நான் கடவுளைப் பார்த்தேன்!

மூளை சம்பந்தமாக புதிய ஆராய்ச்சிகள் செய்து உலகப் புகழ்பெற்றவர் டாக்டர் வி.எஸ்.ராமச்சந்திரன். அமெரிக்காவில் வசிக்கும் தமிழர். அவர் எழுதிய ‘Phantoms in the Brain’ என்னும் புத்தகத்தில், ‘கடவுளும் (மூளையின்) லிம்பிக் (Limbic) பகுதியும்’ என்று ஒரு சுவையான அத்தியாயம் உண்டு. மூளையில் நியூரான்கள் சிலருக்குச் சில சமயங்களில் தறிகெட்டுப் பாயும்போது, உடலில் தசைகள் எல்லாம் சிலிர்க்கின்றன. அதை நாம் ‘வலிப்பு’ (Epileptic seizure) என்கிறோம்.

பரவலாக இல்லாமல், குறிப்பிட்ட ஒரே ஒரு மூளைப் பகுதியில் மட்டும் இதே போன்ற ‘சிலிர்ப்பு’ ஏற்படுவதுண்டு. அது, நெற்றிக்கு நேர் உள்ளே உள்ள லிம்பிக் பகுதியை ஒட்டியிருக்கும் ஹைப்போதலாமஸ் பகுதி! அந்தப் பகுதியை மட்டும் செயற்கையாகச் சிலிர்க்கவைக்க முடியும். அது நிகழும்போது ஏற்படும் பரவச உணர்வு, ஆயிரம் செக்ஷ§வல் பரவசங்களுக்கு (orgasm) இணையானது என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தப் பரவசத்தை அனுபவித்தவர்கள் மெய்சிலிர்ப்புடன் சொல்கிற ஒரே வார்த்தை & ‘நான் கடவுளைப் பார்த்தேன்!’

காட்டுமிராண்டியான மனிதனிடம் மொழிக்கான, இசைக்கான, விஞ்ஞானத் துக்கான நியூரான்கள் பல லட்சம் வரு டங்கள் தூங்கிக்கொண்டு இருந்துவிட்டு, திடீரென்று உயிர்பெற்றன. அதேபோல, கடவுளைப் பார்க்கக்கூடிய நியூரான் களும் மூளைக்குள் இருக்கிறதா? அந்தப் பேரின்ப நிலை யாருக்கெல்லாம், எப்போது, எந்த வயதில் வரும் என்று யாரால் சொல்ல முடியும்?!

சில உருப்படாத கேள்விகளுக்கு சில உருப்படியான பதில்கள் சிலசமயங்களில் கிடைப்பதுண்டு. அதுபோல இதுவும். ஆனந்தவிகடனில் மதன் “ஆன்மிகத்தில் ஈடுபட ஏற்ற வயது எது?” கேள்விக்கு சொன்ன பதில்.

குண்டலினியை காட்டுகிறேன்னு இப்படித்தான் ஜல்லியடிக்கிறாங்களா?? சுஜாதவைக் கேட்க வேண்டும்.

5 thoughts on “நான் கடவுளைப் பார்த்தேன்!

 1. Dont ask Sujatha.Read the interview with Ramachandran
  in a recent issue of Frontline.
  You will know why the blog post is
  misleading

 2. அனானி, அப்படியே லிங் கொடுத்திருந்தால் சுலபமாயிருந்திருக்கும்.

  சுஜாதாவை கேட்கிறேன்னு சொன்னதுக்கு காரணம் வேறு. 🙂

 3. Stop quoting Madan or Sujatha.Stop reading them if you want to get a better understanding.

 4. அனானி, ரொம்ப நன்றி உங்கள் அட்வைஸ்க்கு, முயற்சி செய்கிறேன்.

 5. Sir, We need a Periyar now!!

  Do we have anyone like him!!

  I am fed up. Why all these people are running behind ” Religion, God, caste … etc”

  “Do some one will come and make everyone a real Human”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s