முதுகு சொறியத்தானா பெண்கள் சுஜாதா ஜல்லி

என்னடாயிது பழைய மேட்டரை இப்பத்தான் படிச்சிருப்பான் போலிருக்கு என்று நினைக்காதீர்கள். வெள்ளிக்கிழமை விகடன் upload ஆகும்வரை refresh, refresh, மீண்டும் refresh பண்ணி பார்த்து முதலில் கற்றதும் பெற்றதும் படிப்பதுதான் இன்றுவரை வழக்கம். பிறகு, அப்படியே உலக சினிமா, ஓ பக்கங்கள், அப்புறம் கொஞ்சம் சினிமா கடைசியில் மதன் பார்ப்பது உண்டு. இப்பல்லாம் விகடன் ஜோக்ஸ் படிக்கிற அளவிற்கு டைம் கிடைப்பது இல்லை.

சரி மேட்டருக்கு, கீழிருப்பது சுஜாதா எழுதியது. ஏன்னா இப்ப இதையெல்லாம் சொல்லிடணும் இல்லைன்னா அவ்வளவுதான்.

சில வாரங்களுக்கு முன், ஒரு புது மணத் தம்பதியரைப் பற்றி எழுதியிருந்தது வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அவர்களை மறுபடி ஒரு ‘கெட் டு கெத’ரில் சந்தித்தேன். நண்பர் ஒருவரின் குட்டிக் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா.

‘‘உங்ககிட்டருந்து எப்ப நற்செய்தி?’’ என்றேன்.

‘‘என்ன சார்… கல்யாணமாகி ஆறு மாசம் தான் ஆச்சு!’’ என்றான்.

‘‘இன்னும் மூணு வருஷத்துக்கு இல்லை சார்!’’ என்றாள் அவன் மனைவி.

‘‘சரி, எப்படிப் போயிட்டிருக்கு லைஃப்?’’

‘‘ஃபர்ஸ்ட் க்ளாஸ்! கல்யாணம் ஆனதிலிருந்து, என் முதுகில இருந்த அரிப்பெல்லாம் போயிடுச்சு சுஜாதா சார்!’’ என்றான்.

நான் அவன் மனைவியை வியப்பாகப் பார்க்க, ‘‘தினம் ராத்திரியானா இவருக்கு முதுகு சொரிஞ்சு விடணும்’’ என்றாள்.

‘‘என்ன சார் பண்றது… முதுகில் ஒரு ஏரியா இருக்கு. இன்னொருத்தர் உதவி யில்லாம தொடவே முடியாது! விசிறிக் கட்டை, பால்பாயின்ட் பேனான்னு என்ன என்னவோ வச்சு ட்ரை பண்ணாலும் அணுகவே முடியாது. மனைவிதான் சரி!’’ என்றான்

நான் யோசித்துப் பார்த்ததில், அவன் சொல்வதில் உண்மை இருப்பது புரிந்தது.

‘‘சுவத்தில் வச்சுத் தேச்சுக்கலாமே?’’

‘‘ம்ஹ¨ம்! அதுல ஒரு ‘கான்கே விட்டி’ இருக்கு. சில பேர் இதுக் குன்னே கல்யாணம் பண்ணிக்கிறாங்க தெரியுமா?’’

‘‘சேச்சே! டூ மச்!’’

‘‘ஆமா சார்! இவர் இதுக்காகத்தான் முக்கியமா என்னைக் கல்யாணம் செய்துட்டிருக்கார். அதுக்கும்…’’ என்று அவள் அவனைப் பார்க்க,

‘‘வெந்தயக் குழம்புக்கும்’’ என்றான் அவசரமாக. ‘‘அதுக்கு நன்றிக் கடனா என்னவெல்லாம் செய்யறேன்… சொல்லும்மா சார்ட்ட…’’

‘‘ஒண்ணும் பண்றதில்லை. 24 மணி நேரமும் கிரிக்கெட் பார்த்துண்டிருக்கார். எல்லாம் பழைய மேட்ச்!’’

‘‘ஏய்… உள்பாவாடையை ஒட்டப் பிழியணும்னா என்னைத்தான் கூப்பிடுவா!’’

‘‘வாஷிங்மெஷின்ல ஸ்பின் டிரை யர் வேலை செய்யலை. அதனால..!’’

‘‘அப்புறம், சாக்கடை குத்த?’’

‘‘சாக்கடை அடைச்சுண்டா முனிசி பாலிட்டியையா கூப்பிடறது?’’

‘‘ஒரு முதுகு சொரிய எத்தனைப் பாடு பார்த்தீங்களா? ஆனா சார்… இட்ஸ் ஆல் வொர்த் இட்! நடு முதுகுல சொரியறது இருக்கு பாருங்கோ… சொர்க்கம்! பாதாம் பர்பி, மதுரை மணியுடைய ரஞ்சனிக்கப்புறம் இதுலதான்…’’

அதிர்ஷ்டக்காரர்கள்!

——————————-

எனக்குத் தெரிந்து திருச்சி பக்கத்தில் மொக்கைங்கிற வேர்ட் உபயோகப்படுத்துறதில்லை, ஞானசேகர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் இந்த வார்த்தையை. அவருக்கு மொத்த தமிழ்மணம் கண்டெண்டும் மொக்கைதான். (என்னையும் சேர்த்து)

மொக்கை என்றால் என்ன? ப்ளீஸ் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுமாறு தெரிந்தவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

4 thoughts on “முதுகு சொறியத்தானா பெண்கள் சுஜாதா ஜல்லி

 1. :)))
  மொக்கைய போட்டுட்டாரா வாத்தியார்.

  நம்ம வெளிகண்ட நாதர் பதிந்திருந்தார்.

 2. சிறில் ஆமாம்,

  என்னைப் போன்ற பெண்ணியவாதிகளே(;)) கண்டுக்காட்டாட்டி, அப்புறம் எப்படி. அதான்.

  அனானிமஸ், சொன்னதெல்லாம் சரி உர்ல் கொடுக்கிறது.

  உஷா,

  என்ன சொல்வேன் வாத்தியார் அடிக்கடி சொல்வார், தன்னைப் பார்க்கவரும் முகம் தெரியாதவர்கள் அடிக்கடி கேட்கிற கேள்வியென்று ஒன்றை அதுதான் நினைவில் வருகிறது.(ஹிஹி)

  “உங்களுக்கு எப்படி சார் இதையெல்லம் எழுதுறதுக்கு டைம் கிடைக்குது.”

  PS: வாத்தியாருடன் என்னை ஒப்பிட்டுக்கொண்டதற்கு வாசகர்கள் மன்னிக்கவும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s