பகுத்தறிவு என்றால் என்ன?

பகுத்தறிவு என்றால் என்ன?

நல்ல கேள்வி ;),

//எனக்கு தெரிந்த வரை நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து அதன் படி நடப்பது தானே பகுத்தறிவு.//

இந்த நல்லது எது கெட்டது எது என்று தீர்மானிப்பது எப்படி. உங்களுக்கு நல்லாதாகப் படும் விஷயம் எனக்கு தவறானதாகப் படும் இல்லையா? சதாம் தலையில் தட்டியதை நான் உட்பட பலர் அவரவர்களுக்கு தெரிந்த விஷயங்களைக் கணக்கிட்டு கெட்டது எனத் தீர்மானிக்கிறோம் என்று வையுங்கள். அமேரிக்காவிலோ, இல்லை ஈராக்கிலோ அவரவர்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கணக்கிட்டு நல்லது என்று நினைக்கிறார்கள் என்றால் நீங்கள் சொன்ன தத்துவப்படி இருவருமே பகுத்தறிவு வாதிகள் ஆகிறீர்கள் இல்லையா?

அப்ப இந்தப் பிரச்சனையில் யார் உண்மையான பகுத்தறிவுவாதி எனத்தீர்மானிக்க, யாரை அதிகம் பேர் ஆதரிக்கிறார்களோ அது உண்மை என்று வைத்துக்கொள்ளலாமா என்றால் சிறுபான்மை மக்கள் உதைப்பார்கள், தாங்கள் தான் அறிவாளி என்று அதிகம் பேர் நம்புகிறார்கள் என்பதற்காக உண்மையல்லாத ஒன்று உண்மையாகிவிட முடியாது என்பார்கள்.

ஏனென்றால் உண்மை என்பது ஏதாவது ஒன்று தான் இருக்க முடியும் இல்லையா? வேண்டுமானால் ஜான் நேஷின் கேம் தியரிப்படி, ஒரு பிரச்சனைக்கு பல தீர்வுகள் இருக்கமுடியும் என்ற நம்பிக்கைக்கு வருவோமேயானால். ஆத்தீகவாதிகளும் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளலாமேத் தவிர, நாத்தீகர்கள், இனிமேல் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாதுதானே.

ஏன்னா பகுத்து நீங்க அறிஞ்சி கடவுள் தான் எல்லாத்தையும் படைத்தார், காக்கிறதையும் அழிக்கிறதையும் கூட அவர்தான் செய்கிறார். கூடவே அரிசியையும் படைத்து அதில் பேரையும் எழுதி வைக்கிறார் போன்ற விஷயங்களைச் சொன்னால் கடவுளை நம்பும் மக்களுக்கு அது பகுத்தறிந்த வாதமாக இருக்கும், இருக்கலாம் தவறில்லை.

இந்த பிரபஞ்சமே ஒரு புள்ளியில் இருந்து வெடித்துக் விரிவானது, ஒரு எலாஸ்டிக்கைப் போல, அந்த எலாஸ்டிக் எப்படி விரிவடைந்தோ அப்படி சுருங்கவும் செய்யலாம். அப்படின்னு அறிவியல் சொன்ன கருத்துக்களை மட்டுமே நம்பும் ஆக்கள்(நாத்தீகவாதின்னு சொல்லலை) அது தான் பகுத்தறிந்த வாதமாக இருக்கும் இல்லையா.

அதனால் என்னுடைய ஒரே தீர்வு. இதுதான் ஆன்மீகவாதிகள் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளலாம் தவறில்லை, (இது கூட்டமாக சிந்திக்கும் மக்களுக்கும் பொருந்தும் தனியாக சிந்திக்கும் மக்களுக்கும் பொருந்தும்.)

கடேசியாக – வெட்டிப்பயலின் பதிவிலேயே பின்னூட்டம் போட்டிருந்தால் 48ல் ஒன்றாக போயிருக்கும், மேலும் வலைபதிவிற்கு ரேட்டிங் தரும் இன்னபிற விஷயங்களில் என்னுடைய பின்னூட்டத்தால்(நான் கிளிக்கியது, நான் கிளிக்கியத்தற்காக, அவர் கிளிக்கியது இப்படி) அவருக்கு நிறைய நன்மை ஏற்படும்.

இதே நாம ஒரு பதிவு போட்டா, நமக்கு கிளிக்கு ஏறின மாதிரியும் இருக்கும். சொல்ல நினைத்த விஷயத்தை சொன்னமாதிரியும் இருக்கும் நான் நினைத்து இப்படிப் பண்ணுவதால் நானும் கூட ஒரு பகுத்தறிவாளனே.

16 thoughts on “பகுத்தறிவு என்றால் என்ன?

 1. போடா டுபுக்கு.

  நீயெல்லாம் சொல்லி நாங்க பகுத்தறிவை பற்றி தெரிந்துகொள்ளனுமா?

  முதல்ல அது இருக்கிறவந்தான் அதைப்பற்றி பேசவேண்டும்.

  என்ன நான் சொல்லுறது?

 2. எல்லாம் சரி தான்.
  அவரவர் எண்ணம் அவர்களுக்கு.
  2 வது பின்னூட்டம் பார்த்ததும் நேற்றைய எண்ணம் தான் ஞாபகம் வந்தது.
  நாடோடியின் சமீபத்திய பதிவை பார்த்ததும்,நாமும் இங்கு நம் பதிவுகளை ஏத்த வேண்டுமா?
  இல்ல ஒதுங்கி போய்விடுவோமா?
  ஒதுங்கினா சரியாய்டுமா?
  யாராவது நீ எங்க எழுதுகிறாய் என்றால் “தமிழ்மணம்” என்பேன்.இனிமேல் சற்று யோசித்துதான் சொல்லவேண்டும் போல்.

 3. அவ்வளவு ஈசியா சொல்லிட்டு போயிட முடியாதுங்க. இதுக்கு இன்னொரு சர்வே போட்டுத்தான் ஆகணும். விட மாட்டேன் நான் 🙂

 4. சூப்பரு..சூப்பரு…

  பத்தோடு ஒன்னு பதினொன்னா இருக்காம, தனித்தன்மையா இருக்கணும்னு சொன்ன உங்க பகுத்தறிவு வாழ்க….

 5. நீங்களும் பகுத்தறிவாளிதான் :-))

  அறிவியலும் இன்னும் எதையும் நிருபிக்கவில்லை. அதுவும் ஒரு நம்பிக்கையே!!!

  இது ரெண்டாவது பதிவு 🙂 (என்னுடைய பதிவை படித்த பிறகு நீங்கள் எழுதுவது) :-)))

 6. அய்யா என்னய்யா சொல்றீங்க, இருக்கிற அறிவும் போயிடும்போல

 7. குமரன், என் பொழப்பு இப்படி சிரிப்பா போச்சா. 😦

  அனானி அண்ணே, அப்ப அதை நீங்க இருக்கிறவங்கக் கிட்டேர்ந்தே தெரிஞ்சிக்கோங்க தப்பில்லங்கிறேன்.

  வெட்டி, நான் பகுத்தறிவாளங்கிறதை யார் சொல்லியும் நம்பும் அளவில் நான் இல்லை ;). அது எனக்கே தெரியும். ஹா ஹா.

 8. குமார், இருக்கலாம் ஆனால் அனானிகள் இல்லாவிட்டால் தமிழ்மணத்தில் உங்களைப் பற்றிய உண்மையான விமரிசனங்கள் தெரிய வாய்ப்பேயில்லை.

  எனக்கு நன்றாகத் தெரிந்த நண்பரே கூட இந்த விமர்சனத்தை வைத்திருக்கலாம். என்னை மட்டும் திட்டும் பின்னூட்டங்களை வெளியிடுவதில் எனக்கு பிரச்சனையில்லை.

  ஆனால் புதிதாக வந்து பார்க்கும் ஒருவருக்கு அவர் தமிழ்மணத்தில் இல்லாத நிலையில் கொஞ்சம் பிரச்சனையாகத்தான் இருக்கும்.

 9. சர்வேசன் எனக்கு இந்தக் கருத்துக் கணிப்பில் எல்லாம் அவ்வளவு ஆர்வம் இல்லை. 😉

  நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ள முடியுமென்றால் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

  ஜி, இது என்ன உள்குத்தா அப்படியில்லையென்றால் சந்தோஷமே.

 10. சுகுணா திவாகர், என்ன புரியவில்லை கொஞ்சம் தெளிவாக எழுதினால் தெளிவாக விளக்க முயல்வேன்.

  பொன்ஸ் உங்களுக்கும் அதே பழைய கேள்விதான் என் பொழப்பு உங்களுக்கு சிரிப்பா இருக்கா?

 11. //ஏன்னா பகுத்து நீங்க அறிஞ்சி கடவுள் தான் எல்லாத்தையும் படைத்தார், காக்கிறதையும் அழிக்கிறதையும் கூட அவர்தான் செய்கிறார். கூடவே அரிசியையும் படைத்து அதில் பேரையும் எழுதி வைக்கிறார் போன்ற விஷயங்களைச் சொன்னால் கடவுளை நம்பும் மக்களுக்கு அது பகுத்தறிந்த வாதமாக இருக்கும், இருக்கலாம் தவறில்லை. //

  மோகன்தாஸ்!

  உங்கள் வாதத்தை வழிமொழிகிறேன்.

 12. பகுத்தறிவு என்பது வினைத்தொகையா ? பண்புப் பெயரா ? அல்லது உரிச்சொல்லா ?
  🙂

 13. //உங்கள் வாதத்தை வழிமொழிகிறேன். //

  என்னப்பத்தித் தெரியாம வழிமொழிஞ்சிட்டீங்கன்னு நினைக்கிறேன்.

 14. //பகுத்தறிவு என்பது வினைத்தொகையா ? பண்புப் பெயரா ? அல்லது உரிச்சொல்லா ?
  🙂 //

  என்கிட்ட இவ்வளவு சங்கடமானக் கேள்வியெல்லாம் கேட்டால் பதில் சொல்லத் தெரியாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s