சர்க்கஸ்காரி

சர்க்கஸிற்கும் எனக்குமான தொடர்பு அதிகம் கிடையாது, என் வாழ்நாளில் நான்கைந்து முறைதான் பார்த்திருப்பேன். ஆனால் ஒவ்வொறுமுறையும் சர்க்கஸ் பார்த்துவிட்டு வந்ததும் அது ஏற்படுத்தும் தாக்கம் மாறாதது.

சர்க்கஸ் பார்த்துவிட்ட பிறகு வரும் எண்ணங்களும் ஒருமாதிரியாகவே இருந்துவருகிறது பலஆண்டுகளாய். ஒவ்வொறுமுறையும் பார்க்கும் பொழுதும் ஏற்படும் பிரமிப்பு, அந்த சர்க்கஸ் வீரர்களுடன் பழக வேண்டும் என்ற துடிப்பு, அவர்கள் வெளியில் காண்பிக்கும் முகத்திற்கு பின்னால் இருக்கும் சோகத்தை கண்டிறிய நினைக்கும் எண்ணம், பின்னர் சர்க்கஸ்காரிகளைப் பற்றி கிளம்பும் விவாதம்.

இந்தமுறையும் அத்தனையும் நிகழ்ந்தது, நாங்கள் தங்கியிருக்கும் பகுதியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் சர்க்கஸ் கூடாரம் அமைக்கப்பட்டதிலிருந்து உடன் தங்கியிருக்கும் நண்பர்களை பார்க்கலாம் என நச்சரிக்கத்தொடங்கினேன். மறுக்கமுடியாத அவர்களும் என்னுடன் ஒரு வாரஇறுதியை சர்க்கஸில் கழிக்க ஒப்புக்கொண்டனர். மென்பொருளiயில் தந்த பணம், முதல் முறையாக முதல் வகுப்பு டிக்கெட் எடுக்கும் வசதியைத்தந்திருந்தது. மிகப்பெரிய சர்க்கஸ் என்றில்லாமல் கொஞ்சம் சிறியதுதான்.

எப்பொழுதையும் போல என் உணர்வுகளை அத்துனை வெளிப்படையாக காட்ட முடியாத ஒரு சூழ்நிலை, முன்னைப்போலில்லாமல் நான் இப்பொழுது ஒரு மென்பொருளாளன். விகல்பமில்லாமல் சிரித்த பழையகாலங்கள் நினைவில் வந்தாலும் சிரிப்புவரவில்லை, அத்துனை எளிதாக. ஆனால் அவர்களில் உடலசைவில், பயிற்சிகளில், வித்தியாசமான திறமைகளின் மீது எனக்கிருந்த பிரமிப்பு மட்டும் அப்படியேயிருந்தது. விலங்குகள் சம்மந்தப்பட்ட ஒரு சட்டம் இந்தியாவில் நிலுவையில் உள்ளதால் விலங்குகள் அவ்வளவாக இல்லை.

முன்பொறுமுறை எங்கள் வீட்டின் பக்கத்திலிருந்து ஒரு இடத்தில் சர்க்கஸ் கூடாரம் அமைக்கப்பட அந்த மனிதர்கள் டீ, காப்பி குடிக்க வரும் வேளைகளில் அவர்களிடம் பேச்சுவார்த்தை கொடுத்திருக்கிறேன். அவர்களின் சர்க்கஸ் திறமைகளைப் போலில்லாமல் பேச்சு திறமை அவ்வளவு நன்றாக இருக்காது. சில வாழ்க்கையில் நொந்துபோன ஜோடிகளைக் கூட நான் அந்த இடத்தில் பார்த்திருக்கிறேன். அவர்களின் டீ,காப்பிக்கு காசு கொடுத்து பழகிக்கொள்ளும் என் தந்திரம் அவர்களிடம் செல்லுபடியாகியிருந்தாலும். அதற்காக பின்காலங்களில் வருந்தியிருக்கிறேன்.

அவர்களுக்கே உரிய பேச்சு வழக்கில் அவர்கள் சொல்லும் கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் காரணங்களால் இந்த முறையும் நான் அவர்களுடன் பேச்சு கொடுக்க மனம் பிரியப்பட்டாலும் சூழ்நிலை ஒப்பவில்லை. என்னவோ சர்க்கஸ் பிடிக்காததைப்போலும் எனக்காகப் பார்ப்பதைப் போலவும் உட்கார்ந்திருந்த நண்பர்கள் மத்தியில் நான் இன்னும் கொஞ்சம் சர்க்கஸ் பற்றிய என் அனுபவங்களைப்பேசப் போக அவர்கள் இன்னும் தவறாக எண்ணுவார்களோ என்ற எண்ணமே மிஞ்சியிருந்தது.

நான் மட்டும் அவர்கள் செய்யும் ஐட்டங்களைப்பார்க்காமல் அவர்கள் கண்களை படிக்க நினைத்து முயன்றுகொண்டிருந்தேன். அந்தக் கண்களும் எனக்கு எப்பொழுதையும் போல் நிறையக் கதைகளை சொல்லிக்கொண்டிருந்தது. அவ்வளவுதான் முடிந்துவிட்டது நேராய் ஹோட்டலுக்கு வந்து சூப் ஆர்டர் செய்துவிட்டு நிமிரவும் ஆரம்பித்தது சர்க்கஸ்காரிகள் பற்றிய சர்ச்சை. வேறென்ன அவர்கள் கற்பைப்பற்றிய விவாதங்கள்தான். வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்திருந்ததால், நண்பர்கள் கொஞ்ச நாளைக்கு அரசியல்வாதிகளுக்கும் பணக்காரர்களுக்கும் கொண்டாட்டம் தான் இனிமேல் வெள்ளைக்காரிங்க விளையாட்டுத்தான்னு சொல்லி ஆரம்பித்து அவர்கள் அறிந்த இதுபோன்ற சம்பவங்களை வரிசையாகச்சொல்ல எனக்கு ஆச்சர்யமே மிஞ்சியது.

அவர்கள் வேலை செய்யும் சூழ்நிலை கூட அதற்குக் காரணம், குறையாடைப்பெண்கள், குடித்துவிட்டு இரவில் ஆட்டம் போடுபவர்கள் இப்படிப்பட்டவர்கள் உடன் வேலை செய்வதால் அவர்களால் சர்க்கஸ்காரிகளின் கற்பைப்பற்றி விமரிசனம் சர்வசாதாரணமாய் செய்யமுடிந்தது. நானும் என்னால் முடிந்தவரை பெண்ணியக்கருத்துக்களை பேசப்பார்த்து, அவர்களின் முகபாவங்கள் மாறுவதைப்பார்த்து நிறுத்திவிட்டேன். உடன் இருப்பவர்கள் அனைவருமே சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். தனக்கென்ற தனிமதிப்புடன். என் கருத்துக்களைச் சொல்லப்போய் சிலவற்றை விலையாகக்கொடுக்க விரும்பவில்லை.

இவர்கள் மட்டுமல்ல, நான் பார்த்த சிலதடவைகள் என்னுடன் சர்க்கஸ் பார்க்க வந்த அனைவருக்குமே இதேபோன்ற விமரிசனங்களையே வைத்தது வருத்தத்தையே அளித்தது. ஒருவேளை அது உண்மையாகவே இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அதைப்பற்றிய விமரிசனம் தேவையில்லாதது என்பது என் கருத்து.ஆனால் ஒவ்வொரு முறையைப்போலவும் இந்த முறையும் அந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தது. பார்க்கலாம் இன்னொரு சர்க்கஸ் பார்க்கும் பொழுதாவது என்னுடைய இந்த நிலைப்பாடு மாறுகிறதா என.

5 thoughts on “சர்க்கஸ்காரி

  1. திருச்சியில் கீழ புலிவார் ரோட்டில் உள்ள டாக்டர் மதுரம் மைதானத்தில் முன்புஎல்லாம் சர்க்கஸ் நடத்துவார்கள் அதற்கு இரவில் மின் ஒளி 25கி.மீ. தெரியும் வின்னில் இப்பொழுது எல்லாம் மாறிப்போச்சு.
    சரி தாங்கள் எந்த ஊர்

  2. நான் BHEL நண்பரே. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  3. ஆஹா, நம்ம திருச்சிகாரங்க டோய், பாலக்கரை பக்கம் வந்திருக்கிங்கீங்களா, இல்லனா, சும்மா இப்ப நம்ம பக்கம்(!) வாங்க

  4. சர்க்கஸ்களில் வரும் மனிதர்களும், விலங்குகளும் ஒரே மாதிரியாகவே பார்க்கப்படுவதாக எனக்கு ஒரு எண்ணம். இதனாலேயேவோ என்னவோ சர்க்கஸ் பார்ப்பதால் மனம் கனமாவது போல் உணர ஆரம்பித்து, சர்க்கஸ் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். பல ஆண்டுகள் கழித்து என் பிள்ளைகளும் இதே மாதிரி நினைப்பதும் தெரிய வந்தது.

  5. வெளிக்கண்டநாதரே திருச்சி பலம் கூடுவதைப்போல் உள்ளதே. 🙂

    தருமி உண்மைதான் அவர்களையும் விலங்குகளைப்போல் நினைப்பதை நினைத்து வருந்துகிறேன். சொல்லப்போனால் இன்னும் கேவலமாக வரும் விமரிசனங்கள் வருத்தத்தையே அளிக்கின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s