மாறன் சகோதரர்களிடம் 10000 கோடி – சுவாமி புது கண்டுபிடிப்பு

மாறன் சகோதரர்களிடம் 10000 கோடிசுவாமி
ஏப்ரல் 20, 2006

சென்னை:

சன் டிவி தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது தம்பியும், மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஆகிய இருவருக்கும் ரூ. 10,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், மொரீஷியஸ், மலேசியா ஆகிய நாடுகளில் இருவரும் பல்வேறு சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதாகவும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

நிருபர்களிடம் சுவாமி கூறுகையில்,

கலாநதி மாறன் மற்றும் தயாநதி மாறன் ஆகிய இருவரும், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக தமிழகம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் ரூ. 10,000 கோடி அளவுக்கு சொத்துக்கள் உள்ளன.

இந்த சொத்துக்கள் அனைத்தும் பணமாக இல்லை. வீடுகள், ரியல் எஸ்டேட், ஷேர்கள் என மட்டும் ரூ. 10,000 கோடிக்கு இரு சகோதரர்களும் சொத்து சேர்த்து வைத்துள்ளனர்.

இது ஒரு குற்றச் செயல். இரு சகோதரர்களும் நியாயமான, நேர்மையான முறையில் தொழில் செய்து இவற்றை சம்பாதிக்கவில்லை. இருவரிடமும் விசேஷமான படிப்பும் இல்லை.

சன் டிவியின் விளம்பர வருவாய், கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் சம்பாதித்த பணத்தைக் கொண்டுதான் இந்த அளவுக்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர்.

இவ்வளவு அதிக அளவில் சொத்துக்களைக் குவித்து வைத்திருப்பதால் இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தி விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரி மத்திய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பு கோப்பு ஒன்றை அனுப்பினர்.

ஆனால் அதற்கு அனுமதி அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார் சிதம்பரம்.

எனக்கு இந்தத் தகவல் 2 நாட்களுக்கு முன்புதான் கிடைத்தது. தமிழகம் தவிர இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இந்தச் சொத்துக்கள் உள்ளன. இதுதவிர, மலேசியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இவர்கள் இறங்கியுள்ளனர்.

அங்கு பல வீடுகளையும் வாங்கி வைத்துள்ளனர். இவர்களின் சொத்துக் குவிப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் நான் தக்க ஆதாரங்களுடன் உயர் நீதிமன்றத்தை அணுகி வழக்குப் போடுவேன் என்றார் சுவாமி.

4 thoughts on “மாறன் சகோதரர்களிடம் 10000 கோடி – சுவாமி புது கண்டுபிடிப்பு

  1. வந்துட்டார்யா வந்துட்டார்யா

    சர்க்கஸ் கலை கட்டப்போகுது.

  2. சூனாசாமி எல்லாம் ஒரு மனுஷன்னு செய்தி போட்ட உங்களை முதலில் கொல்லனும்யா!

  3. இருக்கலாம்….பணமாக எவ்வளவுதான் வைத்திருக்க முடியும் சொல்லுங்க…அதனால சொத்து பத்தா சேத்தாச்சான் ஆச்சு…என்ன சொல்லுதீக!

  4. அரசியல்ல திமுக காரங்களுக்கு கலைஞர் ஹீரோ, ஜெ வில்லி, அதிமுகவுக்கு ஜெ ஹீரோயின் கலைஞர் நம்பியார்…

    ஆனால் அரசியல் கட்சித் தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்களுக்கும் கூட நம்ம சூனாதான் சூனாபானா (வடிவேலு ஒரு படத்தில் பின்னி எடுத்த காரெக்டர் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s