Operation மஜ்னு பாத்து இருந்துக்கோங்கப்பு – updated

நேத்திக்கு நைட், ஆபிஸ்லேர்ந்து வீட்டிற்க்கு வந்திட்டிருந்தேன். செல்ப் குக்கிங்க்காக பிரெட்டும், முட்டையும் இன்ன பிற வெங்காய, தக்காளிகளையும் வாங்கும் பொழுது தான் பார்த்தேன். அந்தக்கடை டிவியில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படம் போட்டுக்கிட்டிருந்தான்.

சரி இன்னிக்கு நைட் கோவிந்தான்னு நினைச்சிக்கிட்டே வீட்டிற்கு வந்து பார்த்தா, எங்க கேபிளில் ஏஎக்ஸ்என் வர மாட்டேங்குது. அதுக்கு பதிலா ஒரு புதுசேனல் வந்துகொண்டிருந்தது. அவசரத்தில் பார்த்தா சிஎன்என் மாதிரியிருந்தது. சரி உலக நிலவரத்தை தெரிஞ்சிக்கலாம்னு பார்த்தா, ரொம்ப சீரியஸா மீரட்டில் நடந்த ஒரு விஷயத்தைப்பத்தி போட்டுக்கிட்டிருந்தாங்க.

என்னடா இது சிஎன்என்னுக்கு வந்த சோதனைன்னு பார்த்தாத்தான் தெரிஞ்சது, அது சிஎன்என் ஐபிஎன்(CNN – IBN) ஆம், புதுசேனல், முன்னாடி என்டிடிவி யில இருந்தாரு ஒருத்தரு பேரு ஞாபகத்தில் இல்லை. லாலு பிரசாத் யாதவை பேட்டியெடுக்குறதுன்னா அவரைத்தான் அனுப்புவாங்க உண்மையிலேயே நல்ல திறமையான ஜர்னலிஸ்ட், பிரணாய் அண்ணாச்சிக்கும் இவருக்கும் என்ன பிரச்சனையோ நான் அறியேன் பராபரமே. கொஞ்ச நாளைக்கு முன்னாடியே என்டிடிவியை விட்டுட்டுபோய்ட்டாரு. வேற ஏதோ ஒன்னுல இடையில் பார்த்தேன். இப்ப இவரோட புதுச்சேனல் தான் சிஎன்என் ஐபிஎன். நிற்க,

விஷயம் என்னன்னா, நேத்திக்கு மீரட்டில், ஆப்பரேஷன் மஜ்னுன்னு ஒரு ஐட்டத்தை நடத்தியிருக்காங்க. அது என்னன்னா பார்க்கில் உட்கார்ந்துக்கிட்டு லவ்விக்கிட்டிருந்த காதலர்கள், குடும்பஸ்தர்கள் இவங்களையெல்லாம் அடிபின்னிக்கிட்டிருந்து ஒரு அம்மா. பளார் பளார்னு அறையறதும், முதுகில் அடிக்கிறதும். எனக்கு ஒரு நிமிஷம் இதெல்லாம் இந்தியாவில் தான் நடக்குதான்னு ஆச்சர்யம். அடிவாங்கினதுல பெரும்பாலானதுங்க பொண்ணுங்க, கல்லூரியில் படிக்கிறதுங்கன்னு நினைக்கிறேன். சின்ன சின்னதா பாக்க பாவமா இருந்துச்சு.ஏன்னா ஒரு பொம்பளை போலீஸ் இந்த மாதிரி பண்ணி, நேர்லயோ இல்லை டிவியிலோ பார்த்தில்லை ஆனால் நிறைய கேட்டிருக்கிறேன்.

திருச்சியில் கூட பவானின்னு ஒரு இன்ஸ்பெக்டர் அம்மா, ரொம்ப நல்லவங்க ஆனா சத்திரத்தில உக்காந்துக்கிட்டு, ஐஜி, ஹோலிகிராஸ், அப்புறம் இந்த தாவணிபோட்ட சீதாலட்சுமி இராமசாமியெல்லாம் ஒம்பிழுக்குறதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்கும். நான் கடைசி செமஸ்டர் படிக்கிறப்ப நல்லா ஞாபகமிருக்கு ஒரு போலீஸ் வண்டி சத்திரத்திலேயே நிற்கும், மப்டியில சில பொம்பள கான்ஸ்டபிள்கள்.

கொஞ்சம் பிரச்சனை பண்ணினா வண்டியில திருவிழா கொண்டாடிருவாங்க. நம்ப பிரண்ட்ஸ் இரண்டொறுத்தரு காதலிங்களோட அங்க விளையாடிக்கிட்டு(?!?!?!?!) இருக்க தர்மஅடிவாங்கினாங்க இரண்டுபேரும். ஒரு தடவை பேச்சுப்போட்டிக்கு சீப் கெஸ்டா இந்த அம்மா வந்திருச்சு, இதுல பெரிய இழவா எனக்கு வேற ஏதோவொரு ப்ரைஸ் விழுந்துருச்சு. நமக்கா கை காலெல்லாம் நடுங்குது. அப்புறமா ஒருவழியா வாங்கிட்டு கீழே வந்ததும்தான் மூச்சேவந்தது. மீண்டும் நிற்க,

ஆனால் இந்த மீரட் சம்பவத்தை நான் சிலசமயம் கர்நாடகாவில் பார்த்திருக்கிறேன். அதுவும் லால்பாக், கப்பன் பாக்கில். பெங்களூரில் வேலைசெய்தப்ப ஐந்து நாள் கடுமையா வேலையிருக்கும்அதனால நிச்சயமா வாரக்கடைசி இரண்டு நாள், கிரிக்கெட் விளையாட இந்த வகையறா பாக் ஏதாவதொன்றுக்கு போயிருவோம். அய்யோ அய்யோ, வெளிநாடெல்லாம் தோத்துறும் லால்பாக்கிற்கு, ஒரே லிப் டு லிப் கிஸ்தான், சில இடங்களில் இன்னும் கொஞ்சம் விரசமாயிருக்கும். அதைப்பத்தி சொல்ல விரும்பலை.

இதன் போன்ற காரணங்களால் ஒரு தடவை எங்க வீட்டில் இருந்து, அம்மா, அப்பா, அக்காயெல்லாம் பெங்களூர் வந்திருந்தாங்க, பின்ன புள்ள வேலைபாக்குதுல்ல வருஷத்துக்கு ஒருமுறையாவது பாக்கணுமில்லை. வீட்டில், லால்பாக் கப்பன் பார்க் கூட்டிட்டு போகச்சொல்ல நான் நௌஇந்தது எனக்குத்தான் தெரியும். திரும்பவும் ஒருமுறை நிற்க,

நான் சொல்லவந்ததோ கேக்கவந்ததோ இதுதான், பொதுஇடத்தில் இந்த மாதிரி நடக்குறத போலீஸ் தடுக்குறது சரியா தப்பான்னு தெரியலை. கர்நாடகாவில் வாட்ச்மேன்கள் குச்சுவைச்சிக்கிட்டு அதுங்க உக்காந்திருக்குற பெஞ்சில் வேகமாத்தட்டி பாத்திருக்கிறேன். கண்டபடிக்கு கெட்டவார்த்தையெல்லாம் சொல்லிதிட்டுவாங்க. ஆனால் பளார் பளார்னு அடிக்கிறத நேத்தித்தான் முதல்தடவையாப்பார்த்தேன். அதுவும் பெண்களை, ஒரு பொண்ணு அழுதுக்கிட்டே ஓடினது இன்னமும் கண்ணிலையே நிக்குது

என்னைப்பொறுத்தவரை ஜோடிகள் வெளியில் இப்படி செய்வதை சரின்னும் சொல்ல முடியலை தப்புன்னும் சொல்லமுடியலை. ஆனா அந்த போலீஸ்காரம்மா அடிச்சது தப்பாத்தான் தெரியுது. நாளயுமன்னியும் கல்யாணமாகி பொண்டாட்டியைக்கூட்டிக்கிட்டு பார்க் போறங்கல்லாம் பாத்து நடந்துக்கோங்கப்பு. அவ்வளவுதான் நான் சொல்றது. ஒன்னுக்கடக்க ஒன்னுன்னா நாம அடிவாங்கினாலும் வடிவேலுமாதிரி தட்டிவிட்டுட்டு போயிறலாம். பொம்பளையாளுங்களையெல்லாம் அடிக்கிறாங்க பாத்துக்கோங்க.

இப்ப இது பெரிய பிரச்சனை ஆய்டுச்சுன்னு தெரியுது, நேத்தி சன்டிவியில் கூட போட்டாங்க. ம்ம்ம்ம் ஒன்னுமே புரியலை உலகத்திலே.

Drive against roadside Romeos

PS: பேரு பார்த்துட்டோமுல்ல கூகுளிட்டு அது ராஜ்தீப் சர்தேசாய்
Credits: IBNlive.com

6 thoughts on “Operation மஜ்னு பாத்து இருந்துக்கோங்கப்பு – updated

 1. மோகா நானும் அதைப் பார்த்தேன்.. இது தானா மேட்டர்… டாட்டா பிர்லான்னு ஒரு படம் அதுல்ல கவுண்டர் இப்படி ஒரு போலீசா வேசம் கட்டுன ஞாபகம் வருது…. ஆமா புனேல்ல நீங்க கொஞ்சம் உஷாரா இருங்க அப்பு…. வெளியூர் விவகாரம் ஆயிற போகுது…

 2. //ஆமா புனேல்ல நீங்க கொஞ்சம் உஷாரா இருங்க அப்பு…. வெளியூர் விவகாரம் ஆயிற போகுது…//

  🙂

 3. ஆஹா இதென்னடா ஒம்பாபோச்சு, நானெல்லாம் ரொம்ப நல்லபுள்ளையாக்கும்.

  சரி சரி அட்வைஸ் சொன்ன இரண்டுபேரும் நல்லா இருந்தா சர்தான்.

 4. அந்த போலீஸ்காரங்கள எல்லாம் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களாமே தம்பி? நேத்து ராத்திரி தினமலர் கடைசி செய்தில படிச்சேன்?????
  ஸ்ரீஷிவ்..

 5. //அவரைத்தான் அனுப்புவாங்க உண்மையிலேயே நல்ல திறமையான ஜர்னலிஸ்ட், பிரணாய் அண்ணாச்சிக்கும் இவருக்கும் என்ன பிரச்சனையோ நான் அறியேன் பராபரமே//
  இங்கே கொஞ்சம் தகவல் இருக்கிறது –
  http://us.rediff.com/money/2005/apr/27rajdeep.htm

 6. எதோ மோகா.. பாத்து இருந்துகிட்டா நல்லது தான்… இந்த பதிவு பத்தி நம்மக் கச்சேரியிலே வாசிச்சுருக்கோம்.. முடிஞ்சா வாங்களேன் நம்மக் கச்சேரிக்கு….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s