என்னுடைய கதை ஹாலிவுட்டில்

உண்மையில் இந்தத் தலைப்பைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சியாகியிருந்தீர்கள் என்றால், நானும் அது போன்ற ஒரு சூழ்நிலைக்குத்தான் தள்ளப்பட்டேன் Deja vu படம் பார்த்த பொழுது. படம் ஒருவாறு இதைப் பற்றியதாகத்தான் இருக்கும் என்று நினைத்துச் சென்றிருந்தாலும் ஒருவாறு நான் உபயோகப்படுத்த நினைத்த கதை. தனித்தனியாக, பிக் பேங்ஸ், ஸ்டிரிங் தியரி, வார்ம் ஹோல் என்று அந்தக் கதையெழுத நிறைய படித்திருந்ததால் கொஞ்சம் போல் நிறைய விஷயங்கள் புரிந்தது. டாப் கன், எனிமி ஆப் த ஸ்டேட் என எனக்குப் பிடித்த பல படங்களில் இயக்குநர் டோனி ஸ்காட்.

543 மூன்று பேர் பயணமாகும், ஒரு பெரிய போட் இல்லை சிறிய கப்பல் உண்மையில் ஒரு Ferry. வெடித்துச் சிதறுவதில் தொடங்குகிறது இந்தப் படம். Bureau of Alcohol, Tobacco, Firearms and Explosives ல் இருந்து இதைப் பற்றி விசாரணை செய்யவரும் டென்ஸல் வாஷிங்டன். அதில் இருக்கும் ஒரு உடல் ஏற்கனவே அதாவது அந்த Ferry வெடிப்பதற்கு முன்பே கொல்லப்பட்டு ஆனால் உண்மையில் அந்த Ferry-ல் வெடித்திருந்தால் உடலுக்கு என்ன பாதிப்பு வருமோ அந்தப் பாதிப்பை ஏற்படுத்தி Ferry-ன் உள் வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்ததும் படம் விறுவிறுப்பாகிறது.

இந்த இடத்தில் தான் மக்கள் டைம் மெஷின் கான்சப்டை வைக்கிறார்கள், முந்தைய படங்களைப் போலில்லாமல் அதிக டெக்னிக்கல் வார்த்தைகள். பின்னொரு காலத்தில் கண்டறியப்படும் சாத்தியக்கூறுகளை மட்டும் வைத்து சாத்தியப்பட்டதாகக் காண்பிக்கிறார்கள். இதற்கு மேல் படம் எடுத்தவர்களுக்கே டைம் கான்சப்ட்டில் உள்ள பிரச்சனை நன்றாகத் தெரிகிறது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் கடேசியில் செத்துப்போன டென்ஸல் வாஷிங்டன் உயிருடன் வருவது. ஆனால் இதையெல்லாம் நான் தவறென்றும் கூறமுடியாது.

ஏனென்றால் இதுவரை கண்டறியப்படாத ஒரு விஷயம் கண்டறியப்பட்டால் என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது அல்லவா. கொஞ்சம் புரிகிறது போல் சொல்லவேண்டுமானால், நீங்கள் டைம் மெஷினை உபயோகித்து பழங்காலத்திற்குப் போகிறீர்கள் என்றால் அங்கே செய்யப்பட்ட மாற்றம் எப்பொழுது நிகழ்காலத்தை அபெக்ட் செய்யும். உடனேயா இல்லை நடந்த வரலாறு அப்படியே இருக்க இன்னொரு புதிதான வரலாறு எழுதப்படுமா, சாப்ட்வேர் இண்டஸ்டிரியில் சாப்ட் டெலிட் என்றொரு விஷயம் உண்டு அதைப்போல்.

எதையும் டெலிட் செய்யாமல் இந்த நிமிடத்தில் இருந்து இது இல்லை, புதிதான ஒன்று தான் முன்பிருந்தது என்பதைப் போல் செய்யமுடியுமா? சாத்தியக்கூறுகள் உண்டா? தெரியவில்லை. ஆனால் அதைத்தான் முடியுமென்கிறார்கள் இந்தப்படத்தில். நிறைய விஷயங்கள் உழைத்திருக்கிறார்கள். டென்ஸல் முதன்முதலில் வீட்டிற்குப் போகும் பொழுது கையுறை அணிந்திருப்பார், படத்தின் வரிசைப் படி அவரிடம் பேசும் டிடக்டிவ் ஏன் கையுறை அணியாமல் போனாய் என்று கேட்பார் அதைப்போலவே, கொலைகாரனின் வீட்டை டென்ஸல் வாஷிங்டன் முதல் முறை அடையும் பொழுதே ஆம்புலன்ஸ் நிற்கும். இப்படி நீங்கள் டைம் மிஷின் துணை கொண்டு முன்காலத்திற்குச் சென்று திரும்பினால் நிகழ்காலம் மாற்றப்படும் என்று ஒவ்வொரு பகுதியிலும் நினைத்து நினைத்துச் செய்தவர்கள். டென்ஸல் செத்துப்போன பிறகு உயிரோடு ஒன்றும் நடந்தது தெரியாது போல் வருவது டைரக்டரின் குழுப்பம்.

ஒரே சமயத்திலேயே நிகழ்காலத்திலும் இருந்துகொண்டு கடந்தகாலத்தையும் பார்க்க முடிவது போல் டென்ஸல் செய்திருக்கும் காட்சிகள் கான்செப்ட் அளவில் அருமை. படத்திலும் நன்றாக வந்திருக்கிறது. கொஞ்சம் டைம் மெஷின், மற்றும் காலத்திற்கு முன்னர் செல்வது போன்றவற்றில் பழக்கம் உள்ளவர்கள் தங்கள் கான்செப்டை படத்தின் இயக்குநரின் கான்செப்ட்டுடன் ஒப்பிட்டுப்பார்க்க நிச்சயம் படத்திற்குச் செல்லலாம். இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கும் விதம் பிரமாதம் என்று தான் சொல்லவேண்டும் நிறைய உழைத்திருக்கிறார்கள்.

இன்னுமொறு டைம் மெஷின் பற்றிய கதையை எழுதவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டார்கள். ஹிஹி.

4 thoughts on “என்னுடைய கதை ஹாலிவுட்டில்

 1. உங்க கட்டுரையே தலைய சுத்துதே படம் பாத்தா அம்பூட்டுத்தான்.

  🙂

  ஆக்சன் எல்லாம் எப்டி இருக்குது?

 2. ஏறக்குறைய மூன்று வருடங்களாக – மார்ச் 2004-இல் இருந்து – என் வலைப்பதிவிற்கு பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் என்று தலைப்பு வைத்திருக்கிறேன். மஹாகவி பாரதியார் வரிதான். ஆனால் நான் பயன்படுத்தி வருகிறேன். சமீபத்தில் குமுதம் தீராநதியில் பார்த்தால் பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் என்ற தலைப்பில் அ.மார்க்ஸ் தொடர் வந்திருக்கிறது. பத்திரிகைக்காரர்கள்/எழுத்தாளர்கள் இணையம்/வலைப்பதிவு படிக்கிறார்கள். பார்த்துவிட்டுத்தான் எடுத்திருப்பார்கள். கேட்டால் நம்மை ஒரு ஜந்து மாதிரி பார்த்து, உங்கள் வலைப்பதிவு பக்கமே வந்ததில்லை என்று கைமேல் சத்தியம் செய்வார்கள். இல்லையென்றால், அப்படித்தான் என்றால் என்ன, உங்கள் சொந்த வரியா, பாரதியாரின் வரிதானே, யார் பயன்படுத்தினால் என்ன என்பார்கள்.

  இன்னொரு உதாரணம். ஜெயகாந்தனுக்கு ஞானபீட பரிசு கொடுத்தபோது குடியரசுத் தலைவர் பேசியதன் தமிழாக்கத்தை திண்ணை.காமில் தட்டச்சு செய்து வெளியிடச் செய்தேன். அதில் அவர் மிஜோரமில் கேட்ட பாடல் ஒன்றைச் சொல்லியிருப்பார். சில வாரங்களில் குமுதம் அரசு பதில்களில், சமீபத்தில் படித்த நல்ல கவிதை என்றோ ஏதோ கேள்விக்குப் பதிலாகவோ அந்தக் கவிதையின் தமிழாக்கம் அப்படியே வந்திருந்தது. குடியரசுத் தலைவர் பேசியதில் இருந்து எடுக்கப்பட்டதாகச் சொல்லி. குடியரசுத் தலைவரின் பேச்சு ஆங்கிலத்தில் இருந்தது. தமிழாக்கம் சிற்பியால் செய்யப்பட்டு, பிரசுரமாக வெளிவந்து, பின்னர் திண்ணையிலும் வெளிவந்தது. இதையெல்லாம் சொல்லிவிட்டால், அப்புறம் மற்றவர்களைப் பாராட்டுவதுபோல ஆகிவிடுமே. நம்முடைய பெரும்பத்திரிகைகள் / பெரும்பத்திரிகையாளர்களின் எத்திக் இப்படித்தான் இருக்கிறது – கலகக்காரர்களில் இருந்து காசு பார்ப்பவர்கள் வரை.

  இப்படி நிறைய இருக்கு சாரே. நம்ம ஊருக்குள்ளயே. நீங்க ஹாலிவுட்டுக்குப் போயிட்டீங்க. அங்க காபி அடித்தாலாவது கேஸ் போட்டு மில்லியன் கணக்கில் நஷ்டஈடு வாங்கலாம். இங்கே மன்னிப்பு கூட கேட்க மாட்டார்கள். பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

  – PK Sivakumar

 3. பி.கே எஸ் சொன்னதும் நினைவுக்கு வருது..

  ஒருநாள் கல்லுரி விடுதியில் இரவு உணவு நேரம் சில தமிழ் டிப்பர்ட்மெண்ட் மாணவர்களுக்கு விளையாட்டா ஒரு போட்டி வைத்தேன்.. அப்பவே ஒரு கவிதை புதிதாய் சொல்லவேண்டும் என.

  அப்போது நான் சொன்ன வரிகள்..
  “பெண்ணே நிலவென்னவோ நீதான்
  தேய்வதுதான் நான்”

  இந்த வரிகள் அடுத்த வருடமே வைரமுத்து ஒரு பாடலில் பயன்படுத்தியிருந்தார். முகவரி படத்தில்

  நிலா நீயல்லவா..
  தேய்பவன் நானல்லவா

  இது பெரிய விஷயமல்ல ..

  இன்ஸ்பிரேஷன் ஒரே மாதிரி அமைவது சாத்தியமே என நினைக்கிறேன்.

 4. சிறில் படம் அவ்வளவு தலை சுத்தலா இருக்காதுன்னு நினைக்கிறேன் 😉

  பிகேஎஸ் – அது சும்மா ஜல்லிக்கு, நீங்க ரொம்ப சீரியஸா பேசுறீங்க.

  சிறில் – பிகேஎஸ்ஸுக்கு சொன்னது உங்களுக்கும். அது சும்மா ஆனால், வார்ம்ஹோல், அது இதுன்ன உடனே எனக்கு அப்படியே முதுகுவடமே சிலிரிக்கிறதைப் போல் ஒரு உணர்வு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s