சிவாஜி – ஷங்கர் அப்டேட்ஸ்

அதோ இதோ என்று… அமிதாப்பிலிருந்து அம்பாசமுத்திரம் அழகேசன் வரைக்கும் அத்தனை பேரின் பி.பி&யையும் எகிறவைத்த ‘தி பாஸ் & சிவாஜி’ ஜூன் 15 ரிலீஸ்! உற்சாகமாக இருக்கிறார் டைரக்டர் ஷங்கர். நெற்றியில் டென்ஷன் கோடுகள் மறைந்து, படு ரிலாக்ஸாக இருந்த ஷங்கருடன் தி.நகர் அலுவலகத்தில் ஒரு மாலை நேர தேநீர் சந்திப்பு!

‘‘ரஜினி, சிவாஜி… வித்தியாசம் என்ன?’’

‘‘சிவாஜிங்கிறது ரொம்ப பவர்-ஃபுல்லான பெயர்! ஒரு மாவீரனோட பெயர். ஒரு மாபெரும் நடிகரோட பெயர்; ரஜினி சாரோட ஒரிஜினல் பெயர். இப்படிப் பல விஷயங்கள் ஒண்ணா அமைஞ்சதால படத்துக்கு சிவாஜிங்கிற பேர் முடிவா-கிடுச்சு. ரஜினி-யைப் பத்தி உங்களுக்கே தெரியும். எத்தனை உயரத்துக்குப் போனாலும், அந்த கர்வம் தலைக்கேறாம, ரொம்ப இயல்பா, அமைதியா, சிம்பிளாக இருக்-கிறவர். அதுவே, சிவாஜியா மாறிட்-டார்னா அந்த ஃபயர்… அதோட வீச்சு மிகப் பெரிசா இருக்கும். அதிரடி, ஃபுல் ஆக்ஷன், வேகம், காமெடின்னு ஆளே பரபரன்னு மாறிடுவார். ஸோ, ரஜினிக்கும் சிவாஜிக்கும் ரொம்பவே வித்தியாசங்கள் இருக்கு. இப்படி ஒரு ஆள் வந்து, இப்படி ஒரு நல்ல விஷயம் நடந்தா, எப்படி இருக்கும்னு ஜனங்களை யோசிக்க வைக்கிறவர் தான் சிவாஜி. துடிப்பான, துறுதுறுப் பான, அதேசமயம் ஜாலியான பர்ஸ-னாலிட்டி. நல்லது செய்யணும்னு ஒருத்தர் கிளம்பும்போது, அதுக்கு ஏகப்பட்ட தடைகளும் குறுக்கீடுகளும் வந்தால், ‘அடப்போ! அப்படியாவது நல்லது செய்யணுமா’ன்னு ஒரு அலுப்பும் சோர்வும் பொதுவாவே யாருக்கும் வருமில்லையா… அப்படி வராம, எத்தனை தடைகள் வந்தா லும், நல்லது செஞ்சே தீருவேன்னு களத்துல இறங்குறவர்தான் சிவாஜி!’’

‘‘ரஜினி, ஏவி.எம், ஷங்கர் கூட்டணி ஃபார்முலா எப்படி வொர்க்–&அவுட் ஆகியிருக்கு?’’

‘‘இன்னிக்கும் பிரமாண்டமான படம்னா ‘ஜெமினி’யின் அந்தக் காலத்து ‘சந்திரலேகா’வைத்தான் குறிப்பிட்டுச் சொல்ல முடியுது இல்லையா… அதே மாதிரி ஏவி.எம். நிறுவனம் பிரமாண்டமான ஒரு படம் பண்ணணும்னு நினைச்சுது. கதையோட போக்குல எந்த காம்ப்ர மைஸ§ம் பண்ணிக்காம எல்லோருமே ரொம்ப உழைச்சிருக்கோம்!’’

‘‘சரி, ஏன் இத்தனை நாட்கள்? நீங்க நினைக்கிற பர்ஃபெக்ஷனோட படம் வந்திருக்கா?’’

‘‘பெரிய பெரிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நட்சத்திரங்கள், கான்-செப்ட்னு ஒவ்வொண்ணையும் யோசிச்சு யோசிச்சு செதுக்கினதுல ஒன்றரை வருடம் வரை ஆகிடுச்சு. நம்ம கற்பனைக்கு எல்லையே கிடையாது! அதை ஸ்கிரீ-னுக்கு மாத்துறதில்தான் பல சிரமங்கள் இருக்கு. நாம நினைச்ச இடங்கள் அமையாமல் போகலாம்; எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காமல் போகலாம். இதை எல்லாம் கடந்து படைப்பு உருவாகி வருவதில், ஒரு சந்-தோஷ வலி! நம்ம மனசில்இருப் பதில் 60 சதவிகிதம் கிடைச்-சாலே போதும், அதுவே பெரிய விஷயம். என்னு-டைய எல்லாப் படங்களிலும் இதேமாதிரிதான். எந்தப் படத்திலும் முழுத் திருப்திங்-கிறது வராது. என்ன ஒண்ணு, என்னுடைய மற்ற படங்கள்ல கிடைச்ச அளவு திருப்தியில் கொஞ்சம் கூடுதல் சதவிகிதம் சிவாஜியிலே கிடைச்சிருக்குன்னு சொல்லலாம்!’’

‘‘நதிகள் தேசியமயமாக்கல்தான் சப்ஜெக்ட்னு ஒரு பக்கம், அது இல்லை… இன்றைக்கு இருக்கிற கல்விச்சூழல்தான் சிவாஜியோட சப்ஜெக்ட்டுனு ஆளாளுக்கு ஒரு கதை பேசிட்டிருக்காங்களே… இப்பவாவது சொல்லுங்க, சிவாஜி என்ன கதை?’’

‘‘அதுவும் இருக்கு; அதுக்கு மேல யும் பல விஷயங்கள் வந்துட்டிருக்கு. கதை ஒரு பக்கம் சீரியஸாக நகர்ந்-துட்டு-இருக்க… சைடுலேயே குடும்பம், ஸ்ரேயாவோட லவ்வுன்னு ஜாலி காமெடிகளும் இருக்கு. ஸ்ரேயா பெயர் தமிழ்ச்செல்வி. ஹோம்லியான ரோல். கதையோட திருப்பத்துக்கு முக்கியமான கேரக்டர் ஸ்ரேயா வுடையது. ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா பண்ணியிருக்காங்க. ஜூன் 15&ம் தேதி முழுக் கதையும் தெரிஞ்சுடுமே!’’

‘‘சிவாஜி பத்தி சிவாஜிராவ் என்ன சொல்றார்?’’

‘‘எல்லாத் தரப்பினரையும் திருப்தி செய்யக் கூடிய படம்னு சந்தோஷப் பட்டார். இந்த மாதிரி ஒரு படம் இதுவரைக்கும் நான் செய்ததில்லை, இப்படி ஒரு காட்சியில நடிச்சதில்லை, இந்த மாதிரி ஸீன் இருந்ததில்லைன்னு ஒவ்வொரு காட்சியிலயும் ஆச்சர்யப் பட்டார். ஸ்டன்ட் காட்சிகள்லயும் இது-வரைக்கும் செய்யாத வேலைகளை இதுல செய்திருக்கார். அவருக்கு ரொம்பவே சந்தோஷம்.’’

‘‘ரஜினி படம்னு சொன்ன-வுடனேயே ஆளாளுக்கு பன்ச் டயலாக் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க… படத்துல வருகிற ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்களேன்?’’

‘‘சிவாஜியில பன்ச் டயலாக் கம்மிதான். ஆனா,

‘சச்சின் அடிச்சா சிக்ஸருதான்டா
சிவாஜி அடிச்சா பஞ்சர்தான்டா..!
சிங்கம்கூட ஜுஜுபிதான்டா…
சிவாஜி வாயில ஜிலேபிதான்டா!’ன்னு பாட்டுலேயே பன்ச் டயலாக்கையும் சேர்த்துட்டோம்.’’

‘‘எம்.ஜி.ஆர்.கேரக்டர்ல ரஜினி வர்றாராமே?’’

‘‘ஒரு பாட்டு ஆரம்பத்துல, வித்தியாசமான ஒரு தோற்றம் ரஜினிக்குத் தேவைப்பட்டது. என்னன்னவோ யோசிச்சோம். கடைசி-யில, எம்.ஜி.ஆர். மாதிரி ரஜினி வந்தா நல்லா இருக்கும்னு பட்டுது. பளிச்சுனு வெச்சுட்-டோம். ஒரு சின்ன ஸீன்தான் அது!’’

‘‘ ‘தி பாஸ்’ன்னா என்ன பாஸ்?’’

‘‘சிவாஜி வேகமான ஒரு கேரக்டர்ங்கிறதால அப்படி ஒண்ணு வெச்சிருக்-கோம். THE BOSSன்னா The Bachelor of Social Service. பாஸூன்னதும் ஏதோ கொள்ளைக் கூட்ட பாஸ்னு நினைச்-சிடக் கூடாது பாருங்க. அதுக்காகத்-தான் அர்த்தத்தையும் படத்துல சொல்லிட்டோம்!’’ – சிரிக்கிறார் ஷங்கர்.

நன்றி விகடன்

6 thoughts on “சிவாஜி – ஷங்கர் அப்டேட்ஸ்

 1. ///////
  It seems, the release date is rescheduled to June 30th.
  ///////

  Nalla Kilappuraangappa Beethaiyaaa . . .

 2. //சச்சின் அடிச்சா சிக்ஸருதான்டா
  சிவாஜி அடிச்சா பஞ்சர்தான்டா..!//

  முதல் வரி பொய்யாயிடுச்சு. ரெண்டாவதாவது பலிக்கட்டும்.

 3. பத்திரிகைகளுக்கும் சூடு சொரணை இருக்கிறதோ என்னவோ. இந்த ஷங்கர், மணிரத்தினம் போன்றவர்கள் சரியாக தனது படம் ரிலீஸாவதற்கு முன்னாடி ஒவ்வொரு பத்திரிகைக்கும் பேட்டி கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். படம் ஓடவில்லையென்றால் பத்திரிகைகளை குறை கூறவும் ஆரம்பித்துவிடுவார்கள்.

  அதுசரி, தங்கர் பேட்டியை C&P பண்ணவில்லையா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s