான் நான் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் – இதற்கு சுஜாதா கொடுத்த நவீன கவிதை கீழே(சுஜாதா யாரு புறநானூற்றுக்கு உரை எழுத – அவர் எழுதியதில் அங்கே தப்பு இங்கே தப்பு – என்கிற புலவர்களுக்கு பதில் சொல்ல நான் கிடையாது ஆள் நான் வரலை அந்த விளையாட்டுக்கு.)

பெண் கேட்ட அரசன் கோபக்காரன்
பெண்ணின் தந்தையோ பொறுப்பற்றவன்
யானைகள் கடிமரத்தில் அமையாமல் சீறுகின்றன
வீரர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்
ஊரே கலக்கத்தில் இருக்கிறது
வேங்கைமலைக் கோங்கின் அரும்பு போன்ற
சிறிய முலைகளைக் கொண்ட
இந்தப் பெண்ணால்
பகை வளர்கிறது
தாய்க்குத் தெரியவில்லையே!

அகநானூறுக்கான அறிமுகம் போல் இல்லாமல் புறநானூற்றுக்கான அறிமுகம் இப்படி செய்யப்படுவதில் எனக்கும் மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. எந்த விஷயத்திலும் நம்ம டச் இருக்கணும் இல்லையா? இளையராஜா தேவாரத்துக்கு இசையமைச்சப்ப, மெட்டுக்கு தகுந்த பாட்டை தேர்ந்தெடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் போல் நான் இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். நாளைக்கு ஒரு நாள் – “அக்கா! அக்கா! என்றாய் அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம்” என்று சொன்ன ஆணாதிக்கவாதி பாரதிதாசன் புகழளவிற்கு இல்லாவிட்டாலும் நானும் கொஞ்சம் ஈயம் அடித்தேன் என்று தமிழ்கூறும் நல்லுலகம் சொல்லவேண்டுமல்லவா?

Fri, 28 Sep 2007 10:14:00 GMT

4 thoughts on “அழகான பெண்கள் ஆபத்தானவர்கள் – புறநானூறு

 1. பெண் என்றால் பிச்சைக்காரனும் பார்பான்,பெண என்பவள் காமபசியே பேக்கும் வெள்ளரிபிச்சிஆகிவிட்டாள அழகான பெண்கள் என்றுசெல்லுவதைவிட அழியும் ஆசை நாயகி ஆகிவிட்டது

 2. As a moth er, in nursing her sick children, gives rice and curry to one, sago and arrow
  root to another, and bread and butter to a third, so God has laid out for different men
  different paths suit able to their na tures. –
  He alone enters the Kingdom of Heaven who is not a thief of his own thought.
  In other words, guile less ness and simple faith are the roads to that Kingdom. –

 3. புற நானூற்றின் பல பாடல்கள் அன்றைய காலத்து மக்களின் மன நிலையை,
  அவர்கள் பிறந்து, வாழ்ந்து, இறந்து போன காலத்து நாகரீகம், பொருளாதாரம்,
  பண்பாடு, மற்றும் அறம், பொருள், இன்பம் பற்றி அவர்களது நோக்கு ஆகியவற்றையே
  பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்தல் வேண்டும்.
  மற்றும் ஒரு பாடலை எடுத்துக்கொண்டு, அதில் காணப்படும் அல்லது நமக்குத்தோன்றும் பொருளை இக்காலத்து வாழ்வினோடு ஒப்பிடுவது எத்துணை
  சரியெனத்தெரியவில்லை.

  இது இருக்கட்டும். இன்றைய சினிமாக்களில் குத்துப்பாட்டு எனச்சொல்லப்படும்
  பல பாடல்களை ( !) உதாரணம் காட்டி ஒரு 100 வருடங்கள் சென்றபின் அதாவது 2100 அல்லது 2200 ல் இதுதான் தமிழ் மக்களின் நாகரீகம் எனச்சொல்லவும் கூடுமோ?

  பண்பாடு அல்லது நாகரீக வளர்ச்சி என்பது ஒரு சமுதாயத்தின் மொத்த அல்லது அதிக பட்ச நிலையாகும். ஒன்றைக்காட்டி பலவும் இவ்வாறே என்பது சொல்வது சரியோ?

  பாட்டின் உட்கருத்து என்ன?

  “ஒரு பெண்ணின் அழகு, (அரசன்,ஆண்டி,அசுரன்,செல்வத்தோன்) எல்லோரையும் பரவசப்படுத்துவதால் எவரேனும் ஒருவரைத்தவிர மற்றோரது விரோதத்தை ஈட்டுகின்றது.
  ஆக, பெற்றோர்களே ! இதை மனதில் கொண்டு
  பொறுப்புடன் செயல்படுங்கள். ”

  அழகானவர்கள் ஆபத்தானவர்களா? அல்ல.

  ஆபத்தினை விளைவிப்பது, தீய எண்ணங்கள், தீய சொற்கள், தீய செயல்கள்.
  பெண்க‌ள‌ல்ல‌.
  பெண்க‌ள் ஒரு ச‌முதாய‌த்தின் க‌ண்க‌ள்.

  ப‌ரிதிமால‌ன்.
  சென்னை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s