சுஜாதா சுமக்கும் சிலுவை

சுஜாதா எதைப்பற்றி எழுதினாலும் பிரச்சனை தான். இரண்டு வாரங்களுக்கு முன்னர். 2010ல் உலகம் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி தன் கற்பனை வளத்தை திறந்து விகடனில் எழுதியிருந்தார். அப்பொழுது, இன்னும் சில காலங்களில் மனிதர்களுக்கு டிப்ரஷன் அதிகரிக்கும் மென்றும், அதைப்பற்றிய சில விளக்கங்களையும் கொடுத்திருந்தார் மனுஷன். அதில் ஒரு பிரச்சனை இப்பொழுது.

அதைப்பற்றி அவர் விகடன் கற்றதும் பெற்றதுமில் எழுதியது,

“டாக்டர் ஷாலினி எனக்கு போன் செய்து, டிப்ரஷனைப் பற்றி நீங்கள் விகடன் இதழில் எழுதியிருந்தது வரவேற்கத்தக்கதே! ஆனால், ப்ரொஸாக் மாத்திரைக்குப் பக்கவிளைவுகள் உண்டு என்று எழுதி விட்டீர்கள். என் பேஷன்ட்டுகள் அதை எடுத்துக்கொள்ளப் பயப்படுகிறார்கள். ப்ரொஸாக் பக்கவிளைவே இல்லாத ‘ஓர் அற்புத மருந்து’ என்று சொன்னார். நான் ப்ரொஸாக்கைப் பற்றி எழுதியதற்கு ஆதாரம் என்ன என்பதை வாசகர்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

‘அடுத்த ஐம்பது வருஷம்’ (The Next Fifty Years) என்ற புத்தகத்தில், ஒரு கட்டுரை படித்தேன். ‘ஐம்பது வருஷம் கழித்து, இன்னமும் துக்கமாக இருப்போமா?’ என்பதே அந்தக் கட்டுரையின் தலைப்பு. அதில், ‘ப்ரொஸாக்கின் பக்க விளைவுகளாக, ஆண்களில் அவ்வப் போது செக்ஸ் உணர்ச்சி பாதிக்கப்படு வதும், பொதுவாக ஞாபகசக்திக் குறைவும் கவனக் கலைப்பும் ஏற்படும்’ என்று எழுதியிருக்கிறார்.

இதை எழுதிய ராபர்ட் எம். சாபோல்ஸ்கியின் ‘பயோடேட்டா’ வையும் பார்த்தேன். ஸ்டான் ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில், பேரா சிரியர். ஸ்டான்ஃபோர்டு மருத்துவப் பள்ளியில் நியூராலஜி (நியூமராலஜி இல்லை… இது நரம்பியல்!) பேராசிரியர். மன அழுத் தத்தைப் பற்றி இருபத்து மூன்று வருஷ ஆராய்ச்சி அனுபவம் உள்ளவர். Mechanisms of Neuron Death போன்ற பாடப் புத்தகங்களுடன், என் போன்ற பாமரர் களுக்காக ‘வரிக்குதிரைகளுக்கு ஏன் அல்சர் வருவதில்லை’ போன்ற புத்தகங்களும் எழுதியுள்ளார்.

அவர் சொன்னால் உண்மையாகத் தான் இருக்கும். பக்கவிளைவுகளே இல்லாத மருந்து என்பது ஒரு ஆக்ஸிமோரான். பக்கவிளைவுகளே இல்லை என்று யாராவது சொன்னால், அது கேள்விக்குரியது. எல்லா மருந்து பாட்டில்களுடனும், தயாரிப்பாளர் எட்டாக மடித்து ஒரு சீட்டு வைத்தி ருப்பார். எறும்பு எழுத்துகளில் நீளமாக அச்சாகியிருக்கும் வாசகங்களைப் படித்தால், இது தெளிவாகும்.

ப்ரொஸாக்கின் புதிய தலைமுறையைப் பரிசோதித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்குப் பக்க விளைவு கள் குறைவு என்கிறார்கள். ஹார்மோன் சிகிச்சையையும் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதில் மற்றொரு விஷயம்… இந்தப் பகுதி யில் நான் எதைப் பற்றி எழுதினாலும், அந்தத் துறையில் உள்ளவர்கள் ‘இவன் எப்படி எங்கள் பேட்டைக்கு வரப் போச்சு!’ என்று, நான் எழுதியதிலும் உண்மை இருக்கலாம் என்பதைப் பற்றி கவலையே படாமல் வீறுகொண்டு எழுகிறார்கள்.

பிரபலமாக இருப்ப தன் சிலுவை இது என்பதை என் உண்மையான வாசகர்கள் தெளிவாக அறிவார்கள் என்பதால், இம்மாதிரியான அரை நிஜங்களுக்கு நான் பெரும்பாலும் பதில் தருவது இல்லை. தந்து, அது விவாத மானால்… பிறகு அந்த விவாதமே மெள்ள மெள்ள அற்பமாகி, ‘சரி, போன புதன் கிழமை நீ எங்கே இருந்தாய்?’ என்ற லெவலுக்கு இறங்கிவிடலாம்!. “

நன்றி ஆனந்தவிகடன்.

8 thoughts on “சுஜாதா சுமக்கும் சிலுவை

 1. பிறகு அந்த விவாதமே மெள்ள மெள்ள அற்பமாகி, ‘சரி, போன புதன் கிழமை நீ எங்கே இருந்தாய்?’ என்ற லெவலுக்கு இறங்கிவிடலாம்!. ”
  ///

  இதே சாரோட டச்! :)) :)) :))

  நெஜமாவே சிரிப்பை அடக்க முடியலை.

 2. “போன புதன் கிழமை நீ எங்கே இருந்தாய்” ஜோக்கை “சார்” பல வருடங்களாகவே சொல்லி வருகிறார். அவருக்கே அது அலுத்துப் போகாதது ஆச்சரியம்தான்.

 3. மோகன்,

  விகடன்.காம் காப்பிரைட் செய்திருக்கும் விஷயங்களை அவர்கள் அனுமதியில்லாமல் அப்படியே வெளியிடுவதில் (அதுவும் இணையத்தில் இலவசமில்லாத பட்சத்தில்) பிரச்னை உண்டா என கவனிக்கவும். எதற்கும் நன்றி: ஆனந்த விகடன் என கட்டுரையின் இணைய முகவரியையும் இணைக்கவும்

  (கட்டுரைகளுக்கும் படங்களுக்கும் நன்றி! 🙂

  – அலெக்ஸ்

 4. //ஆனால், ப்ரொஸாக் மாத்திரைக்குப் பக்கவிளைவுகள் உண்டு என்று எழுதி விட்டீர்கள். என் பேஷன்ட்டுகள் அதை எடுத்துக்கொள்ளப் பயப்படுகிறார்கள். ப்ரொஸாக் பக்கவிளைவே இல்லாத ‘ஓர் அற்புத மருந்து’ என்று சொன்னார்.//

  Prozac Side effects

 5. நன்றிகள் ஜெயஸ்ரி, தலைவர், அலெக்ஸ் பாண்டியன், வாய்ஸ் ஆப் விங்ஸ்.

  அலெக்ஸ், விகடன் காசுகொடுத்து படிக்க வேண்டியிருப்பதால் தான் வளைப்பதிவில் இடும் எண்ணம். உங்கள் உதவிக்கு நன்றி.

  ஜெயஸ்ரி, நானும் அதைப்படித்தவுடன், அவருடைய நகைச்சுவை உணர்வை எண்ணினேன்.

  தலைவர், அவருக்கு இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் அவர் இதைப்போல் குறிப்பிடுவது தவிர்க்கமுடியாதது.

  விங்ஸ் உங்கள் நிரலுக்கு நன்றி.

 6. //பிறகு அந்த விவாதமே மெள்ள மெள்ள அற்பமாகி, ‘சரி, போன புதன் கிழமை நீ எங்கே இருந்தாய்?’ என்ற லெவலுக்கு இறங்கிவிடலாம்!. ”
  ///

  :)) ஒரே வரியில் குபீர் சிரிப்பை வரவழைப்பதில் அவருக்கு நிகர் இல்லை.

  ஆமா. அவர் சொன்ன ’15 நிமிடப் புகழ்’ மாதிரி இதுவும் மறக்கப்பட்டு ‘சாப்ட்டாச்சா?’ அளவுக்கு இறங்கிவிடும்.

  நன்றி மோகன்தாஸ்.

  அன்புடன்
  சுந்தர்

 7. நன்றி சுந்தர் உங்கள் பின்னூட்டதற்கு. நானும் அதைப்படித்தவுடன், அவருடைய நகைச்சுவை உணர்வை எண்ணினேன்.

 8. சார் இப்படி எல்லாம் எழுதாட்டா எனக்க,…எல்லோருக்கும் விழிப்புணர்வு என்பதே இருந்து இருக்காது.
  நன்றி மோஹன் தாஸ்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s