தேசிகன் அண்ணாவின் வேதாளமும் நானும்

கேள்விகள் கேட்கமாட்டேன் என்று உத்திரவாதம் அளித்ததால், தேசிகன் அண்ணாவின் வேதாளத்தை ஒருநாள் நான் சுமக்க சம்மதித்தேன். (அண்ணாவுக்கு தெரியாமல் தான்.)

ஆனால் வேதாளம் தோளில் ஏறியதுமே, முருங்கைமரம் ஏறியதுதான் சோகமே. முருங்கைமரத்திலிருந்து நேராய் வீட்டிற்கு போகச்சொன்னது எனக்கு உண்மையிலேயே பிடிக்கவில்லை. அனாவசியமாய் தொல்லைகளை சுமந்துகொண்டு வீட்டிற்கு வந்தால் செருப்படியென்று, வீட்டில் ஏற்கனவே சொல்லியிருந்ததார்கள்.

அகன்ற பெரியவீதி, இருபுறமும் அழகழகாக தூங்குமூஞ்சி மரங்களும், தூங்காமல் பறந்துகொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சிகளும் வேதாளத்தை பார்த்து பயந்தன. வீட்டிற்கு வெளியில் அம்சமாய், குண்டுமல்லி பூத்து மணம்வீசிக் கொண்டிருந்தது, எத்தனை முறை சொன்னாலும், இந்த அக்காவிற்கு அறிவே இல்லை, சுத்தமாக வைத்திருக்காவிட்டால் தோட்டத்திற்குள் தேவையில்லாததெல்லாம் வந்துவிடுமென்று சொன்னால். நீயே தேவையில்லாததுதான் என்று பதில் வருகிறது.

முன்பக்கம் சாக்கடைகள் தூற்வாரப்பட்டு, சுத்தமாய் இருக்க. அதில் சிறுவர்கள் உட்கார்ந்து வி
ளையாடிக்கொண்டிருந்ததை பார்த்து சிரிப்புதான் வந்தது. நான் முன்பக்க கதவை திறந்துகொண்டு, உள்ளே நுழைந்தேன்.

அய்யோ மறந்துவிட்டேனே, அன்பரசு இருப்பானே, வேதாளத்தை பார்த்து அவன் பயந்துவிட்டால், ஒரு நிமிடம் யோசிப்பதற்குள், அன்பரசு கண்ணை மட்டும் உயர்த்தி பார்த்துவிட்டு உனக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என திரும்பி படுத்துக்கொண்டது, ஒருவேளை நேற்று அவனுடைய பிரட் பாக்கெட்டடை நான் சாப்பிட்டுவிட்ட கோபமாக இருக்கலாம்.

மெதுவாக அவன் கண்ணில் வேதாளம் பட்டுவிடாமல், உள்ளே நுழைந்தேன். இந்த அப்பா எப்பவுமே இப்படித்தான், ஒன்றிற்கு இரண்டு வண்டி வாங்கி ஓட்டிக்கொண்டிருப்பது கூட பரவாயில்லை, அதை வீட்டிற்கு முன்னாலா நிறுத்துவது, வாசலை மறைத்தபடி. கோபம் கோபமாய் வந்தது. பக்கவாட்டு சுவர்களில் நான் வரைந்திருந்த சில படங்களை பார்த்தபடி வேதாளம் மௌனமாய் இருந்தது. பரவாயில்லை.

உள்ளே நுழைந்ததும் மெதுவாக தலையை மட்டும் தூக்கி அலமாரியை எட்டிப்பார்த்தது, ஒரு ஓட்டைரேடியோ, சில ஐயப்பன் கேசட்டுக்களும், அம்மா தயிர் உறைஊற்றி வைத்திருந்த சொம்பும், ஒரு அடுக்கு முழுவதும். கீழிரண்டு அடுக்குகளில் தினமலர் பத்திரிக்கையும் வாரமலர்களும் அதிகமாயிருந்ததால், சிலசமயம் பூரான்களும் இன்னும் சில பெயர் தெரியா ஜந்துக்களும் வந்து பயமுறுத்தியிருக்கிறது.

மேல் சுவற்றில், சம்மந்தமேயில்லாமல், ஒரு குழந்தையும் காந்திதாத்தாவும் சிரித்துக்
கொண்டிருந்தார்கள். எனக்கு எப்பொழுதோ, யாரோ சொன்ன காந்தி ஜோக் ஞாபகம் வந்ததால்,
எனக்குள் சிரிக்க.

“என்ன சிரிப்பு?”

“இல்லை சும்மாத்தான். ஏதோ ஞாபகம்.”

“இவ்வளவு குப்பயாய், அழுக்காய், ஒட்டடையோட இருக்கே, சுத்தம் செய்றதேயில்லையா?”

“இல்லை, அம்மா சுத்தமா மொழுவி வைச்சா, துடைச்சிக்கிட்டு போயிரும்னு தான்
கொஞ்சம் அழுக்கா வச்சிருப்பாங்க. மற்றபடிக்கு நீ சொல்ற மாதிரியெல்லாம்
ரொம்பல்லாம் அழுக்காயில்லை, தெரிஞ்சிக்கோ”

“இல்லை உன் பதிலில் நான் திருப்தியாகவில்லை, நான் வேற ஒரு கேள்வி கேட்பேன், பதில்
சொல்லலைன்னா உன் தலை வெடிச்சிறும்.”

“முடியவே முடியாது, ஜாவாவில் எத்தனை கீவேர்டுன்னு ஈசியான கேள்வியே நீ கேட்டாலும், நான் யோசிச்சு தான் பதில் சொல்வேன் அதனால, நீ கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, தலை போற மேட்டர்லெல்லாம் நான் விளையாடவே மாட்டேன் தெரிஞ்சிக்கோ.”

“அதெல்லாம் முடியாது, நான் கேட்கத்தான் போறேன். நீ பதில் சொல்லித்தான் ஆகணும்.”

மனசு பதற தொடங்கியது, அய்யய்யோ இது என்ன கேள்வி கேட்கப்போகுதோ தெரியாதே, இன்டர்வியூலெல்லாமே நான் தப்பு தப்பா பதில் சொல்வேனே. அய்யோ தலைவெடிக்கப்போகுதேன்னு நினைக்கிறப்போ. யாரோ தீண்டுவது போலிருந்தது, வேதாளத்தாலே கேள்விதானே கேட்க முடியும். இது எப்பிடி தொடுதுன்னு பார்த்தால்.

நான் ஒரு மேஜையில் படித்திருந்தேன், சக்திவாய்ந்த ஒரு விளக்கு என் முகத்திற்கெதிரா, பி
ரகாசமாய். யார் யாரோ என் பக்கத்தில் நிற்கிறார்கள். அய்யோ அவர்களுக்கு தலையேயில்லை, மொத்தமா உருண்டையா, இருக்கு, அதுங்கலெல்லாம் குதித்து குதித்து, நகர்வது தெரிந்தது. அந்த இடத்தை சுற்றப்பார்க்கிறேன். ஒரே வெள்ளையா இருக்கு, என்னையும் அந்த உருவங்களையும் தவிர யாருமேயில்லை. கீழே குனிந்து பார்த்தால், அய்யோ நானும் அதுங்களைமாதிரியேதான் இருக்கேன், எனக்கும் கால், கை, முகம்னு எதுவுமேயில்லாமல், உருளையாய்.

அந்த உருவங்களிடமிருந்து என்னவோ சத்தம் வருகிறது, நான் கூர்ந்து கேட்கிறேன். அவர்கள்
பேசுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

“இதெல்லாம் தேவையில்லாத ஆராய்ச்சி, இந்த வகையான ஜந்துக்கள் அழிந்துருச்சு, இந்த மாதிரி பாறையில் ஒட்டிக்கிட்டிருந்த ரத்ததுளியை வைத்து, நம் ஆட்களஇடம் ஆராய்வதை அடியோடி நிறுத்துவிடுங்கள்.”

நான் மயக்கமாகிக் கொண்டிருந்தேன்.

One thought on “தேசிகன் அண்ணாவின் வேதாளமும் நானும்

  1. நல்லா இருக்கு,கடைசியில் தான் கொஞ்சம் சொதப்பிட்ட மாதிரி இருக்கு,மற்றபடி நன்று..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s