நரேந்திர மோடி உண்ணாவிரதம்.

நரேந்திர மோடி உண்ணாவிரதம்.

நர்மதாவின் சர்தார் சரோவர் அணைக்கட்டின் உயரத்தை உயர்த்துவதை பற்றி நடந்த இன்றைய மீட்டிங்கில், இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையானவற்றை செய்துவிட்டபின் உயர்த்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதுவரை வேலையை நிறுத்துமாறு பணிக்கப்போவதாக நீர்வளத்துறை அமைச்சர் பிரதமரை கேட்டுக்கொள்ளப்போவதாகவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து குஜராத் முதல்வர் நாளை இரண்டு மணியில் தொடங்கில் 51 மணிநேர உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். மேதாபட்கரின் உண்ணாவிரதம் இவ்வளவு விளைவுகள் ஏற்படுத்துமானால் மோடியின் உண்ணாவிரதம் இன்னும் பெரிய சினிமாவாக இருக்கும்.

இந்த நர்மதாவை உபயோகப்படுத்தும் மூன்று மாநிலங்களுமே பிஜேபியால் ஆட்சி நடத்தப்படும் மாநிலங்கள். இதனால் இந்தப் பிரச்சனை புது வடிவத்தை இப்போதைக்கு அறிவித்துள்ளது.

இதற்கு பிறகு குஜராத்தில் நடக்கப்போவதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு என்று அறிவித்துள்ளது கொஞ்சம் ஆர்வத்தை தூண்டுவதாக இருந்ததால் வேலைவெட்டியில்லாமல் இதை பதிகிறேன்.

மொத்தமாய் 200 இன் ஜினேயர்கள் இதில் தற்சமயம் வேலை பார்த்து வருகின்றனர். இதில் ஏற்கனவே 32,000 கியூபிக் சிமெண்ட் அளவிற்கு வேலை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.

இதேவிஷயத்தின் கீழ் அமீர்கானின் மேதாபட்கரின் ஆதரவை எதிர்த்து குஜராத்தின் போராட்டம் நடந்துள்ளது. இதனை குறிக்க சுட்டிகளை தேடியும் கிடைக்காததால் அப்படியே சொல்கிறேன்.

4 thoughts on “நரேந்திர மோடி உண்ணாவிரதம்.

 1. //இதற்கு பிறகு குஜராத்தில் நடக்கப்போவதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு என்று அறிவித்துள்ளது கொஞ்சம் ஆர்வத்தை தூண்டுவதாக இருந்ததால் வேலைவெட்டியில்லாமல் இதை பதிகிறேன்.//

  Appo innum oru gothra va ……

  M.c

 2. அடுத்து முல்லைப் பெரியார் அணையை உயர்த்தவேண்டி தமிழக முதல்வரின் உண்ணாவிரதம் எதிர்பார்க்கலாமா?

 3. //”நரேந்திர மோடி உண்ணாவிரதம்.”

  இந்த வருடத்தின் சிறந்த காமெடி நண்பா..

  வயிறு குலுங்கிச் சிரித்தேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s