அவார்டுகள் அள்ளிக்கோ – 1

சினிமா

சிறந்த நடிகர்: சூர்யா (கஜினி).

சிறந்த நடிகை: அசின் (கஜினி).

சிறந்த நகைச்சுவை நடிகர்: வடிவேலு (இம்சை அரசன் 23ம் புலிகேசி).

சிறந்த கருத்துக்களை நகைச்சுவையுடன் கலந்தது: விவேக் (பல படங்களில்).

சிறந்த டைரக்டர்: மிஷ்கின் (சித்திரம் பேசுதடி).

சிறந்த ஒளிப்பதிவாளர்: ரவிவர்மன் (வேட்டையாடு விளையாடு).

சிறந்த பாடலாசிரியர்: நா.முத்துக்குமார் (வெயில்).

சிறந்த இசையமைப்பாளர்: யுவன்ஷங்கர் ராஜா (வல்லவன்).

சிறந்த பாடகர்: கார்த்திக் (கஜினி).

சிறந்த பாடகி: பாம்பே ஜெயஸ்ரீ (வேட்டையாடு விளையாடு).

சிறந்த ஆர்ட் டைரக்டர்: செல்வகுமார் (ஈ).

சிறந்த திரைப்படம்: ‘சித்திரம் பேசுதடி’ & தமிழ்; ‘லகே ரஹோ முன்னா பாய்’ & இந்தி; பீஷீஷ்ஸீயீணீறீறீ & ஹிட்லரின் கடைசி தினங்கள் & ஜெர்மன் (ஆங்கில சப் டைட்டில்களுடன்).

சிறந்த பின்னணிக் குரல்: சவிதா.

சிறந்த சினிமா பாடல்: ‘ரகசியமானது காதல்’. படம் & கோடம்பாக்கம். எழுதியவர் & விஜயசாகர்; இசை & சிற்பி.

மிக அதிகம் பாடப்பட்ட சினிமா பாடல்: ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்…’ & கானா உலகநாதன்.

இலக்கியம்

சிறந்த கவிதைத் தொகுப்புகள்:

1. ‘அகி’ & 139 கவிதைகள் & முகுந்த் நாகராஜன், ‘உயிர்மை’, 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை&18.

2. றஞ்சனி கவிதைகள் & றஞ்சனி, இமேஜ் & இம்ப் ரெஷன், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை&18.

3. சிறந்த தலித் கவிதை & ‘பட்டுப்போன கிறிஸ்துமஸ் மரம்.’ & மோகனப்ரியா; ‘கோடை உமிழும் குரல்.’ & தொகுப்பு: திலகவதி.

4. சிறந்த சிறு கவிதை: யாத்ரீகன் & முனியப்பராஜ்.

‘பழைய மன்னருடன் நகர்வலம்
வந்ததாய்ச் சொல்லப்பட்ட
பாகனற்ற கிழ யானை
பட்டத்து ஒப்பனையோடும்
ஓசையற்ற சலங்கையோடும்
தெருவில் இறந்து கிடந்தது’.

சிறந்த சிறுகதை: ‘மிஸ் மார்ட்டீனின் நாய்க்குட்டி.’ & விமல் குழந்தைவேல். தொகுப்பு: ‘குறளிக் குஞ்சன்.’ வெளியீடு: ‘நிறம்’, அக்கரைப்பாட்டு & 0132400, ஸ்ரீலங்கா (சுனாமி நிதிக்காகத் தன் செல்ல நாய்க்குட்டியை விற்கும் ஆங்கிலேயப் பெண்மணியின் கதை).

சிறந்த அறிவியல் நூல்: ‘இன்னொரு வானம்’ & ஆதனூர் சோழன், சிபி பதிப்பகம், சாந்தி நகர், மதுரை&18.

சிறந்த ஆராய்ச்சி நூல்: புதிய வாஸ்து விஞ்ஞானம், கே.சுப்ர மணியன், வானதி பதிப்பகம், சென்னை&17.

பத்திரிகைகள்

சிறந்த ஸ்பெஷல் இதழ்: ஆனந்த விகடன் 304 பக்க தீபாவளி இதழ்.

சிறந்த புது வரவு: தினகரன் தீபாவளி மலர்.

சிறந்த மாத இதழ்: அமுதசுரபி.

சிறந்த புதிய இதழ்: அம்ருதா.

சிறந்த சிறு பத்திரிகை: இலக்கிய ரசனை.

சிறந்த அறிவியல் காலாண்டிதழ்: அறிவியல் பூங்கா. வெளியீடு: மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம், சென்னை& 4.

சிறந்த பக்தி இதழ்: சமரசம்.

சிறந்த சிறுவர் இதழ்: சுட்டி விகடன்.

சிறந்த பெண்கள் பத்திரிகை: மங்கையர் மலர் & நவராத்திரி ஸ்பெஷல்.

சிறந்த இலவச இணைப்புப் புத்தகங்கள்: அவள் விகடன்.

சிறந்த பேட்டைப் பத்திரிகை: மயிலாப்பூர் டாக்.

சிறந்த ஆங்கில தினசரி: டெக்கான் க்ரானிக்கல்.

சிறந்த வார அனுபந்தம்: சன்டே எக்ஸ்பிரஸ்.

சிறந்த வியாபார தந்திரம்: சன் நெட்வொர்க் (குங்குமம், தினகரன், தமிழ் முரசு போன்றவற்றுடன் இலவச பொருட்கள் தந்தது).

சிறந்த அட்டைப் படம்: சானியா மிர்ஸா, குங்குமம்.

சிறந்த கார்ட்டூன்: கேசவ் & தி இந்து.

சிறந்த கேள்வி&பதில்கள்: மக்கள் களம், நக்கீரன்.

சிறந்த வாசகர்: அயன்புரம் சத்தியநாராயணன்.

கர்னாடக சங்கீதம்

சிறந்த பாடகர்: சஞ்சய் சுப்ரமண்யம், டி.எம்.கிருஷ்ணா.

சிறந்த பாடகி: பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ.

சிறந்த இசைக் கலைஞர்: பிரசன்னா (கிடார்), யு.ஸ்ரீனிவாஸ் (மாண்டலின்).

சிறந்த புதிய பாடகர்: குருசரண்.

சிறந்த புதிய பாடகி: சுபிக்ஷா.

கிரிக்கெட்

சிறந்த புதியவர்: வெய்ன் ப்ராவோ, வெஸ்ட் இண்டீஸ்.

சிறந்த கேப்டன்: மஹேளா ஜெயவர்த்தனா.

மாஸ்டர் ப்ளாஸ்டர்: க்றிஸ் கேய்ல், ரிக்கி பாண்டிங்.

சிறந்த பௌலர்: ஷேன் வார்னே.

சிறந்த மறுபிறவி: சவுரவ் கங்குலி, சனத் ஜெய சூர்யா.

மைதானத்துக்கு வெளியே நிறையச் சம்பாதித்தவர்: டோனி.

சிறந்த ரன் துரத்தல்: தென் ஆப்பிரிக்கா & ஆஸ்திரேலியா (400&க்கு மேல்).

இந்த ஆண்டுக்கான சிறப்பு இடது கைப் பரிசுகள்…

1. தொலைக்காட்சி மெகா சீரியல்களில் சந்து கிடைக்கும்போதெல்லாம் ஆ… ஆ… பாடும் பெயர் தெரியாத பாடகர்களுக்கு ஒரு பாக்கெட் ஸ்ட்ரெப் சில்.

2. சங்கீதா ராஜேஸ்வரன் & ‘டைலாமு டைலாமு’ பாடலுக்காக… தமிழண்ணலின் ‘நல்ல தமிழில் பேசுவோம்’ புத்தகம்.

3. மெரீனா கடற்கரையில் சிமென்ட் பெஞ்சுகளை இரும்புக்காக உடைத்து வைத்திருக்கும் குடிகாரர்களுக்கும், அவற்றை ஒரு வருஷமாகியும் ரிப்பேர் செய்யாத அதிகாரிகளுக்கும் கடப் பாரை பரிசு (யார் ரிப்பேர் செய்வது… கார்ப்பரேஷனா, போக்குவரத்துக் காவல்துறையா என்று பட்டிமன்றம் நடந்து கொண்டு இருக்கிறது).

4. ‘வேட்டையாடு விளையாடு’ தமிழ்ப் படத்தில் மிக அதிக எண்ணிக்கையில் கொலைகள் செய்ததற்காக (18 உடல்கள் கணக்கிட் டேன்) இயக்குநர் கௌதம் மேனனுக்கு, ஒரு பொம்மைத் துப்பாக்கி. சிறப்புப் பரிசு ஹாரிஸ் ஜெயராஜுக்கு & இதே படத்தில் இடைவிடா மல் உரக்க ரீ&ரிக்கார்டிங் வாசித்ததற்காக, இரண்டு காதுகளுக்கும் பஞ்சு.

5. மிக அதிகம் பெண்களை அழ வைத்ததற்காக சிரபுஞ்சி அவார்டு ‘செல்வி’ ராதிகா சரத்குமாருக்கு. சன் டி.வி. 480 எபிசோடுகளில், டைட்டில் தவிர மூன்று முறை சிரித்திருக்கிறார்.

6. இந்திய கிரிக்கெட் அணி எத்தனை விதத்தில் தோற்க முடியுமோ அத்தனை விதத்திலும் தோற்றதற்கு மிக அகலமான கைக்குட்டை.

7. பஞ்சாப் ஹைகோர்ட், நவ்ஜோத் சித்து 1988&ல் செய்த கொலைக்கு 2006&ல் தண்டனை தந்ததற்கு & ஓடாத கடிகாரம்.

8. ஷோயப் அக்தர், ஆசிப் இருவருக்கும் தண்டனை தந்தது போல் பாவ்லா காட்டியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு & முஷாரப்புடன் தனிப் பட்ட விருந்து.

9. காசாசை காட்டி நம் வீரர்களின் ஆட்டத்தைக் கெடுத்ததற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு & ஒரு பாக்கெட் லாலிபாப்!

—————–

PS: அடிக்கப்போறது ஜல்லின்னு ஆய்டுச்சு, அப்புறம் காப்பி பேஸ்ட் என்ன சொந்த சரக்கென்ன… இந்த வருஷ சுஜாதா அவார்டுகளின் பட்டியல்

5 thoughts on “அவார்டுகள் அள்ளிக்கோ – 1

 1. ‘சித்திரம் பேசுதடி’- இப்படி ஒரு படம் வந்ததா?

  கான உலகநாதன் பாட்டுக்காக படம் ஓடியதாய் கேள்வி.

  //சிறந்த ஸ்பெஷல் இதழ்: ஆனந்த விகடன் 304 பக்க தீபாவளி இதழ்.//

  200 பக்க விளம்பர சாதனைக்காகவா?

  //சிறந்த புது வரவு: தினகரன் தீபாவளி மலர்.//

  கொடுத்த விலையை விட இலவசமாய் அதிக மதிப்புள்ள பொருட்கள் கிடைத்ததற்காகவா?

 2. இதெல்லாம் நீங்க குடுத்த அவார்டா?

  நல்ல ரசனை!

 3. தம்பி இல்லை அவை சுஜாதா விகடனில் எழுதிக் கொடுத்தது.

  அனானிமஸ், ஜல்லி அடிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன், அப்புறம் சொந்தச் சரக்கென்ன காப்பி பேஸ்ட் என்ன?

  எனக்கு நொட்டாங்கை பரிசெல்லாமே பிடித்திருந்தது.

 4. சித்திரம் பேசுதடி போன வருசமே வெளிவந்துடுச்சுன்னு இல்லை நினைவு!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s