ஹேக்கிங் ஹேக்கிங் Hacking

ஹேக்கிங் செய்வதைப் பற்றி நான் யோசித்த பொழுது நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு கம்ப்யூட்டரைப்பற்றி அவன்னாவும் ஆவன்னாவும் தெரியாது, ஆனால் நானும் இமெயில் படித்துக்கொண்டும் அனுப்பிக்கொண்டும் இருந்தேன். யாருக்கென்று கேட்கிறீர்களா, எனக்குத்தான். அதாவது எனக்கு நானே அனுப்பிக்கொள்வது. அப்பொழுதே மற்றவருடைய யாகூ பாஸ்வேர்டை உடைக்க முயன்றேன், என்னால் ஆனவரை. (அதாவது தெரிந்த நண்பர்களின் பாஸ்வேர்டை யூகித்து உடைக்க.)

பின்னர் நான் படிச்சி கிழிச்சி கிழிப்புக்கு, ஒரு டுபுக்கு காலேஜில் எங்கவீட்டில் சேர்த்துவிட்டார்கள், இங்கே தொடங்கியது நான் கணிணியைப்பற்றி கற்றுக்கொள்ள தொடங்கியது. இன்னும் கொண்டேயிருக்கிறேன். இடைப்பட்ட சமயத்தில் சில பல உத்திகள் இணையத்திருட்டை செயல்படுத்த பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் ஐடென்டிடி பிரச்சனையால் எப்படியென்று சொல்லமுடியாது. ரொம்ப பெரிய அளவிலெல்லாம் கிடையாது. ஏதோ என்னாலான சிறிய சிறிய திருட்டுக்கள்.

இதைப்பற்றியும் சில பல ஹேக்கிங் முறைகளைப்பற்றியும் எழுதலாம் என்று நினைக்கிறேன். தமிழ்மணத்திலோ இல்லை இன்னும் சில இடங்களிலோ(ப்ளாக்குகளில்) பிரச்சனை வருமென்று குருவி சொல்வதால் யாராவது உதவ முடியுமா. இதில் பிரச்னை வருமா? எழுதலாமா? என்று சொல்லுங்களேன். நிறைய விஷயங்களும், சில தந்திரங்களும் கைவசம் இருக்கிறது???(இருந்தது!!!). எழுதலாமென்றால் எழுதுகின்றேன். எப்பொழுதும் போல் பார்த்துவிட்டு பதிலெழுதாமல் போகாமல் பதிலெழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

15 thoughts on “ஹேக்கிங் ஹேக்கிங் Hacking

 1. கட்டாயம் தமிழ்மணத்துலயே எழுதுங்க மோகன்தாஸ்..

  தமிழ்ல கதை,கட்டுரை,கூச்சல்களோட.. சில தொழில்நுட்பக்கட்டுரைகளும் வரணும்… அது ஹாக்கிங்ல இருந்து கூட வரலாம் 😉

 2. You should write on this subject. Have a standard disclaimer saying its for educational use 🙂

 3. இன்றைய தினம் நமது தமிழ்மணம் மன்றம் சூறையாடப்பட்டிருக்கிறதே. அது நீங்கள் தானா ? 🙂
  ஜோக்கை தவிர்த்து,உங்கள் ஆக்கங்கள் தமிழிற்கும தமிழ்மணத்திற்கும் பெருமை சேர்க்கும். எங்களைப் போன்ற க.கை.நா. க்கு பலனாயிருக்கும்.

 4. அடடா… என்னைப்போலவே இன்னமும் பல ஆட்கள் இருக்கின்றனர்.

  எழுதுங்க எழுதுங்க.

 5. ingaye ipave elluthunga..en first email hack panina aala nan inamum pali vangala 🙂

 6. யாத்ரீகன் பண்ணுரேங்க, ஆனா இன்னமும் முழுசா நம்பிக்கை வரலைங்கோ.

  சிவா உங்களுக்கும் நன்றி அதே தானுங்கோ இன்னமும் முழுசா நம்பிக்கை வரலைங்கோ.

  மணியன் என்னயிது, ஆரம்பிக்கவேயில்லை பிரச்சனையை தொடங்கறீங்க. உண்மையிலேயே பயமா இருக்கு எழுதலாமா வேண்டாமான்னு.

  மூர்த்தி & முத்து நன்றீங்கோ.

  சினேகிதி மெயிலை உடைக்கிறதைப்பத்தி சொன்னேன்ன பெடரல் போலிஸ் வரும். 🙂

  உண்மையிலேயே இன்னும் தீர்மானிக்க முடியலை எழுதலாமான்னு.

 7. மோகன்தாஸ் கட்டாயம் எழுதுங்க.

  களவும் கற்று மற என்ற பழமொழி இருக்குது தானே.

  நீங்க சொல்லும் கட்டுரையின் வாயிலாக நாங்களும் எங்களை பாதுகாக்க வழி தேட முடியும் தானே.

  பிரச்சனைகள் வருவதையும், அதை தடுக்கும் முறையையும் சொன்னால் நன்றாக இருக்கும்.

  உங்க கட்டுரைத்தொடர் வெற்றியடைய வாழ்த்துகள்.

 8. அது சரி… அது என்ன ‘தமிழ்மணத்திலேயே’ எழுதலாமான்னு ஒரு கேள்வி? தமிழ்மணம் மன்றத்திலேயா எழுதப்போறீங்க?!

  //மூர்த்தி said…
  அடடா… என்னைப்போலவே இன்னமும் பல ஆட்கள் இருக்கின்றனர்.//

  ஆஹா.. மூர்த்தி…பூனைக்குட்டி வெளீல குதிக்குது போலருக்கே!! ம்ம்…நடத்துங்க!

 9. //எங்களைப் போன்ற க.கை.நா. க்கு பலனாயிருக்கும்.//

  இந்த ‘க.கை.நா’ன்ற வார்த்தைக்குக் காப்பிரைட் எடுத்திருக்கறது நான் தான்:-)

 10. பரஞ்சோதி எழுதலாமுன்னு தான் நினைச்சேன், ஒருதடவை பி.கே.எஸ் அண்ணாச்சி காசியுடைய வலைபதிவுல இருந்து விவரங்களை எடுத்து போட்டாரு, அதைப்பத்தி அப்ப அவருகிட்ட கேட்டாங்க, என்னால் கூட எப்படி எடுத்திருப்பாருன்னு சொல்ல முடியும் இதைப்போல பல விஷயங்களை. ஆனால் காசி ஒத்துக்கணும் உதாரணமா இந்த நிகழ்ச்சியை பயன்படுத்த. அதைப்போல் நிறைய இருக்கு கைவசம். ஆனா எழுதலாமான்னு தெரியலை.

  மாயவரத்தான் ஏன் எல்லாரையும் தப்பாவே நினைக்கிறீங்க.

  துளசி அக்கா க.கை.நா என்ன கம்ப்யூட்டர் கைநாட்டா? விவரமா சொல்லுங்கப்பா. அப்பத்தான் என்னை மாதிரி அரை லூசுங்களூக்கும் புரியும். 🙂

 11. அதுவும் முக்கியமாக ஒருவர் என் அத்துனை பதிவிலும் அலுக்காமல் ‘-‘ குத்துகிறார் அதை கண்டுபிடிப்பதும் சுலபமே. அதைப்பற்றியும் சொல்லலாமா என்று யோசிக்கிறேன்.

 12. //தமிழ்மணத்திலோ இல்லை இன்னும் சில இடங்களிலோ(ப்ளாக்குகளில்) பிரச்சனை வருமென்று குருவி சொல்வதால் யாராவது உதவ முடியுமா.//
  நம்ம டூப்ளிகேட் டோண்டு போல நிறைய பேரு இருக்காங்க 🙂

  //அப்பொழுதே மற்றவருடைய யாகூ பாஸ்வேர்டை உடைக்க முயன்றேன், என்னால் ஆனவரை.//
  இதற்குண்டான தகவல்களைத் தனிமடலாக அனுப்புங்கள் :-))

 13. மாயவரத்தான்… said…

  //ஆஹா.. மூர்த்தி…பூனைக்குட்டி வெளீல குதிக்குது போலருக்கே!! ம்ம்…நடத்துங்க!//

  பூனைக்குட்டி வெளில குதிக்குதா? ஏன் குதிக்குது? யோவ் மாயவரம்.. என்னய்யா இது பினாத்தல்?

  மோகன்தாஸ் சொன்ன அத்தனையும் நிஜம். என்னாலும் முடியும். அவர் சொன்ன அத்தனையிலும் நானும் ஈடுபட்டிருக்கிறேன்.

 14. கணேஷ், நீங்களும் கணிணியில் வேலைப்பார்ப்பதால் நான் உபயோகப்படுத்திய முறைகளை 90% செய்துபார்த்திருப்பீர்கள். 🙂 சிலசமயம் இது நாம் உடைக்க நினைக்கும் ஆளைப்பொறுத்தது.

  மூர்த்தி நீங்களும் எழுதுங்களேன். நல்லாயிருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s