இந்திய அரசியின் தடையை மனமாற ஏற்கிறேன். Really

பிரகாஷாரின் வேண்டுகோளுக்கிணங்க…

யாரும் எழுதுங்க எழுதுங்கன்னு சொன்னாத்தான் எழுதமுடியாதுன்னு இருக்க முடியுது. யாரும் சொன்னாங்களான்னு கேட்காதீங்க, இப்ப இந்திய கவர்மென்ட் சரியாக சொன்னதை தவறாக புரிந்து கொண்டோ, இல்லை சரியாகவே புரிந்து கொண்டோ நடந்த இந்த மாற்றத்தால் எனக்கென்னமோ நிறைய எழுதும் ஆசை வந்து கொண்டேயிருக்கிறது. யாரும் படிப்பாங்களான்னு கேட்கக்கூடாது.

பதிவு இப்படியே அகலாமாப் போயிடாம இருக்க, சில ஆழ விஷயங்கள்.

சுஜாதா, மீண்டும் கில்லி(ஜல்லி என்பவர்களுக்கு ஜல்லி)யடிக்க ஆரம்பித்திருக்கிறார். இனிமேல் அவரு அதைச் சொன்னாரு இதைச் சொன்னாரு என்னைச் சொல்லவேயில்லை என்று மூக்கொழுகிக்கொண்டு வரும் பதிவுகளின் முன்னோடிப்பதிவாக இதை இடுகிறேன்.

இப்பல்லாம் பிளாக் உலகில் ஒரு நோய் உலாவுவதாய் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன, இந்த நோயைப்பற்றிய விவரங்களை வெளியிடக்கூடாதென்று இந்திய அரசின் உத்தரவாதலால் தகவல் வேண்டுபவர்கள் தனிமடலிடலாம்.

மற்றபடிக்கு கீழே ஆனந்தவிகடனில் இருந்து சுஜாதா எழுதிய கற்றதும் பெற்றதுமின் சிறு பகுதி.(உண்மையில் வளர்ச்சி அடையணும்னா சுஜாதாவைப் படிக்காதீங்க என்று பின்னூட்டம் போடவிருக்கும் அனானி அண்ணாச்சிக்கு அது எனக்கு தெரியும் என்பதால் நேரத்தை செலவிடாதீர்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.

பாரா குமுதம் ரிப்போர்ட்டரில் மாயவலைன்னு ஒரு விஷயம் எழுதுறார் ரொம்ப நல்லாயிருக்கு இதை நான் சொல்லணும்னு அவசியம் இல்லைதான். படிக்காம இருக்கிறவங்களுக்காக முன்பு பாலஸ்தீன இஸ்ரேல் விஷயத்தை எழுதியவர் இப்போ ஒட்டுமொத்த தீவிரவாத இயக்கங்களைப்பற்றி எழுதுவதற்கான முன்னூட்டமாக அல்கைதாவிலிருந்து தொடங்கியிருக்கிறார். படித்துப்பாருங்க.

ஒரு நண்பர் தன் கல்யாணத்துக்கு வலை அழைப்போடு ஆக்டன் நாஷின் (Ogden Nash) மேற்கோள் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.

To keep your marriage brimming
With love in the loving cup
Whenever you’re wrong, admit it;
Whenever you’re right, shut up.

இதை அனுப்பிய மணமகன் நிச்சயம் தி.பி முதல் சில வருஷங்களைச் சமாளித்துவிடுவார். நாஷின் வரி-களை தமிழில் முயன்று பார்த்தேன்…

‘இல்லற இன்பத்துக்கு
இதுமட்டும் கத்துக்கொள்
தப்பென்றால் ஒத்துக்கொள்
சரியென்றால் பொத்திக் கொள்!’

http://imohandoss.blogspot.com/2006/07/really.html
—————————

நிறைய பின்னூட்டங்கள் வாங்குவதற்கான தலைப்புக்களை தேடிக்கொண்டிருந்தேன், என்னைத்தவிர யார் எழுதினாலும் இந்தத் தலைப்பிற்கு நிறைய பின்னூட்டங்கள் உறுதி.

முக்கியமான விஷயத்தையே மறந்திட்டேன்.

இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். பிரகாஷ் ஒரு பெட்டிஷன் தயாரித்தால் கையெழுத்திட தயாரக உள்ளேன்.

அப்புறம் இங்கே புனேவிலும் ஒன்றும் ஓடவில்லை, அதான் ப்ளாக்கர் இல்லையே, கேப்ராக்ஸி தான் உபயோகிக்கிறேன். 2 ஜிபி ரேம் தாங்குது. மற்றவர்களுக்கு கஷ்டம்தான். என்னமோப்போங்க, பின்னூட்டத்தைப் பற்றி முடிவெடுக்கவில்லை. பார்க்கலாம்.

PS: நானெல்லாம் இந்தமாதிரி பதிவெழுதுவேன்னு தான் திரும்பவும் சரியாயிருச்சோ என்னவோ, ப்ளாக்கர் வொர்க் ஆகிற மாதிரி தெரியுது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s