ஆந்தனி கோன் ஹை

நான் ஆரம்பத்தில் ப்ளாக் உலகத்தில் கால்வைத்த பொழுது பதிவுகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வந்துகொண்டிருந்தன. பெரும்பாலும் இயல்பு வாழ்க்கையைப் பற்றிய குறிப்புகள். சுருக்கமாகச் சொல்லப்போனால் ஆன்லைன் டைரிக்குறிப்புகள் அவ்வளவுதான். ஆங்கிலத்தில் எழுதும் ஆர்வமும் திறமையும் இல்லாத காரணத்தால் விட்டு வேகமாக நகர்ந்துவிட்டேன். பின்னர் மரத்தடி நாட்களில், சில மக்களின் பதிவுகளைப் படிப்பதற்காக வருவேன். அப்பொழுது அங்கே தெரியும் தமிழ்மணம் பட்டனைக் கிளிக்கியதில்லை, காரணம் பெரும்பாலும் வெப்சைட்களில் கொடுக்கப்படும் லிங்குகள் தேவையற்ற இடங்களுக்கே செல்லும் என்ற நம்பிக்கையிருந்தது.(மூடநம்பிக்கையின்னு கூட வைச்சிக்கலாம்.)

அதுமட்டுமில்லாமல், மரத்தடி மெயில்களைப் படித்ததில் இருந்து ப்ளாக் உலகில் பெரும்பாலும் ஒரு குரூப் குரூப்பாத்தான் இருப்பாங்க, நீங்க பின்னூட்டமிட்டா உங்களுக்கு பின்னூட்டம் கிடைக்கும் என்பதைப் போன்ற எண்ணம் மனதில் தோன்றியிருந்தது, அதற்கு மரத்தடி காரணம் கிடையாது ஒருவேளை நான் படித்த மெயில்களாக இருக்கலாம், லிங்குகள் தேடவில்லை. எனக்கென்னவோ எழுதிப்பழகும் இடமாக மரத்தடியைப் பார்க்க பிடிக்கவில்லை, அதனால் தான் விலகினேன், நல்ல கதைகளை எழுதிப்பழகி பின்னர் வரவேண்டுமென்று நினைத்து. படிப்பதை விட எழுதுவது அதிகமாக இருந்த நாட்கள் அவை.

அப்படியாக நான் பதிவுலகத்திற்கு வந்த பொழுதும் இதை ஒரு டைரியாக எழுதும் எண்ணம் தான் முதலிலிருந்து இருந்தது. அப்படி இல்லாமல் போனதிற்கு இரண்டு காரணங்கள், நான் பார்த்த பெரும்பாலான பதிவுகள் அப்படி இல்லாமல் போனது, மற்றது நான் சாப்ட்வேர் இன்டஸ்டிரியில் வேலை பார்த்து வந்தது, இங்கே புதியவிஷயங்கள் கிடையாது. அதுமட்டுமில்லாமல் நான் அனுபவிக்கும் விஷயங்கள் அனைத்துமே மற்றவர்கள் அனுபவித்த ஒன்று அதனால் அந்த எண்ணத்தை கைவிட வேண்டியிருந்தது. இன்னுமொன்று உண்டு அது அந்த நோக்கத்தில் எழுதப்பட்ட சில பதிவுகள் கவனமற்று இருப்பதாகப் பட்டதும் ஒரு காரணம். அப்பொழுதெல்லாம் ஒரு பதிவு கவனம் பெறுகிறது என்பதற்கு நான் வைத்திருந்த ஒரே ஒரு அளவுகோல் பின்னூட்டம் என்பது, பின்நாட்களில் அது எவ்வளவு தவறான ஒருவிஷயம் என்பது புரிந்தது.

பின்னூட்டம் அதிகம் பெரும் பதிவுகளைக் குறை கூறவில்லை, அந்த மாதிரி நமக்கு எழுதவரவில்லை அவ்வளவுதான் என்று விட்டுவிட்டு நகர்ந்து போய்விடவேண்டும் என்பதும், பின்னூட்டம் அதிகம் பெருவதற்காக மட்டுமே எழுதப்படும் பதிவுகளில் இருக்கும் என் பல பதிவுகளில் இருந்த ஒரு நாடகத்தன்மை பின்நாட்களில் மீண்டுமொறுமுறை படித்துப் பார்த்த பொழுது விளங்கியது. ஆரம்பக்காலத்தில் இருந்தே ஒரு விஷயத்தில் குறியாக இருந்தேன், அது, நான் தவறு செய்வதாக யாராவது சுட்டிக்காட்டினால் கோபப்படுவது மட்டும் செய்யாமல் நல்ல மூடிருக்கும் ஒரு நாள் உண்மையில் யார் பக்கம் தவறென்று யோசிக்கவும் செய்வேன், என் பக்கம் தவறிருந்தால் ஒப்புக்கொள்வேன் என்னளவில். சுட்டிக்காட்டியவருக்குக் கூட தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பது எனது எண்ணம்.

ஏன் இவ்வளவு புலம்பல்கள் என்றால், இன்று காலை ஒரு இந்திப் படத்திற்குச் சென்றிருந்தேன். எங்கள் வாழ்க்கையில் இது ஒரு பெரிய நிகழ்ச்சி இல்லாவிட்டாலும், முக்கியமானதைப் பற்றி மட்டும் தான் எழுதவேண்டுமா என்று யோசித்துப் பார்த்த பொழுது மனதில் பட்டதைக் கொட்டியிருக்கிறேன்.

புரோஜக்ட் இன்டகிரேஷன் டெஸ்டிங்கில் இருப்பதாலும், மெயின்பிரேம் தனியாக, நாங்கள் ஜாவா ஆட்கள் தனியாகவும் ப்ரோக்கிராம் எழுதி இந்த ஒன்றிரண்டு வாரக்காலத்தில் இரண்டையும் இணைக்க வேண்டிய கட்டாயமும் இருப்பதால், கொஞ்சம் ஆளை அசரடிக்க வைக்கும் வேலை, ஜிமெயிலில் என்னுடன் சாட்டுபவர்களுக்குத் தெரிந்திருக்கும் இந்திய மணிநேரம் இரவு ஒன்று இரண்டெல்லாம் அசாதாரணமாக அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதும், சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கடனாய் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பது.

நேற்றிரவு அப்படிப்பட்ட ஒருநாள், ஏழரை மணிக்கு ‘ஆப்ஷோரில்’ செய்யப்பட்ட ‘பில்ட்'(Build), ஊத்திக்கொள்ள, கடைசியாக செக்கின்(Check-in) பண்ணியவன், தன்னால் இல்லை இன்டகிரிட்டி செர்வர் தவறால் தான் படுத்துக்கொண்டது பில்ட் என்று ஒற்றைக்காலில் நிற்க, கிளயண்ட் விவோஅய்பியில்(VOIP) அலற, மீண்டுமொறு முறை பில்ட் செய்யும் பொறுப்பு என் நண்பனிடம் ஒப்படைக்கப்பட்டது, எல்லா ப்ரோஜக்ட்களையும் மீண்டும் ஒருமுறை சானிட்டி செக்கிற்காக(Sanity Check) என் லோக்கல் சிஸ்டத்தில் பில்ட் செய்யும் இடைவெளியில் இரவு சாப்பிட்டு விட்டு வந்தோம்.

பின்னர் அப்படியிப்படி ‘இன்டகிரிட்டி சர்வர்'(MKS Integrity Server) ப்ரோப்ளம், ஸ்லோ என்று காலை ஆறு மணிக்கு பில்ட் ஒருவாறு சக்ஸஸ்புல்லாக முடிய, பொட்டியை மூடிவிட்டி கிளம்பிய நாங்கள் வழியில் டீக்கடையில் உட்கார்ந்த பொழுது வந்த ஐடியாதான் படம் பார்க்க செல்வதென்ற ஒன்று. சமீபத்தில் வெளியாக ஓடிக்கொண்டிருக்கும் ஓங்காரா என்ற படத்திற்குத்தான் போவதாக முடிவு. மொத்தம் இரவு தங்கிய மூன்று பேருமே இந்த விஷயத்தில் வீக் என்பதால், நாங்களாக கற்பனை செய்து கொண்டு போன நேரத்தில் படம் தொடங்கியிருந்தது. மல்டிபிளக்ஸ் என்பதால் அடுத்த இரண்டு மணிநேரத்தில் படம் பார்த்துவிடலாம் என்றால் படம் பார்த்துவிட்டு, பார்க்க வேண்டிய வேலை நினைவில் வந்தது.

சரி போனால் போகிறதென்று இந்தப் படம், “ஆந்தனி கோன் ஹை”ற்கு சென்றோம். எனக்குத்தெரிந்த நடிகர் “சஞ்சய் தத்” மட்டுமே, சஞ்சய் தத், விளம்பரத்தில் துப்பாக்கியுடன் உட்கார்ந்திருப்பதைப் போன்ற பார்த்ததும். கொஞ்சம் சங்கடமாகத்தான் உணர்ந்தேன், பெரும்பாலும் வீம்புப்பிடியாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படத்தை பார்த்தே தீருவது எனப் பார்த்த விஜய் படங்களினால் வந்த தலைவலியின் காரணமாக கொஞ்சம் பயந்தேன். ஆனால் கூடவந்தவர்கள் படம் காமெடிப்படம் என்று சொல்லியதும் சமாதானம் ஆனேன். படத்தின் கதை ஒன்றும் பிரமாதமானது இல்லை.

சஞ்சய் தத், தாய்லாந்தில் ஒருவனைக் கொலை செய்வதற்காக, அவன் இருக்கும் ஹோட்டல் அறைக்குள் நுழைந்து “ஆந்தனி கோன் ஹை” என்று ஹீரோவிடம் கேட்க ஹீரோ நான்தான் ஆந்தனி என்று சொல்ல முகத்தில் குத்துவதுடன் படம் தொடங்குகிறது. பின்னர் ஹீரோவை தலைகீழாகத் தொங்கவிட்டு கொலை செய்ய பணம் கொடுக்கவேண்டியவனிடம், பணத்தை டிரான்ஸ்பர் செய்யவேண்டுமாறு கேட்க அவன் கொடுக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்ள அந்த சமயத்தில், டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் படம் எதுவும் பிடிக்காமல், ஹீரோவிடம் சரி நீ யாருன்னு சொல்லு என்று கதை கேட்க, ஹீரோவைக் கதைச்சொல்லியாகக் கொண்டு படம் நகரத் தொடங்குகிறது.

அநாயாசமான திருப்பங்கள், வெட்டுக்குத்து, படபடவென்று சுடுவது, கட்டிவைத்து பத்து பக்க வசனம் படிப்பது என்றில்லாமல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்றது கதை. இந்த வகையான கதை சொல்லும் பாங்கு எனக்கு ரொம்பவும் பிடித்தமானது. அதுவும் கூட ஒரு காரணம் இந்தப் படத்தைப் பார்த்து எனக்கு தலைவலி வராததற்கு.

‘பில்ட் டென்ஷன்’, ‘கோட் ஃபட்ற’, போன்ற பிரச்சனைகளில் இருந்து கொஞ்சம் விலகி மூன்று மணிநேரம் நிம்மதியான, ஏசிக்காற்றில் உண்மையான டிஜிட்டல் சவுண்டுடன், அலட்டலில்லாத இந்தப் படம் ஒரு நல்ல மாறுதலாக இருந்தது. பாடல்கள் நன்றாக இருந்தன, பட ஆரம்பத்தில் மியூஸிக் ஸ்கோர் ஸமீர் என்று பார்த்த ஞாபகம் இருந்தது. கடைசியில் தலைவர் வந்து மைக்குடன் தோன்றவும் முதலில் ஆச்சர்யப்பட்டேன் பின்னரும் ஆச்சர்யப்பட்டேன்.

மியூசிக் ஹிமேஷ் ராஷ்மியா, மக்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் தசாவதாரத்திற்கு தலைவர் தான் மியூஸிக் என்று. தெரியவில்லை கமல் படத்திலும் மைக் பிடிப்பாரா என்று ஆனால் தமிழில் நல்ல இசையில் மூக்கு நுனியில் இருந்து நல்ல இரண்டு பாடல்களுக்கு நான் உத்திரவாதம்.

படம் முடிந்ததும் திரும்பவும் அலுவலகத்திற்கு வந்து ஓட்டிய பில்டில் வந்து கொண்டிருக்கும் பக்ஸ்களை பிக்ஸிக்கொண்டிருக்கிறேன். என்னவோ இன்று டைரியைப்போல எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. எழுதுகிறேன். நார்த் இண்டியா பக்கம் வாசனையுள்ள மக்கள் சென்று நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம். ஆனால் என் மனதில் நகைச்சுவைப் படத்திற்குண்டான இடம் எப்பொழுதும் உண்டென்பதால் ஜாக்கிரதை.

மோட்டரோலா V3I உபயோகித்து இரண்டு பாடல்களைப் போட்டுத்தள்ளிக் கொண்டுவந்தேன் முதலில் .3gp பைல்களாக இணைக்கத்தான் நினைத்திருந்தேன் பின்னர் வேண்டாமென்று விட்டுவிட்டேன். வேண்டுபவர்கள் தனிமெயில் அனுப்புக, குறிப்பு பாடல்கள் – இந்திப் பாடல்கள்.

3 thoughts on “ஆந்தனி கோன் ஹை

  1. அன்பு மோகன்தாஸ்,உங்களது இந்த விமர்சனத்திற்காகவே படத்தை சீக்கிரம் பார்க்கவேண்டும் என எண்ணியுள்ளேன்.

  2. நல்ல காரியம் செய்தீர்கள், ஓம்காராவிற்குப் பதிலாக அந்தனி…. சென்றது! ஓம்காராவில் உ.பியின் கிராமத்து இந்தி சற்று கடினமாக இருக்கிறது 😦

    ஹிமேஷ் ரஷ்மியாவின் இசை எனக்கும் பிடித்த ஒன்று.

  3. துபாய் ராஜா, பாருங்க, எனக்கென்னமோ படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் மறந்துறாதீங்க.

    மணியன், அதைப்பற்றி இந்தி மக்களேக் கூட கம்ப்ளெய்ண்ட் பண்ணுகிறார்கள். தெரியவில்லை டைம் கிடைக்குமா என்று பார்த்தால் எழுதுகிறேன் அதைப் பற்றியும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s