காலச்சுவட்டுக்கு சுஜாதாவின் ‘வழக்கமான’ பதில்

பெரும்பாலும் சுஜாதா, தனக்கு வரும் விமரிசனங்களுக்கு நேரடியாக பதிலளிப்பதில்லை, அப்படியே அளிப்பதாக இருந்தாலும், சூசகமாகத்தான் பதிலளிப்பார்,
போகும் போக்கில் கற்றதும் பெற்றதுமிலோ, இல்லை, சுஜாதாவிடம் கேளுங்களிலோ நக்கலடித்துவிட்டு போய்விடுவார். உதாரணம் நிறைய இருக்கிறது. அதுபோல், குமுதத்தில், கலைப்படங்களை உண்மையிலேயே விளையாட்டாக, சிங்கியடிப்பதாக சொன்னதற்காக, காலச்சுவடு, கடுமையாக விமரிசனம் எழுதியது. அதற்கு தன் வழக்கமான பாணியில் பதிளலித்துள்ள சுஜாதா, காலச்சுவட்டின் இந்த நிலையை, விமரிசன உலகின் ‘செலக்டிவ் மெம்மரி லாஸ்’ என்று கூறிப்பிட்டுள்ளார்.

நன்றி – விகடன், சுஜாதா.

‘வியாபாரப் பட உலகில் இயங்குவதால் சுஜாதாவுக்கு கலைப்படங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது’ என்று ஒரு கட்டுரை வந்திருந்ததே படித்தீர்களா, ‘கணையாழி’யின் கடைசிப் பக்கங்களில் எம்.எஸ். சத்யுவின் கரம்ஹவா, சத்யஜித்ரேயின் அபர் சன்சார், மகாநகர் ஹ்ரித்திக் கட்டக்கின் படங்கள், நிஹலானியின் அர்த் சத்யா, பெனகலின் அங்கூர், மிருணாள் சென்னின் ஏக்தின் பிரதி தின், கரிஜ் ஜானு பருவாவின் தேசிய விருதுப் படம், ஷங்கர் நாகின் கன்னேஸ்வர ராமா, கிரிஷ் கர்னாடு, கிரிஷ் காசரவள்ளி போன்ற டைரக்டர்களின் கடசார்த்தா வம்ச விருக்ஷா போன்ற கன்னடப் படங்கள், அரவிந்தனின் ஷக்தி சிதம்பரம், கோடார்டு, குரஸோவாவின் ரோஷோ மான், ட்ரீம்ஸ் அனைவரையும் அனைத்தையும் பற்றி உங்கள் கட்டுரைகளைப் படித்துத்தான் தெரிந்துகொண்ட எனக்கு இது ஆச்சர்யமளித்தது. சமீபத்தில் கூட சன்டான்ஸ் விழாவில் ஜாரஜியாவிலிருந்து காட்டப் பட்ட குறும்படத்தின் திரைக்கதை அமைப்பைப் பற்றி எங்களுக்கெல்லாம் பாடம் போல எழுதியிருந்தீர்கள். அவருக்கு இதெல்லாம் தெரியாதா?’ என்று ஓர் இளைஞர் நீண்ட மின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு என் பதில்… ‘விமர்சன உலகில் ‘செலக்டிவ் மெமரி லாஸ்’ என்று ஒரு உபாதை உண்டு. அதை அறிந்துகொள்ள உங்களுக்கு இன்னும் கொஞ்சம் வயசாக வேண்டும்’ என்பது தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s