ஷ்ஷ்ஷப்பா இந்தப் பெண்கள்!!!

வெட்டி நாயம், ஊர்ப் பஞ்சாயத்து, புரளி கிளப்புறது இப்படி இந்தத் தேவையில்லாத விஷயங்கள் எல்லாம் பெண்கள் தான் செய்வார்கள் என்ற நம்பிக்கை இதுநாள் வரையில் மூடநம்பிக்கை என்றே நினைத்து வந்திருந்தேன். ஆனால் அப்படியில்லை என பலசமயம் ப்ராக்டிகலாக பட்டு புரிந்து கொண்டாலும்; அப்படி இருக்கக்கூடாதென்றே நினைத்தும் வந்திருக்கிறேன்.

இப்பொழுது இப்படிப் புறம் பேசியதால் அமேரிக்காவில் நான்கு பெண்களுக்கு வேலை போயிருக்கிறது. என்னைக்கேட்டால் இந்தச் செயலை வரவேற்று நம் நாட்டிலும் நடைமுறைப் படுத்தினால் நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறேன். ஊர் நல்லாயிருக்குமோ தெரியாது வேலையிடம் நல்லாயிருக்கும்.

“Gossip, whispering, and an unfriendly environment are causing poor morale and interfering with the efficient performance of town business.”

இதை நான் நிச்சயமாய் ஒப்புக் கொள்கிறேன்.

உண்மை நியூஸிற்கு – இங்கே கிளிக்கவும்

5 thoughts on “ஷ்ஷ்ஷப்பா இந்தப் பெண்கள்!!!

 1. அது சரி, பச்சை சட்டை போட்ட வழுக்கை மாமா என்னத்த அப்படி தரையில விழுந்து கஷ்டபட்டு படம் புடிக்கிறாருங்க?
  🙂

 2. //அப்படி தரையில விழுந்து கஷ்டபட்டு படம் புடிக்கிறாருங்க?//

  அதைத்தான் நான் எடிட் செய்து விட்டேனே! நான் போட்டிருக்கிற படத்தில் அப்படித் தெரியவில்லை என்றே நினைக்கிறேன் 😉

 3. நீங்க என்னதான் எடிட் செய்தாலும், இந்த மாதிரி வேளையில நம்ம கற்பனா குதிரைய அவிழ்த்து விட்டா எல்லா விஷயங்களையும் யூகிச்சி கண்டு பிடித்திடுவாருங்க. 🙂

 4. “பூனையாக இல்லாமல் போனதன் சோகங்கள்” – என்ன இது வினோதமா இருக்கு…? ஏதாவது பின் நவீனத்துவமா..?

 5. அது ஒரு பெரிய கதைங்க ஆழியூரான்.

  நான் ஆரம்பத்தில் “நான் கதையெழுத நினைத்தக் கதை” அப்படின்னு ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். அதனோட முடிவு வரிகள் இப்படியிருக்கும்.

  “ஆனால் நான் நிச்சயம் ஒரு சிறுகதை எழுதுவேன், நேரத்தை பொறுத்து, க்யூபிற்குள், உட்கார்ந்தால் உலகத்தை மட்டும் அல்ல, நம்மையுமே மறக்க வைக்கும் இந்த வேலையின் பளுவில், எதைப்பற்றி எழுதலாம் என்பதில் தான் சில சிக்கல்கள் வரும். ஏனென்றால், சூடு போட்டுக்கொள்ள பூனையாகக் கூட இல்லாத சோகம்தான் என்னுடையது.”

  புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்ட கதையென்று சொல்வோமில்லையா? ஏன் பூனைன்னு கேட்டீங்கனா பூனை புலி எல்லாம் ஒரே பேமிலி.

  அதனால பூனைக்கு சூடுபோட்டுப் பார்க்கிற அளவுக்காவது உரிமை உண்டு புலியைப் போல்; ஆனால் மற்றவர்களுக்கு இல்லை.

  அதேபோல் எழுத்தாளனாவோவற்கோ இல்லை எழுத்தாளனைப் போல் சூடுபோட்டுக் கொள்வதற்கோ கூட எனக்கு அருகதையில்லை என்று என் முதல் முதல் அறிமுகத்தில் எழுதியது.

  இப்பொழுது அருகதை இருக்கிறதா இல்லையா என்ற விஷயத்தை ஓரம் கட்டிவிட்டு; இங்கே இந்தப் பதிவில் நான் எழுதும்/காப்பி பேஸ்ட் செய்யும் விஷயங்கள். அப்படி சூடுபோட்டுக்கொள்ளக் கூட அருகதையில்லாத காரணத்தால் என்னுடைய “இருத்தலுக்காக” நான் செய்து கொள்ளும் சமரசம் தான் இந்தப் பதிவு. அதற்கான வார்த்தைகள் தான் “பூனையாக இல்லாமல் போன சோகங்கள்” என்பது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s