ரஜினியின் ‘சிவாஜி’ கதை

வடக்கே அமிதாப்பச்சன் முதல், வடபழனி ஆட்டோக்காரர் வரை ஆர்வமாக விசாரிக்கிற விஷயம்… ரஜினியின் ‘சிவாஜி’!

ஏவி.எம். தயாரிப்பில் உருவாகும் இந்தப் புதிய படத்தின் டிஸ்கஷன் இப்போது நடப்பது, சென்னை – தி.நகர் கிருஷ்ணா தெருவில் இருக்கிற டைரக்டர் ஷங்கரின் அலுவலகத்தில். அவ்வப்போது ரஜினியின் காரும் தெருவுக்குள் தென்பட, ஏரியாவில் ரசிக விசில்கள்!

அதிரடியாகக் கதை தயாராகி, விரைவில் படப்பிடிப்பைத் துவங்க வேண்டும் என்பதால், ஷங்கரின் அலுவலகம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கிறது. எட்டு புரொடக்ஷன் மேனேஜர்கள், பத்து உதவி இயக்குநர்கள் பம்பரமாகச் சுழல்கிறார்கள்.

ஒளிப்பதிவு கே.வி.ஆனந்த், இசை ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்கள் வைரமுத்து, ஆர்ட் டைரக்ஷன் தோட்டாதரணி, வசனம் சுஜாதா எனப் பெரும்புள்ளிகளும் மும்முரமாகத் தயார்.

கதாநாயகி ஷ்ரேயா என அறிவிக்கப்பட்டதும், ஏழெட்டு கவர் ஸ்டோரிக்கள் வித்துப்போச்சு!

‘காதல்’ பாலாஜி சக்திவேல், அடுத்த பட வேலைகளுக்கு மத்தியில், தன் குருவுக்காக ‘சிவாஜி’ வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். ‘உல்லாசம்’ பட இயக்குநர்களும், இப்போது விளம்பரத் துறையில் பரபரப்பாக இருப்பவர் களுமான பிரபல இரட்டையர்கள் ஜேடி& ஜெர்ரியும் இந்தப் படத்தின் பிரெயின் டீமில் இருக்கிறார்கள்.

‘சிவாஜி’ என்ற தலைப்புக்குக் கீழே, முறுக்கேற்றும் பஞ்ச்சாக ‘தி பாஸ்’ என்று கேப்ஷனும் ரெடி! சரி, கதை?

ரஜினியை அரசியல் சுழலுக்குள் இழுத்து, தமிழகமே பரபரப்பாக இருந்த நேரம்… ரஜினிக்காக ஷங்கர் தயார் செய்த ஸ்பெஷல் ஸ்கிரிப்ட்… ‘முதல்வன்’. ரஜினியை ‘அட!’ போட வைத்த கதை அது. ஏற்கெனவே எக்கச்சக்க பரபரப்பு றெக்கை முளைத்துப் பறக்கிற வேளையில், இது மாதிரியான கதை இன்னும் சர்ச்சைகளைக் கிளப்பிவிடும் என்று எடுத்துச் சொல்லி, மனசே இல்லாமல் ஷங்கருக்கு அப்போது ‘நோ’ சொன்னார் ரஜினி. அப்போதி லிருந்து ஒவ்வொரு முறையும் ரஜினி & ஷங்கர் காம்பினேஷன் பற்றிப் பலமுறை பேச்சு எழுந்தது. இப்போது ‘சந்திரமுகி’யின் சாதனை வெற்றிக்குப் பிறகு, ‘நாம படம் பண்ணலாம். கதை ரெடி பண்ணுங்க!’ என ரஜினியே ஷங்கரை அழைத்தது, சர்ப்ரைஸ்!

ஒரு நாள் காஷ§வலாக ரஜினி சொன்ன ‘ஜீரோ டு ஹீரோ!’ விஷயம்தான் கதையின் ஒன்லைன் என்கிறார்கள். ‘வாழ்க் கையில நான் அனுபவிச்ச ஒரு விஷயம் இது. முன்னேறணும்னு ஒருத்தன் நினைச்சால், அவனை எப்படிடா காலி பண்றதுன்னு அடுத்த செகண்ட் பத்து பேரு யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. இது தான் நம்ம எல்லோர் வாழ்க்கையிலும் நடக்குது. எனக்கும் அதுதான் நடந்தது. பெங்களூர்ல கண்டக் டரா இருந்த காலத்திலும் சரி, இப்போ ‘சந்திரமுகி’ சீசனிலும் சரி… இந்த ஒரு விஷயம் மட்டும் மாறவே இல்லை.

அப்படி காதில் வந்து விழுகிற ஒவ்வொரு விஷயத் தையும் மனசில் தூக்கிச் சுமந்துக்கிட்டு, சோகமும் துக்கமுமா அலைஞ்ச காலங்கள் நிறைய! மொத்தமா இந்த மன உளைச்சல்ல இருந்து எப்படித் தப்பிக்கிறதுன்னு வழி தேட ஆரம்பிச்சப்போதான், ‘ஆண்டவா… காப்பாத்து!’ன்னு எல்லாத்தையும் அவன் கையில ஒப்படைச்சுட்டு, இன்னிக்கு நம்ம வேலை என்ன… நடிப்பு, அதை ஒழுங்காச் செய்வோம்னு இறங்கினேன். பாரமும் குறைஞ்சு போச்சு, வேலையும் ஈஸி ஆச்சு!

ஏன்னா, இன்னிக்கு வேலையில் குறை வெச்சா, அது நாளைக்கு நமக்குதான் சுமை. ‘தட் தட் டே, தட் தட் வொர்க்’னு நம்ம வேலையை உருப்படியா, கவனம் சிதறாமச் செய்தாலே போதும்… எல்லாரும் ஜெயிச்சுரலாம்!’’ என்று ரஜினி, தன் வாழ்வில் என்ன நடந்தது என்று சொல்லிக்கொண்டே போக, அதில் இருந்து பிறந்ததுதான் கதை.

எங்கோ ஒரு கிராமத்தில் சாதாரண கூலித் தொழிலாளியாக தன் வாழ்க்கையைத் துவங்குகிற ஒரு இளைஞன், நாட்டுக்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற துடிப்போடு திரிகிறான். அவன் சொல்வதை, செய்வதை, ‘ஆங், பெருசா கௌம்பி வந்துட்டான்’ என்று அலட்சியப்படுத்துகிறது ஒரு கூட்டம்.

ஒரு கட்டத்தில், அன்பாக, பண்பாகச் சொன்னால் இவர்களுக்குப் புரியாது என அதிரடி அவதாரம் எடுக்கிறான். ஊரே நடுங்க ஆரம்பிக்கிறது. இப்படிப் படிப்படியாக மேலே வருகிற ரஜினி, இறுதியில் ஒட்டுமொத்த நாடும் திரும்பிப் பார்க்கிற ‘சிவாஜி’யாக இருப்பார். இதுதான் கதை என்கிறார்கள். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸில், இந்தியா முழுக்க இருக்கிற நதிகள் எல்லாம் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதை கிராபிக்ஸ் கலக்கல்களால் மிரட்டப் போகிறார்களாம்.

நன்றி ஆனந்தவிகடன்.

2 thoughts on “ரஜினியின் ‘சிவாஜி’ கதை

  1. திரு மோகந்தாஸ் அவர்களே! சிவாஜிப் பட கதைப் பற்றி விரைவான சேதி சொல்கிறீர்களே, நீங்கள் என்ன அப்படத்திற்கு பிரத்தியோக விளம்பரதாரா. ரஜனி ஒரு பில் கேட்ஸ் போல நம் வாய் விளம்பரங்களாலேயே பில்லினீயராகுவர்கள், வாழ்க உங்கள் சேவை!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s